புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

10.3.2003 க்குப்பின் கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயற்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம்
02-03-2003 07-04-2003 10-03-2003
18-04-2003 18-04-2003 14-06-2004
14-05-2003 24-06-2003 (வி.செ)  
11-06-2003 12-01-2003  
28-07-2003 29-05-2003  
06-09-2003 10-02-2005 (வி.செ)  
05-10-2003    
19-01-2004    
21-03-2004    
06-07-2004    
11-09-2004    
05-12-2004    
04-02-2005    

மேற்சொன்ன கூட்டங்களில் ஊழியர் பிரச்சனைகள், இயக்கப்பணிகளை திட்டமிடுதல், மாநில மையத்தின் முடிவுகளை அமுல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளான ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் மூறையீடுகள் அளித்து பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்கிறோம். இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 24-06-2003ம் தேதி நடைபெற்ற விரிவடைந்த செயற்குழுவில் போராட்டக்குழுத்தலைவராக திரு. இரா.ஆறுமுகம் அவர்களையும், நிழல்குழுத்தலைவராக திரு. எஸ்.சுகுமார் அவர்களையும் தேர்ந்தெடுத்து பொதுவேலை நிறுத்தத்தை பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்டது. வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் கைதாகி சிறை சென்று பணியில் சேராத நமது உறுப்பினர்கள் திரு.கே.ராஜேந்திரன், திரு. டி.கே.நகேந்திரன், திரு. மங்களபாண்டியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு.சின்னச்சாமி ஆகியோருக்கு நமது உறுப்பினர்கள் மாதந்தோறும் நிதியுதவி வழங்கி அவர்களது நிகர சம்பளத்தை பணியில் சேரும்வரை வழங்குவது என 28-7-2003ல் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. சங்கத்திற்கு சவால்களை நின்றவைகள், அவைகளைக் கையாண்ட விதம், நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் இவைகளை பரிசீலனை செய்தால் எதிர்கால சங்கப்பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.