வட்டக்கிளைகள், மாவட்டமையம்/மாநில மையம் அறிவுறுத்தலுக்கிணங்க இயக்க நடவடிக்கைகளை தொய்வின்றி நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மாநில மையத்தின் முடிவிற்கிணங்கவும் மாவட்ட மையத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும் கீழ்க்காணும் விவரப்படி வட்டக்கிளை மாநாடுகளை நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (பட்டியல் தனியே இணைக்கப்பட்டுள்ளது).
1. | பழனி | 22.02.2005 |
2. | கொடைக்கானல் | 23.02.2005 |
3. | ஒட்டன்சத்திரம் | 25.02.2005 |
4. | வேடசந்தூர் | 26.02.2005 |
5. | நிலக்கோட்டை | 01.03.2005 |
6. | நத்தம் | 03.03.2005 |
பழனி வட்டக்கிளை மாநாட்டில் மாநிலத்தலைவர் திரு. ஏ.வி.செல்வராஜ் அவர்களும். நிலக்கோட்டை வட்டக்கிளை மாநாட்டில் மாநில பொதுசெயலாளர் திரு.கே.ராஜ்குமார் அவர்களும், வேடசந்தூர் வட்ட கிளை மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தலைவர் திரு. எம்.அண்ணாத்துரை
அவர்களும், நத்தம் வட்டக்கிளை மாநாட்டில் மதுரை மாவட்டத்தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், நத்தம் வட்டக்கிளை மாநாட்டில் பேராசிரியர். ஆர்.மனோகரன் அவர்களும், ஐபெக்டோ உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், அனைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் மாநில செயலர் திரு.S.கண்ணன் அவர்களும், பழனி நீங்கலாக அனைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் முன்னாள் மாவட்டத்தலைவர் இரா.ஆறுமுகம் அவர்களும், அமைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் தமிழ்நாடு ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளும் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
வட்டகிளை மாநாடுகள் , சங்க செயல்பாடுகளில் உறுப்பினர்களுக்கு புது எழிச்சியை ஏற்படுத்தியுள்ளது என நம்புகிறோம். செய்த வேலைகளை மாவட்ட மையத்திற்கும் மாநில மையத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவிப்பதில் (கடித போக்குவரத்தில்) தொய்வு உள்ளது என்பதையும் இதுஎதிர்காலத்தில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.