புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001

இயக்க நடவடிக்கைகள்

கடந்த காலபணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து இன்றுள்ள நிலைமைகளை துல்லியமாக கணித்தால் மட்டுமே எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்திட முடியும் என்ற நம்பிக்கையோடு 10.3.2003ம் தேதிக்குப்பின் நடைபெற்ற இயக்க நடவடிக்கைகளை உங்களின் பரிசீலனைக்காக கீழ்க்காணும் விவரப்படி சமர்ப்பிக்கிறோம்.

10.3.2003 பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் திரு.ஏ.வி.செல்வராஜ் அவர்கள் நம்முன் உள்ள சவால் என்ற தலைப்பில் எழுச்சியுறையாற்றினார்.

19.3.2003 'ஜாக்டோ ஜியோ" சார்பில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்கக்கோரி 22.3.2003ம் தேதி நடைபெறவிருந்த பேரணியில் நமது ஊளியர்களை பங்கேற்கஸ் செய்யும் விதத்தில் நோட்டீஸ் அச்சிட்டு வட்டக்கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 21.3.2003ல் தலைமையிடத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

22.3.2003 திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்னிருந்து புறப்பட்ட ஜாக்டோஜியோ பேரணியில் நமது ஊளியர்கள் வட்டவாரியாக பெருமளவில் பங்கேற்றனர்.

29.3.2003 திருவண்ணாமலை நசைபெற்ற மத்டிய செயற்குழு கூட்டத்திற்கு வேன் மூலம் 15 பேர் சென்று கலந்து கொள்ளப்பட்டது.

31.3.2003 மத்திய செயற்குழுவின் முடிவினை வகையில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு , ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்றனர்.

2.4.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

4.4.2003 ஜாக்டே ஜியோ சார்பில் மா.ஆ.த. அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், நத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் வருவாய்த்துறை ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

7.4.2003 நிலக்கோட்டை வட்டக்கிளையில் 10.4.2003 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கஸ் செய்யும் முகத்தான் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

8.4.2003 பழனி, கொடைக்கானல் வட்டங்களில் கூட்டங்கள் நடத்தி 10.4.2003 தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்குமாறு பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

10.4.2003 ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நமது மாவட்டத்தில் பெருமளவில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

18.4.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

21.4.2003 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல்திருட்டை தடுக்கச்சென்ற வருவாய் ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் 20.4.2003ம் தேதி சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தலைமையிடத்திலும் அனைத்து வட்டக்கிளைகளிலும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

5.5.2003 பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க கோரி 8.5.2003ல் நடைபெற இருந்த மறியல் போராட்டத்தில் பங்குபெறச்செய்யும் முகத்தான் பழனி, ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் நிலக்கோட்டை வட்டங்களில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

6.5.2003 திண்டுக்கல் ம.ஆ.த.அலுவலகம் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் 8.5.2003ம் தேதி மறியல் தொடர்ப்பாக ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

8.5.2003 பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத்தலைநகரில் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பெருவாரியான ஊழியர்கள் பங்கேற்கப்பட்டது.

14.5.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. v 16.5.2003 அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன முடிவிற்கிணங்கவும் மாநில மையம் எடுத்த முடிவிற்கிணங்கவும், 21.5.2003ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்குபெறவேண்டிய அவசியம் குறித்து நிலக்கோட்டை மற்றும் நத்தம் வட்டங்களில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

19.5.2003 பழனி, ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் வட்டகிளைகளிலும் திண்டுக்கல் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் 21.5.2003 தேதி மறியல் தொடர்பாக மாநிலத்துணை தலைவர் திரு.ஏ.வி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் ஊழியர் சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

20.5.2003 கொடைக்கானல் வட்டத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

21.5.2003 அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்துறையினர் பெருவாரியாக பங்கேற்றனர்.

11.6.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

16.6.2003 தமிழ்நாடு வருவாய்துறை மற்றும் நில அளவைத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மா.ஆ.த.அலுவலகம் முன்பாகவும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. 21.6.2003 தமிழ்நாடு வருவாய்துறை மற்றும் நில அளவைத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற வேலை நிறுத்த மாநாட்டில் முன்னனி ஊழியர்களுடன் பங்கேற்கப்பட்டது.

24.6.2003 விரிவடைந்த செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

25.6.2003 தமிழ்நாடு வருவாய்துறை மற்றும் நில அளவைத்துறை சங்கங்களின் மாவட்ட அளவிலான கூட்டு நடவடிக்கைக்கூட்டம் நடத்தி வேலை நிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

26.6.2003 பழனி வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் வட்டங்களில் 2.7.2003 முதல் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் ஊழியர்களை ஒட்டுமொத்தமாக பங்கேற்கச் செய்யும் விதத்தில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

27.6.2003 நிலக்கோட்டை , நத்தம் வட்டக்கிளையில் 2.7.2003 முதல் நடைபெறவுள்ள வேலை நிறுத்ததில் ஊழியர் சந்திப்பு இயக்கம் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

28.6.2003 மாவட்ட தலைநகரில் நடைபெற்ற பொது மாநாட்டில் பெறுவாரியான ஊழியர்களுடன் பங்கேற்கப்பட்டது.

29.6.2003 தலைமையிடத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

30.6.2003 தலைமையிடத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

2.7.2003 முதல் 30.7.2003 வரை வேலை நிறுத்தம்

28.7.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

6.9.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

13.9.2003 திண்டுக்கல் ------- கம்யூனிட்டி ஹாலில் மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

5.10.2003 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

12.10.2003 மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

5.12.2003 பழிவாங்கும் வகையில் நமது ஊழியர்கள் வட்டம் விட்டு வட்டம், பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள விவரத்தை மா.ஆ.த.மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து விளக்கி மீண்டும் ஏற்கனவே அவரவர் பணிபுரிந்த வட்டங்களிக்கு மாறுதல் செய்து தரும்படி கோரப்பட்டுள்ள விபரத்தை பழனி வட்டக்கிளையில் தொகுத்து மாநில பொதுசெயலாளர் திரு.கே.ராஜ்குமார், ஊழியர்களிடையே எழுச்சி உரையாற்றினார். மேற்படி கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், மாநிலஸ் செயலர், போராட்டக்குழுத்தலைவர் மற்றும் முன்னனி ஊழியர்கள் ஒரு வேன் மூலம் சென்று வந்தனர்.

19.1.2004 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

23.1.2004 பணி மறுக்கப்பட்டவர்களை சந்தித்திடவும், மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவும், மண்டல அளவில் மதுரை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளும் முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர்.

21.3.2004 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோட்டில் நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்னணி ஊழியர்களுடன் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

27.3.2004 ஈரோட்டில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்னணி ஊழியர்களுடன் கலந்து கொள்ளப்பட்டது.

1.5.2004 திருச்சியில் மாநிலத் தலைவர் திரு.எஸ்.சுடலையாண்டி அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்கப்பட்டது.

5.5.2004 தவறாமல் வாக்களியுங்கள் என்ற தலைப்பில் தினமணி நாளிதழில் வெளியான இந்திய ஜனாதிபதி அவர்களின் உரையுடன் கூடிய செய்தியை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பில் துண்டுபிரசுரமாக வெளியிட்டு நமது ஊழியர்களை நாடாளுமன்றத்தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு கோரப்பட்டது.

29.5.2004 மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

3.6.2004 ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க கோரியும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் போக்கிலும் நல்லதொரு மாற்றம் ஏற்படுத்தக் கோரியும் உணவு இடைவேளையில் மாவட்ட ஆட்சித்த்லைவர் அலுவலகம் முன்பாக மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

4.6.2004 அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

5.6.2004 முன்னாள் மாநிலத்தலைவர் திரு. எஸ். சுடலையாண்டி அவர்க்ளுக்கு பாராட்டு விழாவும், பணி மறுக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்ட வருவாய்துறை ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும் கொடைக்கானல் பாக்கியதீபம் மீட்டிங் ஹாலில் நடத்தப்பட்டது.

14.6.2004 மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

3.7.2004 விருதுநகரில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்னணி ஊழியர்களுடன் பங்கேற்கப்பட்டது.

3.8.2004 தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் 41-வது அமைப்பு தினத்தை குறிக்கும் வகையில் பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக, அகற்றப்பட்ட நமது சங்கக்கொடியினை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதே இடத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் திரு.இரா.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். வட்டக்கிளைகள் அனைத்திலும் சங்கக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. கொடியேற்றி நிகழ்ச்சியில் முன்னணி ஊழியர்களும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

11.9.2004 வேடசந்தூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலஸ் செயலர் திரு.-----. கண்ணன் முன்னாள் மாவட்டத் தலைவர்.இரா.ஆறுமுகம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

31.10.2004 மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொது மாநாடு மற்றும் பேரணியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

30.11.2004 மணல் கடத்தலை தடுத்த தாங்குனேரி வட்டாட்சியர் நடராஜன் வருவாய் ஆய்வர் கண்ணன் ஆகியோர் மீது லாரியை ஏற்றி கொலைசெய்ய முயற்சி செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

5.12.2004 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

7.12.2004 வேலை நிறுத்த உரிமையினை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கிடக்கோரி மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளின் சார்பில் புதுடெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க பேரவையில் வருவாய்த்துறையிலிருந்து. கொடைக்கானல் வட்டத்தை சேர்ந்த திரு.ரவிக்குமார், பழனி வட்டத்தை திரு.மங்கள பாண்டியன் பங்கேற்றனர்.

14.12.2004 மணல் கடத்தலை தடுக்கச்சென்ற காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வெங்கடேசன் மீது லாரியை ஏற்றி கொலை செய்த்தை கண்டித்தும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாகவும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

27.12.2004 சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. ஊழியர்கள் பெறுமளவில் பங்கேற்றனர்.

08.01.2005 ஈரோட்டில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

12.01.2005 தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வழங்க அளிக்கப்பட்ட சான்றின் அடிப்படையில் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது ஏற்ப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாதிப்பிற்குள்ளான ஊழியர்கள் அடங்கிய சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது.

04.02.2005 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

10.02.2005 விரிவடைந்த செயற்குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.

22.02.2005 பழனி வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

23.02.2005 கொடைக்கானல் வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

25.02.2005 ஒட்டன்சத்திரம் வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

26.02.2005 வேடசந்தூர் வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

1.03.2005 நிலக்கோட்டை வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

2.03.2005 நத்தம் வட்டக்கிளை மாநாட்டில் பங்கேற்கப்பட்டது.

5.3.2005 பொள்ளாச்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

20.03.2005 பொள்ளாச்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவிற்கிணங்க பணி நியமனத்தை தடைசெய்யும் அரசு ஆணை எண் 212(பணியாளர்) (ம) நிர்வாக சீர்திருத்தத்துறையிலிருந்து வருவாய்த்துறைக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாகவும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திண்டுக்கல் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத்தலைவர் திரு.இரா.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

26.03.2005 மாவட்ட நிர்வாகிகள் வட்டக்கிளைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களை உள்ளடக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் திரு. என்.கணேசன், முன்னாள் மாவட்டத்தலைவர், திரு.இரா.ஆறுமுகம், மாநிலச்செயலாளர் திரு.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

12.04.2005 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் முன்னனி ஊழியர் அட்ங்கிய கூட்டம் நடைபெற்றது. வரவேற்புக்குழுத்தலைவராக முன்னாள் மாவட்டத் தலைவர் திரு.இரா.ஆறுமுகம் அவர்களும், மாநிலச்செயலர் திரு.ச.கண்ணன் மாவட்ட நிர்வாகிகள் சகாயராஜா, ஜி.நாராயணன், திரு.தாஜீதின் ஆகியோர் வரவேற்புக்குழு உறுப்பினர்களாக இருந்து மாநாட்டினை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவாற்றப்பட்டது.

23.04.2005 30.4.2005 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநிலச்செயலர் அடங்கிய கூட்டம் வரவேற்புக்குழுத்தலைவர் திரு.இரா.ஆறுமுகம் தலைமையில் நடத்தப்பட்டது.

நமது சங்கம்