புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
நடவடிக்கைகள்

மாறுதல் நியமனங்களில் உறுதியான பாரபட்சமற்ற நடவடிக்கைகள்

Asst.list, DT.list, Tahr.list, Survey.Trg, Bav.Sag.Trg, Police Trg, Magisterial Trg உரிய முறையீடுகள்

தோழமை இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்பு

ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

பயிற்சி வகுப்புகள் இசை நாட்டிய நிகழ்ச்சிகள்

கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றது.

மாநில மைய இணைப்புக் கட்டணம், கட்டிட பராமரிப்பு நிதி இதர நிலுவைகள் 1998 முடிய செலுத்தப்பட்டது.

கட்டிடத்தில் பூங்கா அமைப்பு

OAs seniority, OAs To Rc, OAs Trg

கட்டிடத்திற்கு மின் வசதி மராமத்துப் பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள்

கட்டிடக்கடன் அசலும் வட்டியுமாக ரூ.2.07 லட்சங்கள் அடைக்கப்பட்டது.

கிளைகளுக்கு தொடர்ந்து பயணம்

மூன்று மாவட்ட பேரவைகள்

11முறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

மாவட்ட கட்டிடத்திற்கு சுமார் ரூ.30,000 பெருமுள்ள 150 சேர்கள் நூலகத்திற்கு ஏராளமான புதிய புத்தகங்கள்

தொடர் ஊழியர் சந்திப்பு இயக்கங்கள்

மாவட்ட நிர்வாகத்துடன் உறுதியான பேச்சுவார்த்தை

5முறை மாவட்ட செயற்குழு கூட்டங்கள்

23 J.A (From Survey ) Regularisation முன் மொழிவுகள்

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.