புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
இரா. மங்களபாண்டியன்
மாவட்ட தலைவர்
பா. செல்வநாயகம்
மாவட்ட துணைத் தலைவர்
தா.ஜான்பாஸ்டின் டல்லஸ்
மாவட்ட துணைத் தலைவர்
ம. சுகந்தி
மாவட்ட செயலாளர்
எஸ்.பாபு
மாவட்ட இணைச் செயலாளர்
ஏ.காஜாமைதீன்
மாவட்ட இணைச் செயலாளர்
பெ.வீரபத்திரபோஸ்
மாவட்ட பொருளாளர்
எஸ்.சரவணன்
மாவட்ட துணைத் தலைவர்
எஸ். ஜெயராமன்
மாவட்ட துணைத் தலைவர்
ஜே.டேனியல் பிரேம்குமார்
மாவட்ட இணைச் செயலாளர்
எம்.நாட்ராயன்
மாவட்ட இணைச் செயலாளர்
க.பெரியசாமி
மத்திய செயற்குழு உறுப்பினர்
அ.சந்தனமேரிகீதா
மாவட்ட கூட்டுக்குழு உறுப்பினர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
இயக்கத் தோற்றம்
உசேனி
இயக்கத் தோற்றம்
எப். எம். குத்புதீன்
இரா. ஆ. கூடலிங்கம்

அண்ணா மாவட்டம் (அறிமுகம்)
    தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.
    தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.
    ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று. எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது. மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.
    மக்களுக்காகவும் மொழிக்காகவும் பாடுப்பட்ட நல்லோரை நாள்தோறும் நினைவு கூர்வது நம்முடைய கடமை. அந்த வகையில் சமுதாயத் தொண்டு ஆற்றத் தாய் மொழியைக் காத்து நமக்கு வழிகாட்டிய தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதுதான் நமது பண்பாடு என்ற உணர்வு கொண்டு, தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்றம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழை ஆட்சி படத்தில் ஏற்றிய பெருமை அண்ணாவை சாரும். "அண்ணா ஒரு சாகப்தம்" என்று அனைத்துதர மக்களாலும் அனைத்துக் கட்சிகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவர்.
    அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சியை புகுத்துவதற்கு காரணமாக இருந்தவர், மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெறுமை பெற்ற மாவட்டம் என்றதாகும், கடைச்சங்கத்தைப் போற்றி வளர்த்த உக்கிரப்பெறும் வழுதிப்பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாலும் அரசு இலக்கினை இதுவரை "சத்தியமேவ ஜெயதே" என்ற வடமொழியில் இருந்ததற்கு ஈடாக "வாய்மே வெல்லும்" என்று தமிழாக்கம் செய்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உணர்வை மக்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்திய தமிழக்கத்தின் தலைப் புதல்வனுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நிலைக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் ஆகிய வட்டங்களை ஒன்று சேர்த்து புரட்சித் தலைவர் அவர்கள்புதிய மாவட்டத்தை தோற்றுவித்து அதற்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டி 1985ம் வருடம் செப்டம்பர் திங்கள் 15ம் நாள் மக்களை மகிழ்வித்தார். இந்த நாள் அண்ணா மாவட்ட வரலாற்றின் நன்னாள், ஒரு பொன்னாள்.
     இம்மாவட்டம் 1989ல் காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் 1991ல் அண்ணா மாவட்டம் என்று பெயரைத் தக்க வைத்துக் கொண்டது.

நமது சங்கம்பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.

Vijayalskshmi IAS tg vinay hariharan