புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
மூன்றாவது மாவட்ட மாநாடு

நிகழ்ச்சி நிரல்
நாள் 31.10.1992, சனிக்கிழமை
இடம் சகாயமாதா மக்கள் மன்றம், திண்டுக்கல்.
நேரம் காலை 9.00 மணி

பேரணி
நேரம் காலை 9.00 மணி
புறப்படும் இடம் பெரியார் சிலை அருகில், திண்டுக்கல்.
தலைமை திரு.R.குணசேகரன், தலைவர், வரவேற்புக்குழு
துவக்கி வைப்பவர் திரு. கே.முகமது ஹனீபா, மாவட்ட துணைத் தலைவர்.

கொடியேற்றுதல்
நேரம் காலை 9.00 மணி
இடம் மாநாடு அரங்கம்
கொடி ஏற்றுபவர் திரு.R.A. கூடலிங்கம், முன்னாள் மாநிலத் தலைவர்.

தியாகிகளுக்கு அஞ்சலி

மாநாடு - பொது அரங்கம்
தலைமை திரு. எஸ்.கண்ணன் மாவட்ட தலைவர்
வரவேற்புரை திரு.N.கணேசன் மாவட்ட துணைத்தலைவர்
தலைமையுரை திரு.எஸ்.கண்ணன் மாவட்ட தலைவர்
செயலர் அறிக்கை திரு.R.ஆறுமுகம் மாவட்டச்செயலர்
வரவு-செலவு அறிக்கை திரு.M.தாஜீதீன் மாவட்ட பொருளாளர்
செயலர் அறிக்கை மீது விவாதம் பிரதிநிதிகள் பிரதிநிதிகள்
தொகுப்புரை திரு.R.ஆறுமுகம் மாவட்டச்செயலர்

காலம் சென்ற வருவாய்த்துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி வழங்கி வாழ்த்துரை
திரு.ரமேஷ்ராம் மிஸ்ரா இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர்

ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர்களுக்கு சங்க நிதி அளித்து
வாழ்த்துரை
திரு.த.துரைராஜ் மாவட்ட வருவாய் அலுவலர்

வாழ்த்துரை
திரு.சீனிவாசவரதன் கோட்டாட்சியர், திண்டுக்கல்.
திரு.ஞா.மலைக்கனி கோட்டாட்சியர். பழனி.

திரு.ம.நாராயணன் கலைக்குழுவினர் வழங்கும் தாசில்தார் - நாடகம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள்

பரத நாட்டியம்
திரு.க.நீதிராஜன்

வாழ்த்துரை
திரு.எப்.எம்.குத்புதின் முன்னாள் மாநில தலைவர்
திரு.எஸ்.சுடலையாண்டி மாநில துணைத் தலைவர்
திரு.வெ.இராஜகோபாலன் மாநில துணைத் தலைவர்
திரு.எல்.ஈஸ்வரானந்தம் மாநில பொதுச்செயலாளர்
திரு.R.ராஜகோபால் மாநில பிரச்சாரக்குழு
திரு.Mமுத்துமுகமது மாநில அமைப்புச்செயலர்
திரு.R.கோவிந்தசாமி மாநில பொருளாளர்
திரு.பா.தி.சம்பத் குமார் மாவட்டத் தலைவர், மதுரை.
திரு.ப.அருள்ஜோஸ் மாவட்டச்செயலர், திருச்சி
பேரா.R.மனோகரன் ஜே.க.டீ - அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு
திரு.S.பாலசுப்பிரமணியன் மாவட்டத்தலைவர் TNGEA
திரு.க.பேச்சிமுத்து மாவட்டத் தலைவர் TNGEA
திரு.N.கோட்டைராசு மாநிலத்தலைவர், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம்
திரு. K.இராமசாமி மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
திரு.M.சுருளிராஜ் மாநில செயலாளர், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம்
திரு. R.செல்லபாண்டி FNTO
திரு. R.S மணி SBI வங்கி ஊழியர் சங்கம்
திரு. முகம்மது மீரான் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம்
திரு. இ.முத்து விஜயன் தமிழ்நாடு கிராம கடை ஊழியர்கள் சங்கம்
திரு. எம்.எஸ்.சேதுராமன் தமிழ்நாடு அலுவலக உதவியாளர் சங்கம் மற்றும் தோழமைச்சங்கங்களின் நிர்வாகிகள்

தீர்மானங்கள் முன்மொழிதல்
திரு. A.M. சங்கரன் மாவட்ட இணைச்செயலர்
திரு. T.வீரணன் மாவட்ட பிரச்சாரச்செயலர்
திரு. R.ராஜாராம் தலைவர் நத்தம் கிளை
திரு. K.பழனி தலைவர், பழனி கிளை
திரு. C.T.பாலச்சந்திரன் தலைவர், வேடசந்தூர் கிளை
திரு. .S.இராஜன் தலைவர் கொடைக்கானல் கிளை
திரு. N.பாலசுப்பிரமணியன் தலைவர், நிலக்கோட்டை கிளை
திரு. T.K.நாகேந்திரன் மாவட்ட அமைப்புச்செயலர்

இவண் வரவேற்புக்குழு
திரு. R.குணசேகரன், தலைவர் திரு. S.கணபதி ராஜன் திரு. S.ஜெகதீசன்
திரு. K. புலமாடன் திரு. V.ராமசாமி திரு. N.வரதராஜன்
திரு. K.முருகன்

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.