புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
பயிலரங்கம்

தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி -- வேலை நிறுத்தம் உறுதி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில் இரவுக்காவலர், ஈப்பு ஓட்டுநர், மால்சி பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல்

வருவாய்த்துறையில் காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல்

வருவாய்த்துறையின் சிறப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு வருவாய் உதவியாளர் , வருவாய் இளநிலை உதவியாளர் பெயர் மாற்றம்

வட்டாட்சியர் வருவாய் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், பட்டதாரி இளநிலை உதவியாளர்கள் தட்டச்சர்கள் ஊதிய மாற்றம்

கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கக் கோருதல்.

உள்ளிட்ட 19அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24.06.2015 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான 12000 க்கும் மேற்ப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 6.6.2013 முதல் நாளது வரையில் அன்னத்து மாநில நிர்வாகிகளும் அன்னத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் அழைப்பினை ஏற்று 19.06.2016 அன்று மாலை 6 மணியளவில் வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களின் அறையில் வருவாய்த்துறை அரசு செயலாளர் மற்றும் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஏற்கனவே 23.09.2014 அன்று மாண்மிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுடனும், 29.01.2015 அன்று வருவாய்த்துறை அரசு செயலாளருடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மீது இது நாள் வரை எவ்வித அரசாணைகளும் பிறப்பிக்கப்படாத நிலையில் வெற்றி வாக்குறுதிகள் மட்டுமே மீண்டும் அளிக்கபட்ட காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.

மாலை 8மணியளவில் சங்க மாநில மையக் கட்டிடத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், "அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தையடுத்து திட்டமிட்டப்படி 24.06.2015 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளவது" என் முடிவு செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான 12000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கிறார்கள். வருவாய்த்துறையின் அனைத்துப் பணிகளும் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

இப்படிக்கு          
ம.சுகந்தி           
மாவட்டச்செயலாளர்  

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.