புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் பெயர்
வ.எண் கலெக்டர்கள் பெயர்         இருந்து         வரை
1 திரு. M.மாதவன் நம்பியார், இ.ஆ.ப. 15.09.1985 07.05.1987
2 திரு. மிருத்யுஞ்சய் சாரங்கி, இ.ஆ.ப. 08.05.1987 02.05.1989
3 திரு. சக்திகாந்ததாஸ், இ.ஆ.ப. 03.05.1989` 24.07.1991
4 திரு. பிரித்திவிராஜ்லங்தாசா, இ.ஆ.ப. 25.07.1991 26.02.1992
5 திரு. ரமேஷ்ராம் மிஸ்ரா, இ.ஆ.ப. 27.02.1992 02.01.1994
6 திரு. T.பிச்சாண்டி, இ.ஆ.ப. 31.01.1994 02.06.1996
7 திரு. C.சந்திர மௌலி, இ.ஆ.ப. 03.06.1996 18.05.1996
8 திரு. விக்ரம்கபூர், இ.ஆ.ப. 19.05.1997 09.05.1998
9 திரு. A.S,ஜீவரத்தினம், இ.ஆ.ப. 10.05.1998 01.05.2000
10 திரு. ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப. 01.05.2000 11.06.2001
11 திரு. R.தியாகராஜன், இ.ஆ.ப. 11.06.2001 25.03.2002
12 திரு. Dr.P.செந்தில்குமார், இ.ஆ.ப. 28.03.2002 03.06.2004
13 திரு. S.முருகையா, இ.ஆ.ப. 04.06.2004 23.05.2006
14 திருமதி. R.வாசுகி, இ.ஆ.ப. 24.05.2006 08.09.2007
15 திருமதி. P.அமுதா, இ.ஆ.ப. 01.10.07 05.11.2007
16 திருமதி. R.வாசுகி, இ.ஆ.ப. 07.11.2007 21.02.2009
17 திரு. R.கிர்லோஷ்குமார், இ.ஆ.ப. 21.02.2009 02.07.2009
18 திரு. M.வள்ளலார், இ.ஆ.ப. 02.07.2009 05.06.2011
19 திரு. K.நாகராஜன், இ.ஆ.ப. 06.06.2011 29.02.2012
20 திரு. N.வெங்கடாசலம், இ.ஆ.ப. 29.02.2012 28.12.2014
21 திரு. T.N.ஹரிஹரன், இ.ஆ.ப. 28.12.2014

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.