புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001

நமது சங்கமும் நாமும்

நமது சங்கமும் நாமும்

கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 10-3-2003ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பொறுப்பேற்று நாளது வரை சங்கப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட தலைவர் : திரு.கு.முருகன்
மாவட்ட துணைத்தலைவர் : திரு.நா.வரதராஜன்
: திரு .எம்.பீட்டர்ராஜ்
: திரு.எஸ்.செல்வராஜ்
மாவட்ட செயலாளர்   திரு.இரா.செல்வராஜ்
மாவட்ட இணைசெயலாளர் : திரு.ஆ.அம்மாவாசை
: கே.ராஜேந்திரன்
: திரு.பி.சுந்தரபாண்டி
மாவட்டப்பொருளாளர் : திரு.எஸ்.இராஜகோபால்

நமது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இதுவரையில்பெற்றுதந்த - அடைந்த -பல -மிகப்பல - நூற்றுக்கணக்கான சலுகைகளில் - சாதனைகளில் மிக முக்கியமான சிலவற்றை மட்டுமே கீழே பட்டியலிட்டுள்ளோம். படித்து பாருங்கள். வருவாய்த்துறையில் தங்களின் பணிகாலத்தில் நீங்கள் பெற்றிட்ட முக்கிய பயங்கள்,

அ.பதவி உயர்வு
ஆ. பணிபாதுகாப்பு போன்ற ஏதாவது ஒன்றை இப்பட்டியலில் உள்ள சங்க சாதனைகளினாலா? நெஞ்சை திறந்து சொல்லிடுங்கள், அத்தகையதோர் அரும்பணியினை சங்கம் இல்லாமல் வேறு எதனால்; யாரால் பெற்றுத்தந்திருக்க முடியும்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை கூட்டுக்குழு கூட்டத்திற்கு அழைத்திட மாவட்ட அளவிலும் ஆணை பெற்றோம்.

அதிகாரிகள் விரும்பும் சமயம் மட்டுமே சர்வே பயிற்சி பவானிசாகர் பயிற்சி என்பதை மாற்றி அவ்வப்போது பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம்.

வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், உதவியாளர் பட்டியல்கள் தயாரிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் பெற்றோம்.

வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், பட்டியலில் சேர வயது வரம்பு ஒழித்து ஓய்வுபெறும் நாளில் கூட பதவி உயர்வு பெற வழிவகை செய்தோம்.

துணை ஆட்சியருக்கு 52 வயதிற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலையை மாற்றி 57 வயதாக உயர்த்தினோம். வருவாய் கோட்ட அலுவலகத்திலும் மாவட்ட வழங்கல் அலுவலகத்திலும் நேர்முக உதவியாளர் பணியிடங்களை வட்டாட்சியர் நிலையில் உயர்த்தி பெற்றோம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் (குற்றவியல்) பணியிடம் உயர்த்தி பெற்றோம்.

வட்டாட்சியர் அலுவலகத்திலும் சமுக பாதுகாப்பு வட்டாட்சியர் பணியிடம் பெற்றோம்.

தன் பதிவேட்டில் கலங்கள் குறைத்து எளிமையாக்கி அனைத்து துறைகளுக்கும் அமுல்படுத்தியுள்ளோம்.

வட்ட அலுவலகத்திலும் ஒரு துணை வட்டாட்சியர் இருந்த நிலையை மாற்றி இன்று 5 துணை வட்டாட்சியர்கள் (மண்டல வட்டாட்சியர்கள் 222 உட்பட ) பணியாற்றும் வகையில் ஆணைகள் பெற்றோம்.

மக்கள் குறை தீர்க்கும் திட்டத்திற்கும் சிறப்பு செயலாக்கத் திட்டத்திற்கும் மாவட்டத்திற்கு தலா ஒரு துணை ஆட்சியர் பணியிடங்களை பெற்றோம். சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கு துணை வட்டாட்சியர், உதவியாளர், கணினி இயக்குபவர், ஈப்பு ஒட்டுநர் உள்ளிட்ட 839 கூடுதல் பணியிடங்களை பெற்றோம்.

துணை வட்டாட்சியர் காலி பணியிடங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை வருவாய் நிர்வாக ஆணையிடமிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பெற்றோம்.

வருவாய் துறையில் மாவாட்ட ஆட்சியரின் நேர்முக உத்வியாளர் (சட்டம்) துணை ஆட்சியர் பணியிடங்களை பெற்றோம்.

மாவட்டங்களின் தேவைக்கேற்ப கூடுதலாக 13 வட்டங்களுக்கு வரவேற்பு துணை வட்டாட்சியர்களை பெற்றோம்.

கடந்த கால படிப்பினைகளை மனதில் தாங்கி எதிர்கால இயக்கங்களை வலுவுடனும், ஒற்றுமையுடனும், கொண்டு சென்றால் மட்டுமே நம்மை எதிர்த்து நிற்கும் உலகமய தனியார் மய தாராளமய சவால்களையும் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் எதேஸ் சதிகார செயல்பாடுகளையும் த்டுத்து நிறுத்தி ஊழியர்களின் நலங்களை பாதுகாக்க முடியும் அந்த திசை வழியில் பயணிக்க சபதம் ஏற்போம் சங்கம் வலிமையுடன் பல்லாண்டு செயல்பட்டு உழியர் நலங்காக்க இணைந்து செயல்படுவோம்.

அன்றும் இன்றும் என்றும் பெற்ற உரிமைகளை சலுகைகளைப் பாதுகாத்திட பெற வேண்டியவைகளை வென்றெடுத்த நம் பேரியக்கத்தின் நடவடிக்கைகளில் தங்களின் பங்கு எதுவாக என்னவாக இருக்க வேண்டும்? இருக்கும் முடிவெடுங்கள் முனைப்புடன் செயலாற்றுங்கள்.

அரசு ஊழியர் வாழ்வில் சங்கம் என்பது எந்த நிலையிலும் எந்த கோணத்திலும் பிரிக்க முடியாதது என்ற வரலாற்று உண்மையினை மனதில் கொண்டு செயல்படுவோம் அனைவரையும் செயல்பட வைப்போம்.

வென்றெடுக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் பல உண்டு. மறுப்பதற்கில்லை ஆனால் போராடிப் போராடி வென்றெடுத்த உரிமைகளையே தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடும் புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்.

இனிமேல் காலியாகப் போகும் பணியிடங்களில் புதிய நியமனம் இல்லை என் மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னேர் செல்லும் வழியில் பின்னேர் செல்ல முயற்சிக்கக் கூடும்.

நிகழ்கால வாழ்க்கையில் வேலை பளுவை சுமத்தி அலைக்கழிப்பதும், வயது முதிர்ந்த காலத்தில் கௌரவத்துடன் சமூகத்தில் நடமாடுவதை கேள்விக்குறியாக்குவதும் புதிய பொருளாதாரத்தின் கோள்கைகள் இவைகள் எதிர்த்து நிற்க மோசடித்தனமான அரசியல் - பொருளாதார கொள்கைகளைப் புரிந்து களம் காண வேண்டும்.

"உண்மை உழைப்பு, உயர்வு"
- என்னும் தராக மந்திரத்தை உயர்த்தி பிடிப்ப்போம்
"தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்"
"சங்கத்தில் சங்கமிப்போம்"
"சாதனைகள் பல செய்வோம்"
"சரித்திரங்கள் படைத்திடுவோம்" வாரீர்! வாரீர்!

தேடிச் சோறுநிதத் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்பாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

-மகாகவி பாரதியார்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
இச்சகத்துலோரெலாம் எதிர்த்து நின்ற போதுலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென் பதில்லையே

-மகாகவி பாரதியார்

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி -

தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா - நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா... எல்லாம்
பழைய பொய்யடா...

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

"பால் இன்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம்
வீடு முச்சூடும் அழும்"

- தோழர் ஜீவா

பெற்றதெல்லாம் சலுகைகள் அல்ல. தானாக அவைகள் கிடைத்ததும் அல்ல. போராடி பெற்ற மனித உரிமைகள். இன்னும் கூட எட்டாத உயரத்தில் இருப்பதாகத் தோன்றும் உரிமைகளும் தட்டிப் பறிக்க கூடாதது இல்ல. காலத்தால் வளர்க்கப்படும் கனவுகள் கனிந்து கைகெட்டும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இச்சாதனைகளையெல்லாம், ஒரு தனி மனிதரால் ஒர் குழுவினால் ஒரு சிலரால் மட்டுமே சாதித்திருக்க முடியுமா? இல்லை நிச்சயம் இல்லை.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டிபிழைக்காமல் உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதுமுள்ள நம் பேரிக்கத்தின் அத்தனை அங்கத்தினர்களின் கட்டுக் கோப்பான கடுமையான நடவடிக்கையினால் மட்டுமே முடிந்தது என்பதுதான் உண்மை.

கோரிக்கைகள் வென்றிட நம் இயக்க முன்னோடிகள் தண்டனைகளைத் தாங்கிக் கடந்து வந்த காட்டாறுகள்; நீந்தி வந்த நெருப்பாறுகளை சொல்லி முடியாதெனில் இவற்றில் தங்களின் பங்கு என்னவாக இருந்தது? என எண்ணிப்பாருங்கள்! பெருமைபடுங்கள்!!

நமக்கென்ன? நாம் ஈடுபட்டா நடக்கப் போகிறது? யாரோ சிலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் கடந்த காலங்களில் விட்டுயிருந்தால் நமது நிலை எதுவாக இருந்திருக்கும் என்றும் எண்ணிப்பாருங்கள் அப்போதுதான் கூட்டு முயற்சி கூட்டுச்செயல், கூட்டுப்போராட்ட என்ற சங்க நடைமுறைகளின் அடிப்படை அம்சம் தெளிவாக தெரியும்.

அடைந்த சாதனைகள் போதுமா? இனி குறைகளே இல்லையா? உண்டு இன்னுமும் நம் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேலைப்பளுக் கொடுமைகளிலிருந்து விடுபட; அவ்வப்போது நம்மைத் தாக்கும் அடிமைச் சட்டங்களின் பாதிப்பிலிருந்தும் நமது எதிர்காலத்தினை கேள்விக் குறியாகமாற்றி அவ்வப்போது பிறக்கும் கறுப்புஸ் சட்டங்களின் கோரப்பிடியிலிந்து விடுபட சங்க நடவடிக்கை என்பது என்றுமே ஓர் தொடர்கதை தான்

உரிமைகள் மறுக்கப்படும் போதும் நியாயங்கள் அழிக்கப்படுகின்ற போதும், கடந்த காலங்களைப் போலவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் -போனாலும் எங்கள் நிலை உறுதியானது, கட்டுக் கோப்பானது எனச்சொல்லி கடுமையான ஒருங்கினைந்த சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உரிமைகளை நியாயங்களை நிலை நிறுத்த முடியும் என்ற சமூக விஞ்ஞானத்தின் சட்டத்தினை உணர்ந்திடுவோம். இதில் யாரும் எதுவும் எந்த நிலைகளிலும் வேறுபடமுடியாது.

இந்த கோட்பாடுகளின் - கொள்கைகளின் வழியில் சாதி, மத, இன, கட்சி, அரசியல் வேறுபாடுகளை தவிடு பொடியாக்கி நமது பேரியக்கம் தொடர்ந்து போடும் வீரு நடையில் தங்கள் பங்கு என்ன? இந்த கட்டாய கடமையில் தங்கள் சிந்தனை எழுச்சி சீரிய பங்கு எதுவாக இருக்க வேண்டுமென முடிவெடுப்போம் செயலாற்றுவோம்.

வருவாய்த்துறையில் பணியாற்றுபவர்கள் வேறு எந்த துறைகளிலும் இல்லாதவாறு வட்டாட்சியர் 56 வகையான பணிகள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 17 வகையான பணிகள், மண்டல துணை வட்டாட்சியர்கள் 56 வகையான பணிகள் சரக வருவாய் ஆய்வர்கள் 27 வகையான பணிகள் பார்த்து வருவதுடன் நில அளவை பயிற்சி காவல் துறை பயிற்சி மற்றும் நீதித்துறை பயிற்சி பெற்று மற்ற துறைகளிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றோம்.

சங்கத்தை உடைப்பது உள்ளிட்ட அரசின் சதி திட்டங்களை முறியடித்து ஜாதி மதங்களை பாரோம் குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம் என்ற அடிப்படையிலும் அனைத்து நிலை ஊழியர்களையும் மதித்து ஒருங்கிணைந்து நாம் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடத்தி உயிரிழந்து பெற்ற உரிமைகளாகும்.

நாம் பெற்ற வெற்றிகள் ஏதோ ஒரு தனி மனிதனால் சாதிக்கப் பட்டவைகள் அல்ல சங்கம் என்ற ஒற்றுமை பதாகையை உயர்த்திப் பிடித்து ஒவ்வொரு முடிவுகளையும் மாநில நிர்வாகிகள் கூடிப்பேசி விவாதித்து இறுதிப்படுத்தி நமது சங்கத்தின் உயர்ந்தபட்ச அமைப்பான மத்திய செயற்குழுவில் உரிய காலத்தில் கூடி விவாதித்து முடிவெடுத்து முழுவதுமாக அமுல்படுத்தியன் விளைவாக சங்கத்தின் வலிமையை ஆட்சியாளர்கள் பலமுறை உணர்ந்ததன் விளையும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வைத்து அரசின் திட்டங்கள் செம்மையாக மக்களுக்கு சென்றடைய கால நேரமின்றி செயல்படுத்தியதின் விளைவே ஆகும்.

நமது சங்கம்