புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001

வாழ்த்து மடல்

நீண்டு வளர்ந்த காலத்தே-சங்கம்
தோண்டியெடுத்த உரிமைகளும்-புதிதாய்
கண்டு வழங்கிய பெருமைகளும்
ஆண்டுகள் கழித்த காலத்துக்கும்
மறைந்திடாத காலச் சுவடுகள்-மதி
நிறைந்து வாழும் நினைவுகள்!

கற்கோட்டையாம் திண்டுக்கல்லில்-சங்கம்
சொற்கோட்டை கூட்டும் மாநாடு-இது
சொக்க வைக்கும் தேன்கூடு!

இளையோர் பெரியோர் மகளிர்
முன்னோர் பின்னோரெனும்
தகைசார்ந்தோர் வழிநடத்தும் மாநாடு-இது
பகை வென்று முடிக்கும் மாநாடு!

மாநிலத்து ஊழியர் உரிமைக்கும்-தன்
மானம் மறந்த ஊழியர்க்கும்
உரிமை வென்று தரும் மாநாடு-இது
நீறுபூத்த நெருப்புக் காடு!

சூழ்ச்சி பகை துரோகம்-எதுவும்
தாழ்ச்சி காட்டும் நம்மிடம்
ஒற்றுமை முழக்கம் ஒன்றே-உரிமை
பெற்று தந்த வழித்தடம்.

இன்னா நாற்பது கழிந்ததுவும்
இனியவை நாற்பது எழுந்ததுவும்-நாம்
இயற்றிக் காட்டிய சரித்திரம்-சங்கம்
ஒன்றென திரண்டால் சரிந்திடும்
குன்றென நிற்கும் கோட்டைகள் தாம்!

துங்காதிருக்கும் வருவாய்த்துறையின்
நாங்காம் மாவட்ட மாநாடு - நாளை
மாநிலம் வியத்தல் வேண்டாமோ?
வருவாய்த்துறையின் தோழனே!
தருவாய் வருகை நிறைவாய்-நம்
நோக்கம் வெல்லட்டும் எளிதாய்!

ஆக்கம் - ந. மோகன் - நத்தம்


நமது சங்கம்