புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001

வரலாற்றுச்சிறப்புமிக்க வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக ஜாக்டோ -ஜியோ, கோட்டா -ஜியோ அமைப்புகள் மற்றும் தலைமைச்செயலக ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலுக்கிணங்க 02.07.2003 முதல் வேலைநிறுத்தம் துவங்கியது. நமது மாவட்டத்தில் 100 சதவீதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 02.07.2003 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அழைத்துப்பேசி பிரச்சனையினை தீர்க்க வேண்டிய அரசாங்கம் அதைச்செய்யாமல், காவல்துறையின் மூலம் துறை வாரி சங்கத்தலைவர்களையும், பொதுச்சங்கத்தலைவர்களையும், முன்னணி ஊழியர்களையும் இரவு முழுவதும் தனியாகவும், வீடுகளுக்குச்சென்றும் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

நமது மாவட்டத்தில் வருவாய்த்துறையைச்சேர்ந்த நால்வர் உட்பட கீழ்க்காணும் விவரப்படி மொத்தம் 12 தோழர்கள் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1. K.ராஜேந்திரன் வருவாய்த்துறை
2. R.மங்களபாண்டியன் வருவாய்த்துறை
3. T.K.நகேந்திரன் வருவாய்த்துறை
4. N.சின்னச்சாமி வருவாய்த்துறை
5. S.M.ஜெயசீலன் நெடுஞ்சாலைத்துறை
6. S.அருணாசலம் நெடுஞ்சாலைத்துறை
7. N.செல்வகணபதி பொதுச்சுகாதாரம்
8. பி.எம்.ராமு சத்துணவு
9. N.சக்திவேல் சத்துணவு

கீழ்க்காணும் நமது ஊழியர்களை நள்ளிரவில் வீட்டுக்கதவைத்தட்டி போலீஸ் அழைத்துச்சென்று பின்னர் அதிகாலையில் விடுவித்தது.


வேடசந்தூர் வட்டம்

1. திரு. ஆர்.ஆறுமுகம் உதவியாளர்
2. திரு. உதயகுமார் துணைவட்டாட்சியர்
3. திரு. மணிவண்ணன் சுருக்கெழுத்தர்
4. திரு. சந்தானம் தட்டச்சர்
5. திரு. சண்முகவேல் உதவியாளர்
6. திரு. சுயம்பையா வாட்டாட்சியர்
7. திரு. ஜோசப் இளநிலை உதவியாளர்
8. திரு. சிவலிங்கம் பதிவுரு எழுத்தர்
9. திரு. எஸ்.ஆறுமுகம் தொலையச்சு இயக்குபவர்
10. திரு. கோவிந்தன் அலுவலக உதவியாளர்
11. எம்.எஸ்.தனபால் வருவாய் ஆய்வர்
12. திரு. அந்தோணி அலுவலக உதவியாளர்
13. திரு. பாண்டியராஜன் வருவாய் ஆய்வர்

வேடசந்தூர் வட்டம்

1. சவடமுத்து இளநிலை உதவியாளர்
2. இடும்பன் இளநிலை உதவியாளர்
3. சுகுமார் இளநிலை உதவியாளர்
4. வெங்கடேசன் இளநிலை உதவியாளர்

கொடைக்கானல் வட்டம்
1.திரு.ரமேஷ், உதவியாளர்

வீரஞ்செறிந்த வேலை நிறுத்தத்தில் கைதாகி சிறையேகிய மேற்சொன்ன தோழர்களுக்கு மாவட்ட மையத்தின் சார்பில் வீரவணக்கங்களைய்யும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

கைது செய்யப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று நிலைமையை உணர்த்தி நலம் விசாரிக்கப்பட்டது.

போராட்டக்குழுத்தலைவர் திரு. இரா.ஆறுமுகம் வேடசந்தூர் வட்டப் பொறுப்பில் இருந்த போதிலும் திரு. கருப்புச்சாமி கொடைக்கானல் வட்டப்பொறுப்பில் இருந்த போதிலும் தங்களது வட்ட பொறுப்புகளைத் துறந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது பாராட்டத்தக்கதாக இருந்தது.

வேலை நிறுத்தப் போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பொறுக்காத அரசு காவல்துறையினரை நமது ஊழியர்களின் குடியிருப்புக்கு அனுப்பி தேடுதல் வேட்டை நடத்தியது. இது நமது ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைப் போக்கும் முகத்தான், மாவட்ட நிர்வாகிகளும் முன்னணி ஊழியர்களை தைரியப்படுத்தினர். இஸ் சுழலில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.சுடலைப்பாண்டி அவர்கள் நமது மாவட்டத்திற்கு வருகைதந்த நிலையில் அவரைப் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு ஏற்பட்டது. அவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தக்க வைத்து பாதுகாத்தோம். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து மாநிலத்தலைவர் அவர்களால் பேட்டி கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தலைவர் உரையாற்றினார்.

ஒன்றுப்பட்ட பொராட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில், டெஸ்மா சட்டம் செல்லுமா? செல்லாதா? என்ற வினாவுடன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைமையிடத்து செயலாளர் திரு.தண்டபாணி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் பொது அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுவதாக நீதிபதி அளித்த உறுதிமொழியை ஏற்று வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தமிழக அரசு சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திட வேண்டிமென நீதிபதி என்.டி.தினகரன் கூறியதை ஏற்காமல் சில மணி நேரத்திலேயே தமிழக அரசு உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சுக்கு மேல்முறையீடு செய்தது. 23.04.2003 ஆம் தேதி முதல் செல்லத்தக்க வகையில் முன் தேதியிட்டு டெஸ்மா என்ற அவசரச்சட்டத்தை 4-7-2003 ஆம் தேதி பிறப்பித்து வேலை நிறுத்தம் செய்த 1.72 இலச்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்தது.

11.07.2003 ந் தேதி தலைமை நீதிபதி சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து வேலை நிறுத்தம் சம்மந்தமாக தீர்வு காண்பதற்கு தனது அதிகார வரம்பிற்குள் சட்டத்தில் இடமில்லை என்பதால் நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு தீர்ப்புக்கூறினார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் CITU வழக்கு தொடர்ந்தை தொடர்ந்து, LPF, AITUC, ஆகிய தொழிற்சங்கங்கள் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் விசாரணை முடிந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தவிர அனைவரையும் பணியில் சேர்க்க வேண்டுமெனவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்திட சட்டப்படியோ அல்லது தார்மீக நீதியிலோ உரிமை இல்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் படி 25-7-2003 தேதியிலிருந்து1, 55,865 பேர் பணியேற்றனர். ஆனால் 14,125 அரசு ஊழியர்கள் டேஸ்மா சரத்துக்கள் 4,5,6, கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால் பணியில் சேர இயலவில்ல. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து, இறுதியாக 6072 ஊழியர்களைத் தவிர மீதமுள்ள 8063 ஊழியர்கள் 11-08-2003 பணியில் சேர்ந்தார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை கலாம் தாழ்த்தி நியமித்தது. மூன்று நீதிபதிகளும் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து 31.12.2003 ஆம் தேதியின்றி 999 பேரைத் தவிர மீதமுள்ள 5073 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் ஒருசில ஊழியர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுக்கள் வரை ஊதிய உயர்வு நிறுத்தம், பதவி இறக்கம், கட்டாய ஊய்வு போன்ற தண்டணைகள் வழங்கப்பட்டன. இதில் நமது துறையைஸ் சேர்ந்த திரு.மங்களபாண்டியன் திரு.டி.கே.நாகேந்திரன் ஆகியோர் அடங்குவர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட 999 ஊழியர்களில் நமது மாவட்டத்தில் நமதுதுறையை சேர்ம்ஹ்த சகோதரர்கள் திரு.கே.ராஜேந்திரன், திரு.என்.சின்னச்சாமி ஆகிய இருவரும் அடங்குவர். வேலை நிறுத்த படிப்பிணைகள் இச்சூழ்நிலையில் 14-வது பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அரசு ஊழியர் சங்கம் டெஸ்மா செல்லாதது எனவும், எஞ்சியுள்ள 999 ஊழியர்களை பணியில் சேர்த்திட வேண்டுமெனவும் வழக்கு தொடுத்தது. தமிழக அரசு சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைவரையும் பணியில் சேர தொடுத்தது. தமிழக அரசு சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைவரையும் பணியில் சேர அனுமதித்தனர். 999 ஊழியர்கள் 11.2.2004 ல் 4 ஆண்டுகள் ஊதிய நிறுத்தத் தண்டணையுடன் பணியேற்றினர். இதில் திரு.ராஜேந்திரன் அவர்களும், திரு.சின்னச்சாமி அவர்களும் அடங்குவர்.

வேலை நிறுத்த படிப்பிணைகள்

1.வேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் இருந்தன.

2.நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளும் அதன் தீர்ப்புகளும் நமக்கு படிப்பினையாக அமைந்தன.

பாதுகாப்பு நிதி

2003 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய்த்துறையை சேர்ந்த திரு.டி.கே.நாகேந்திரன், திரு.கே.ராஜேந்திரன் திரு.மங்களபாண்டியன், திரு.சின்னச்சாமி ஆகியோருக்கு நிதி உதவி அளித்திட மாவட்ட மையம் முடிவு செய்ததை மனமுவந்து ஏற்றுக்கொண்டு நமது ஊழியர்கள் மாதா மாதம் தொய்வின்றி நிதியுதவி செய்ததை மாவட்ட மையம் நெஞ்சார பாராட்டுகிறது..

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்

வேலை நிறுத்தத்திற்குப் பின்பாக, நமது ஊழியர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள், வட்டங்கள் விட்டு வட்டம். கோட்டம், 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டனர்.

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட இரண்டு வட்டாட்சியர்கள் வட்ட பொறுப்பிலிருந்து பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு ஊழியர்கள் தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு முரணாக அற்ப் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.பழிவாங்கும் நோக்கில் பணிமாறுதல் செய்யப்பட்ட நமது ஊழியர்களை மீண்டும் அவரவர் சொந்த வட்டங்களில் பணிநியமனம் செய்யுமாறு கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மாவட்ட மையம் பலமுறை முறையீடு செய்தும் அதன் மீது உரிய ஆணைகள் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக நமது மாநில செயலர் திரு.கண்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே இப்பிரச்சனைகளில் மாநில மையம் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டதிற்கிணங்க நமது மதிப்பிற்குரிய மாநில பொதுச்செயலாளர் திரு. கே.ராஜ்குமார். அவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோரை சந்தித்து நமது மாவட்ட உள்ள் நமது ஊழியர்கலின் மாறுதல் தொடர்பாக உடனடியாக உரிய ஆணை பிறப்பிக்க கேட்டுக்கொண்டார்கள். ஆனாலும் நமது பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருந்து. புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பின்பு மாநிலச்செயலரும், மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியர் அவர்களை அணுகி, பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட மாறுதல்களை மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்கள் அவரவர் சொந்த வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டனர். வட்டப்பொறுப்பிலிருந்து மாறுதல் செய்யப்பட்ட இரணடு வட்டாட்சியர்களுக்கு மீண்டும் வட்டப்பணி வழங்கப்பட்டது.இன்னும் சரிசெய்யப்பட வேண்டிய இனங்களும் உள்ளது. அவற்றை சரி செய்ய மாவட்ட மையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

நமது சங்கம்