திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது எத்தனை உறுப்பினர்கள் ஆயுள் சந்தாதாரர்களாக உள்ளனர், எத்தனை உறுப்பினர்கள் ஆண்டு சந்தாதாரர்களாக உள்ளனர் என்ற விவரம் மாநில மையத்தின் ஆவணங்களிலிருந்து சரிபார்க்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. | ஆண்டு சந்தாதாரர்கள் எண்ணிக்கை | 231 |
2. | ஆயுள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை | 96 |
மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை | 327 |
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 451ல் 327 உறுப்பினர்கள் சங்கக்குரல் சந்தாதாரர்கள் ஆகியுள்ளது பாராட்டுக்குரிய அம்சம். நிலக்கோட்டை வட்டத்தில் 38 நபர்களுக்கு சங்கக்குரல் சந்தா அளிக்கப்பட்டு மாநில மையத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது. முகவரிப்பட்டியல் அனுப்பப்படாததால் இச்சந்தாரர்கள் பட்டியல் மாநில மையப்பட்டியலில் இடம் பெறவில்லை.இதைத்தவிர எஞ்சிய உறுப்பினர்களையும் சங்கக்குரல் "சந்தாதாரர்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.