புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
நான்காவது மாவட்ட மாநாடு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள், சங்க அமைப்பு விதிகளின் படி சுழற்சி முறையில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இம்மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு தற்போதுள்ள மாவட்ட நிர்வாகிகள் 10.3.2003 ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டோம்.

பொறுப்பேற்ற தினத்திலிருந்து இன்று வரை (30-4-2005) தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில் பல்வேறு இயக்கங்களை நடத்தியிருக்கிறோம். வீரம் செறிந்த பொது வேலை நிறுத்தத்தில் 100% முழுமையாக் பங்கேற்று முன்னனி பாத்திரமாக விளக்கியிருக்கிறோம். நிகழ்வுகள் முக்கியத்துவத்தை அறிந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் ந்டத்தி பிரச்சனைகளை தீர்பதற்காக எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செய்த வேலைகளையும் எதிகால கடமைகளையும் சுருக்கமாக கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்து உங்கள் முன் வைக்கிறோம். அறிக்கையில் விடுபட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இவ்வறிக்கையை செழுமைபடுத்த உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

சங்கத்தின் அமைப்பு ரீதியான நிகழ்வுகள்

கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 10-3-2003ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பொறுப்பேற்று நாளது வரை சங்கப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட தலைவர் : திரு.கு.முருகன்
மாவட்ட துணைத்தலைவர் : திரு.நா.வரதராஜன்
: திரு .எம்.பீட்டர்ராஜ்
: திரு.எஸ்.செல்வராஜ்
மாவட்ட செயலாளர்   திரு.இரா.செல்வராஜ்
மாவட்ட இணைசெயலாளர் : திரு.ஆ.அம்மாவாசை
: கே.ராஜேந்திரன்
: திரு.பி.சுந்தரபாண்டி
மாவட்டப்பொருளாளர் : திரு.எஸ்.இராஜகோபால்

10.3.2003ம் தேதியன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுவில் மத்திய செயற்குழு உறுப்பினராக திரு.டி.கே.நாகேந்திரன் மாவட்ட கூட்டு சிவில் கவுன்சில் உறுப்பினராக திரு.க.கா.முகமது அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. திரு.வி.சகாயராஜா 27. திரு. எஸ்.சண்முகவேல்
2. திருமதி. என்.ரசிகலா 28. திரு. சந்திரசேகரன்
3. திரு. ஜார்ஜ் ஜோஜப் 29. திரு. வெள்ளையப்பன்
4. திரு. மணிமாறன் 30. திரு. கா.நீதிராஜன்
5. திரு. முனியாண்டி 31. திரு. வீரத்தேவன்
6. திரு. எஸ்.சத்தியானந்தம் 32. திரு. சரவணன்
7. திரு. ஆறுமுகம் 33. திரு. ஜகாங்கீர் பெய்க்
8. திரு. சிந்தாமணி 34. திரு. திரு.எஸ்.சுகுமார்
9. திரு. ராமையா 35. திரு. கே.வீரையன்
10. திரு. எஸ்.சுப்பிரமணியன் 36. திரு. சிவசண்முகம்/td>
11. திரு. ஆர்.கிருஷ்ணன் 37. திரு. உதயகுமார்
12. திரு. எம்.தாஜீதீன் 38. திரு. கே.பெரியசாமி
13. திரு. என்.செல்லத்துறை 39. திரு. திருமதி. விஜயலெட்சுமி
14. திரு. முருகேசன் 40. திரு. ரெங்கராஜ்
15. திரு. அபரிஸ்வான் 41. திரு. ஜான்பாஸ்டிண்டல்லஸ்
16. திரு. கே.சக்திமணி 42. திரு. ஜெயராமன்
17. திரு. சக்திவேல் 43. திரு. டி.கே.நாகேந்திரன்
18. திரு. மாணிக்ககிருஷ்ணமூர்த்தி 44. திரு. தண்டபாணி
19. திரு. பாஸ்கரன் 45. திரு. ஜெயராஜ்
20. திரு. கண்ணன் 46. திரு. அப்பாஸ்
21. திரு. ஜி.நாராயணன் 47. திரு. குணசேகரன்
22. திரு. செல்வநாயகம் 48. திரு. என்.ஜி. சிவக்குமார்
23. திரு. சரவணன் 49. திரு. சரவணக்குமார்
24. திரு. ராமசாமி 50. திரு. பூமிநாதன்
25. திரு. சிவசங்கர் 51. திரு. வடிவேல்முருகன்
26. திரு. பி.சி.செல்வராஜ் 52. திரு. சிவசுப்பிரமணியன்
53. திருமதி. மாரியம்மாள்

10.3.2003 க்குப்பின் கீழ்க்காணும் விவரப்படி மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்கள், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயற்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம்
02-03-2003 07-04-2003 10-03-2003
18-04-2003 18-04-2003 14-06-2004
14-05-2003 24-06-2003 (வி.செ)  
11-06-2003 12-01-2003  
28-07-2003 29-05-2003  
06-09-2003 10-02-2005 (வி.செ)  
05-10-2003    
19-01-2004    
21-03-2004    
06-07-2004    
11-09-2004    
05-12-2004    
04-02-2005    

மேற்சொன்ன கூட்டங்களில் ஊழியர் பிரச்சனைகள், இயக்கப்பணிகளை திட்டமிடுதல், மாநில மையத்தின் முடிவுகளை அமுல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளான ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் மூறையீடுகள் அளித்து பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்கிறோம். இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 24-06-2003ம் தேதி நடைபெற்ற விரிவடைந்த செயற்குழுவில் போராட்டக்குழுத்தலைவராக திரு. இரா.ஆறுமுகம் அவர்களையும், நிழல்குழுத்தலைவராக திரு. எஸ்.சுகுமார் அவர்களையும் தேர்ந்தெடுத்து பொதுவேலை நிறுத்தை பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தித்தர கேட்டுக்க்கொள்ப்பட்டது. வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் கைதாகி சிறை சென்று பணியில் செராத நமது உறுப்பினர்கள் திரு.கே.ராஜேந்திரன், திரு. டி.கே.நகேந்திரன், திரு. மங்களபாண்டியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு.சின்னச்சாமி ஆகியோருக்கு நமது உறுப்பினர்கள் மாதந்தோறும் நிதியுதவி வழங்கி அவர்களது நிகர சம்பளத்தை பணியில் சேரும்வரை வழங்குவது என 28-7-2003ல் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. சங்கத்திற்கு சவால்களை நின்றவைகள், அவைகளைக் கையாண்ட விதம், நாம் கற்றுக்கொண்ட படிப்பினைகள் இவைகளை பரிசீலனை செய்தால் எதிர்கால சங்கப்பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

மாநில மையம், கீழ்க்காணும் இடங்களில் நடத்திய மத்திய செயற்க்குழுக்கூட்டங்களில், மத்திய செயற்க்குழு உறுப்பினர், மாவட்ட நிர்வாகிகள், மாநில செயலர், முன்னனி ஊழியர்கள் பங்கேற்று சிறப்பித்திருக்கும்.

நாள் மத்திய செயற்குழு நடைப்பெற்ற இடம்
29.03.2003 திருவண்ணாமலை
13.09.2003 திண்டுக்கல்
27.03.2003 ஈரோடு
03.07.2004 விருதுநகர்
08.01.2005 கரூர்
05.03.2005 பொள்ளாச்சி

பொது வேலை நிறுத்திற்கு பின் அரசின் அடக்குமுறை காரணமாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்ட சூழ்நிலையில் திண்டுக்கல் N.S கம்யூனிட்டி ஹாலில் மத்திய செயற்குழு கூட்டம் மாவட்ட மையத்தால் சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை சிறப்பாக நடத்திட உதவி புரிந்த மாநில ச்செயலர் திரு. எஸ். கண்ணன் முன்னாள் மாவட்டத்தலைவர் திரு. இரா.ஆறுமுகம் நிழல்குழுத்தலைவர் திரு.எஸ்.சுகுமார் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்று ஆகியோரது நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

2003 மற்றும் 2004ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை முழுமையாக முடிக்கப்பட்டது. 2005ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை வருமாறு.

வ.எண் வட்டத்தின் பெயர் மொத்த உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள்
1. நிலக்கோட்டை 51 51
2. நத்தம் 26 26
3. பழனி 51 51
4. ஒட்டன்சத்திரம் 27 27
5. வேடசந்தூர் 39 39
6. கொடைக்கானல் 30 227
7. தலைமையிடம் 30 152
மொத்தம் 451 376

பொது வேலை நிறுத்திற்கு பின் அரசின் அடக்குமுறை காரணமாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்ட சூழ்நிலையில் திண்டுக்கல் N.S கம்யூனிட்டி ஹாலில் மத்திய செயற்குழு கூட்டம் மாவட்ட மையத்தால் சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை சிறப்பாக நடத்திட உதவி புரிந்த மாநில ச்செயலர் திரு. எஸ். கண்ணன் முன்னாள் மாவட்டத்தலைவர் திரு. இரா.ஆறுமுகம் நிழல்குழுத்தலைவர் திரு.எஸ்.சுகுமார் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்று ஆகியோரது நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது எத்தனை உறுப்பினர்கள் ஆயுள் சந்தாதாரர்களாக உள்ளனர், எத்தனை உறுப்பினர்கள் ஆண்டு சந்தாதாரர்களாக உள்ளனர் என்ற விவரம் மாநில மையத்தின் ஆவணங்களிலிருந்து சரிபார்க்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆண்டு சந்தாதாரர்கள் எண்ணிக்கை 231
2. ஆயுள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 96
மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 327

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 451ல் 327 உறுப்பினர்கள் சங்கக்குரல் சந்தாதாரர்கள் ஆகியுள்ளது பாராட்டுக்குரிய அம்சம். நிலக்கோட்டை வட்டத்தில் 38 நபர்களுக்கு சங்கக்குரல் சந்தா அளிக்கப்பட்டு மாநில மையத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது. முகவரிப்பட்டியல் அனுப்பப்படாததால் இச்சந்தாரர்கள் பட்டியல் மாநில மையப்பட்டியலில் இடம் பெறவில்லை.இதைத்தவிர எஞ்சிய உறுப்பினர்களையும் சங்கக்குரல் "சந்தாதாரர்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மாநில மையத்திற்கு அளிக்க வேண்டிய 2004 மற்றும் 2005ம் ஆண்டிற்கான உறுப்பினர் இணைப்புக்கட்டணம், போராட்ட நிதி, சங்கவளர்ச்சி நிதி ஆகியன நிலுவையின்றி 5.3.2005ம் தேதி பொள்ளாச்சியில் நடைப்பெற்ற மட்திய செயற்குழுவில் கீழ்க்காணும் விவரப்படி மாநில மையத்திடம் அலளிக்கப்பட்டுள்ளது.

சங்க குரல் ஆண்டு சந்தா -     263  
ஆயுள் சந்தா-        1  
264 ரூ. 11020.00
2005ம் ஆண்டு உறுப்பினர் இணைப்பு கட்டணம் ரூ. 2910.00
போராட்ட நிதி ரூ. 1000.00
கட்டிட பராமரிப்பு நிதி ரூ. 7000.00
மொத்தம் ரூ. 23840.00

தற்போது நிலுவை ஏதுமில்லை. இப்பணியை செவ்வனே செய்து முடித்த வட்டக்கிளை நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், தலைமையிடத்தில் பணிபுரியும் உறுப்பினர்களையும் மனதார பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

வட்டக்கிளைகள், மாவட்டமையம்/மாநில மையம் அறிவுறுத்தலுக்கிணங்க இயக்க நடவடிக்கைகளை தொய்வின்றி நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மாநில மையத்தின் முடிவிற்கிணங்கவும் மாவட்ட மையத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும் கீழ்க்காணும் விவரப்படி வட்டக்கிளை மாநாடுகளை நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். (பட்டியல் தனியே இணைக்கப்பட்டுள்ளது).

1. பழனி 22.02.2005
2. கொடைக்கானல் 23.02.2005
3. ஒட்டன்சத்திரம் 25.02.2005
4. வேடசந்தூர் 26.02.2005
5. நிலக்கோட்டை 01.03.2005
6. நத்தம் 03.03.2005

பழனி வட்டக்கிளை மாநாட்டில் மாநிலத்தலைவர் திரு. ஏ.வி.செல்வராஜ் அவர்களும். நிலக்கோட்டை வட்டக்கிளை மாநாட்டில் மாநில பொதுசெயலாளர் திரு.கே.ராஜ்குமார் அவர்களும், வேடசந்தூர் வட்ட கிளை மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தலைவர் திரு. எம்.அண்ணாத்துரை

அவர்களும், நத்தம் வட்டக்கிளை மாநாட்டில் மதுரை மாவட்டத்தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், நத்தம் வட்டக்கிளை மாநாட்டில் பேராசிரியர். ஆர்.மனோகரன் அவர்களும், ஐபெக்டோ உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், அனைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் மாநில செயலர் திரு.S.கண்ணன் அவர்களும், பழனி நீங்கலாக அனைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் முன்னாள் மாவட்டத்தலைவர் இரா.ஆறுமுகம் அவர்களும், அமைத்து வட்டக்கிளை மாநாட்டிலும் தமிழ்நாடு ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகளும் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வட்டகிளை மாநாடுகள் , சங்க செயல்பாடுகளில் உறுப்பினர்களுக்கு புது எழிச்சியை ஏற்படுத்தியுள்ளது என நம்புகிறோம். செய்த வேலைகளை மாவட்ட மையத்திற்கும் மநில மையத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவிப்பதில் (கடித போக்குவரத்தில்) தொய்வு உள்ளது என்பதையும் இதுஎதிர்காலத்தில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.