புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
கிராம கணக்குகள்

வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள் யாவும் கிராம அளவிலிருந்தே துவங்கப்படுகின்றன. இதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம கணக்குகளை வருவாய்த்துறை நிர்வாக சீர்திருத்தக்குழு முன் பரிந்துரை அடிப்படையில் பராமரிப்பதிலிருந்து நீக்கம் செய்திடவும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டிய கிராமக் கணக்குகள் பற்றியும் அரசாணை எண்:369 வருவாய் நிதி 4(2) துறை நாள்: 6.7.2000ல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. பசலி ஆண்டு என்பது சூலை முதல் தொடங்கி ஜுன் மாதம் முடிய உள்ள காலமாகும். கிராம கணக்குகளை கிராமக் கணக்குகள் நடைமுறை நூலில் உள்ள அறிவுரைகளுக்கிணங்க சரியாக எழுதி முறையாக பராமரிப்பது கிராம நிர்வாக அலுவலரின் தலையாய கடமையாகும். இதனைக் கண்காணிப்பது சரக வருவாய் ஆய்வர்களின் பொறுப்பாகும். இவ்வாறு தயார் செய்யப்படும் கிராம கணக்குகளையும் தொடர்புடைய வட்ட அளவிலான கணக்குகளையும் சரி பார்த்து ஒவ்வொரு கிராமத்திற்கும் அந்த பசலி ஆண்டில் சரியான கேட்புத்தொகை எவ்வளவு என நிர்ணயம் செய்யும் பணியே “ஜமாபந்தி “யாகும். இப்பணி ஒவ்வொரு ஆண்டும் பசலி ஆண்டு முடிவு நாளான ஜுன் 30க்குள் முடிக்கப் பெற வேண்டும். ஜுன் 30க்குள் முடிக்கப்பெறாத நிலை ஏற்படின் வருவாய் நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிக்க இயலும்.

கிராம நிர்வாக அலுவலர்களால் கீழ்கண்ட கிராம கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்.

கிராம “அ”பதிவேடு

நிலையான அடிப்படையான இப்பதிவேடு கிராமத்தைப் பற்றிய புல எண் வாரியான விவரங்களை கொண்டதாகும். அரசாணைப்படி நிலவரித்திட்டப் பணி முடிந்து செட்டில்மெண்டு காலத்தில் தயாரிக்கப்படும் பதிவேடு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இப்பதிவேடு எழுதப்படுவதில்லை. கிராமத்தில் நிலவகை மாற்றம் போன்றவைகளின் காரணமாக ஏற்படும் நிலையான மாறுதல்களுக்கு திருத்தங்கள் செய்து பதிவேட்டின் இறுதியில் ஆண்டு சுருக்கம். செய்யப்படவேண்டும். இதற்கு தனியே சுருக்கம் வகைபாடு வாரியாக “அ” பதிவேடு உள்ளடக்கம் என பராமரிக்கப்படுகிறது. இதன் திட்ட விஸ்தீரணத்திற்கும் அடங்கலில் உள்ள திட்ட விஸ்தீரணத்திற்கும் வேறுபாடின்றி உள்ளதா என்பதனையும், தாலுக்கா”அ” பதிவேட்டுடன் கிராம “அ” பதிவேட்டினை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி ஜமாபந்தி தணிக்கையின் போது செய்யப்பட வேண்டும்.

சாகுபடி கணக்கு எண்:1

இக்கணக்கு ஒவ்வொரு மாதமும் பயிர்வாரியாக பிரிக்கப்பட்டு புல எண், உட்பிரிவு விவரங்களுடன் சாகுபடியை காட்டும் கணக்காகும். இதில் நன்செய், புஞ்சை, மானாவாரி, புறம்போக்கு என்ற பாகுபாடு வாரியாக ஒவ்வொரு பயிர் இனத்திலும் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, அதில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்பு ஆகியவற்றை கிராமக்கணக்கு 2 அடங்கலில் இருந்து எடுத்து எழுதப்பட வேண்டும் ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒவ்வொரு பயிருக்கும் பாகுபாடு வாரியாக கூடுதல் போட வேண்டும். பயிர்வாரி விபரங்கள் தயாரிக்கும்போது கிராமகணக்கு 1 ஏல் காணப்படும் பயிர்களின் விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இக்கணக்கினை ஒவ்வொரு மாதமும் 25 ந் தேதிக்குள் முடிக்கப் பெற்று வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

கிராம கணக்கு எண்:1 ஏ

முதலில் தெரிவிக்கப்பட்ட சாகுபடி கணக்கிற்கு (கணக்கு எண் 1) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பயிரிலும் சாகுபடி, அறுவடை மற்றும் இருப்பு பரப்பினை காட்டும் சுருக்க கணக்காகும். இது கிராம கணக்கு எண் 1ல் உள்ள ஒவ்வொரு பயிரைப் பொறுத்தவரை அந்த மாதம் முடிய உள்ளமொத்த சாகுபடி பரப்பினை(அதாவது சென்ற மாதம் வரை பயிரானது மற்றும் நடப்பு மாத சாகுபடி) கலம் 2ல் குறிக்க வேண்டும். ஒவ்வொரு பயிரிலும் அந்தந்த மாதம் முடிய உள்ள அறுவடையான மொத்த பரப்பினை விளைச்சல் மதிப்பீட்டில் தயாரித்த கலம் 3 முதல் 7 முடிய பூர்த்தி செய்ய வேண்டும் கலம் 8ல் மொத்த அறுவடை பரப்பினை (அதாவது சென்ற மாதத்தில் அறுவடையான பரப்பு மற்றும் நடப்பு மாத அறுவடை பரப்பு) குறிக்க வேண்டும். (கலம் 3,4,5,6,ரூ 7ன் கூடுதல் ) கலம் 2ல் கண்ட அறுவடை பரப்பினைக் கழித்து கலம் 9ல் பயிர் இருப்பு காட்டுதல் வேண்டும்.

இக்கணக்கு மாதா மாதம் எழுதப்பட்டு கூடுதல் போடப்பட்டு 25ந்தேதி சரக வருவாய் ஆய்வர்களுக்கு கிராம கணக்கு எண்-1 உடன் அனுப்புதல் வேண்டும்.

கிராமக் கணக்கு எண்:2(அடங்கல்).

ஒரு கிராமத்தில் உள்ள நிலத்தைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி பின்வருமாறு மூன்று பகுதிகளாக பிரித்து பசலி தோறும் எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடாகும். இக்கணக்கு நீர்ப்பாசன ஆதாரங்கள் வாரியாக நில பாகுபாடு வாரியாக புல வாரியாக எழுதப்பட வேண்டும்.
1) பட்டா நிலங்கள்
அ)நஞ்சை (பாசனவாரியாக)
ஆ)புஞ்சை
இ) மானாவாரி
2) தீர்வை விதிக்கப்பட்ட தரிசு நிலங்கள் (தஞ்சை / புஞ்சை)
3) புறம்போக்கு
ஒவ்வொரு புலத்திலும் சாகுபடி செய்யப்படாத தலத்தில் உள்ள கட்டிடங்கள், சாலை மரங்கள் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். எழுதும் முறை

கிராமத்தில் முகாமிட்டு மேலாய்வு செய்திடும் அதிகாரிகள் எழுத வேண்டிய பொதுவான குறிப்புகளுக்காக இப்பதிவேட்டின் முதல் சில் பக்கங்களை வெற்றிடமாக விட்டு வைக்க வேண்டும். இப்பதிவேட்டில் பக்க எண் இடப்பட்டு வட்ட அலுவலக கோபுர முத்திரை இடப்பட்டு பதிவேட்டின் பக்க எண்ணிற்கு வட்டாட்சியரின் ஒவ்வொரு ஆண்டும் சூலை முதல் தேதிக்குள் பெறப்பட வேண்டுமு;. இப்பதிவேட்டின் இரண்டாவது பக்கத்தில் தடையாணையின் கீழ் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் விவரம், அரசு பாசன ஆதார விவரம், ஆயக்கட்டு கிணறு விவரம் ஆகியவை எழுதப்பட வேண்டும்.

இப்பதிவேட்டின் 1 முதல் 6 கலங்கள் முந்தைய பசலி அடங்கலிலிருந்து எழுத்து எழுதி கிராம”அ” பதிவேடு, சிட்டா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு திட்ட விஸ்தீரணம், தீர்வை, பட்டாதாரர் பெயர் விவரங்கள் சரியாக உள்ளனவா என கண்டறிய வேண்டும். கலம் 7-ல் எந்த பகுதி நிலமாவது குத்தகைதாரரால் சாகுபடி செய்யப்படுகிறதா? என இருத்தல் வேண்டும். இந்த கலத்தில் கிராம குத்தகை உரிமை பதிவேட்டில் உள்ள விவரப்படி குத்தகை சாகுபடியில் முழு விஸ்தீரணமோ அல்லது ஒரு பகுதியோ இருந்தால் “ஆம்” என குறிப்பிட வேண்டும். அரசாணை நிலை டி2 எண் 2076 வருவாய்துறை நாள்:1.12.87ன்படி கீழ்கண்ட பதிவுகள் செய்யப்பட வேண்டும்.

பட்டாதாரர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச்சேர்ந்தவரா?(பழங்குடி இனத்தை சிகப்பு மையினால் குறிப்பிடவும்) குத்தகைதாரர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச்சேர்ந்தவரா? (பழங்குடி இனத்தை சிகப்பு மையினால் குறிப்பிடவும்) மேலும் அடங்கலில் கடைசி பக்கத்தில் ஆதிதிராவிடர் /பழங்குடியினர் வகுப்பைச்சேர்ந்த விவசாயிகள் / குத்தகைதாரர்கள் குறித்த விவர சுருக்கத்தை தயாரித்து எழுத வேண்டும்.

கலம் 8-ல் முதல் போக சாகுபடி மாதமும் அதன் கீழ் அறுவடை மாதமும் குறிக்க வேண்டும்.

கலம் 9-ல் சாகுபடியான பயிரின் பெயரினை எழுத வேண்டும். நெல் சாகுபடியை பொறுத்து பயிரின் வகையான நெல் மற்றும் வகை (கோ43,ஐ.ஆர்.20 போன்றவை) குறிக்க வேண்டும்.

கலம் 10-ல் சாகுபடியான பரப்பு அறுவடையான பரப்பு குறிக்க வேண்டும்.

கலம் 11-ல் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட நீர்ப்பாசன ஆதாரம் என்ன என்பதனை தெரிவிக்க வேண்டும். பாய்ச்சலும், இறவை, கசிவு சொந்தக்கிணறு மானாவாரி போன்றவற்றினை குறிக்க வேண்டும். கலம் 13 முதல் 17 முடிய உள்ளவை இரண்டாம் போக சாகுபடிக்கு உரியவை. முதல் போக சாகுபடி பதியும் முறையையே இரண்டாம் போகத்திற்கும் கை கொள்ள வேண்டும். கலம் 18-ல் புல எண்ணில் மொத்த பரப்பளவில் ஒரு பகுதி மட்டும் சாகுபடி செய்யப்பட்டு இருப்பின் அதனை அளந்து சரியான அளவினை புல எண்ணிற்கு எதிரே குறிப்பிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்ரமணம் செய்யப்பட்டு இருப்பின் ஆக்ரமணதாரர் பெயர், ஆக்ரமண பரப்பு அதன் தன்மை ஆகியவற்றினை தொடர்புடைய புல எண்ணிற்கு எதிரே குறித்த வேண்டும். புறம்போக்கு நிலங்களைப் பொறுத்து அந்நிலங்கள் என்ன வகையென குறிக்க வேண்டும். (களம், மயானம், வண்டிபாதை, வாய்க்கால்) மேலும் 2 சி பட்டா பெற்ற மரங்கள், அரசுக்கு சொந்தமான மரங்கள, காய்ப்பு, இளசு பற்றிய விவரம் குறிக்க வேண்டும்.

கலம் 18 (அ) ல் புல எண் வாரியாக மொத்த பரப்பளவில் நிகர சாகுபடி பரப்பு நீங்கலாக தரிசாக விடப்பட்ட அல்லது வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பரப்பினை தரிசு நிலங்களின் “அ” முதல் “ஏ” வரையிலாக வகைகளில் ஒன்றில் வகைப்படுத்தி அக்குறியீடு எழுத்துடன் தரிசு பரப்பினை குறித்தால் வேண்டும். அதாவது இதன் நோக்கம் சாகுபடி செய்ய தகுதி வாய்ந்த புலங்கள் சாகுபடி செய்யப்படாமல் நில சொந்தக்காரர் தரிசாகப் போட்டு உணவு உற்பத்தியை ஊக்குவிக்க தவறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வட்டாட்சியரால் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்பதேயாகும்.

கலம் 19-ல் பயிர் பார்வையிடும் அலுவலர் குறிப்பு எழுதுவதற்காக உள்ள இடமாகும். இதில் அடித்தல், திருத்தல் இன்றி எழுதப்பட வேண்டுமு;. ஆய்வு குறிப்பில் பயிரின் பெயர், பயிரின் நிலைமை; பாய்ச்சல் ஆதாரம் சாகுபடி செய்யப்பட்ட (அல்லது) நீர் பாய்ச்சப்பட்ட விஸ்தீரணம் ஆகியவை பற்றிய விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். புறம்போக்கு / புஞ்சை தரிசு நிலங்களைப் பொறுத்தவரை இந்த நிலங்களில் மரங்கள் இருப்பின் மரங்களின் விவரம், அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

பயிர் பார்வையிடும் அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறியீடு விவரம் பின்வருமாறு.

வ.எண்

விவரம்

வருவாய் ஆய்வாளர்கள் ஆய்வு

துணை வட்டாட்சியர்/ வட்டாட்சியர் மேலாய்வு

1.

காய்க்கும் மரங்கள்

100%

15%

2.

இளமரங்கள்

100%

15%

3.

புறம்போக்கு

100%

15%

4.

கசிவு/ தீர்வை அதிகம்/ பசலி அதிகம் தீர்வை குறைவு / பசலி குறைவு மற்றும் நஞ்சை நிலங்கள்

100%

20%

5.

பட்டா புஞ்சை நிலங்கள்

100%

15%

கிராம கணக்கு எண்:2 சி

         கிராமத்தில் அரசு நிலங்கள் மற்றும் தனியாருக்கு பொது தோப்பு விதிகளின் கீழ் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் ஆகியவற்றில் உள்ள, பலன் தரும் மரங்களை காட்டும் பதிவேடாகும். இக்கணக்கு நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும். இப்பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.
பிரிவு :  1. அரசு தோப்புகள்
                      2. பொது உபயோகத்திற்கு விடப்பட்ட தனியார் தோப்புகள்
                      3. அரசால் வரி விதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடக்கும் மரங்கள்
                      4. உள்ளாட்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்
         2 சி பட்டா வழங்கப்பட்ட மரங்களுக்கு சரியான மரத்தீர்வையினை கணக்கிட்டு எழுதப்பட வேண்டும். ஒவ்வொ பசலியிலும்  2 சி மரங்களை பார்வையிட்டு 2 சி மரங்கள் இள மரங்களா காய்ப்புக்கு வந்து விட்டதா என்பதனை கண்டறிய வேண்டும். இளமரங்கள்  காய்ப்புக்கு வந்து விடின் அதற்கான மர தீர்வைக்கு 2சி ஜாஸ்தி பட்டி கொடுத்து வட்டாட்சியரின் ஆணை பெற்று 2சி கேட்பில் சேர்க்க வேண்டும். அதே போன்று 2சி மரங்கள் பட்டு போனாலும் 2 சி கம்மி பட்டி கொடுத்து உரிய ஆணையினை வட்டாட்சியரிடமிருந்து பெற்று கேட்பிலிருந்து குறைக்க வேண்டும்.
         2சி மரவரியானது பட்டாதாரரிடம் கிஸ்தி தொகையுடன் சேர்த்து வசூலிக்கக்கூடாது. இதனை தனி ரசீது மூலம் வசூலித்து கிராம 13ம் நெம்பர் கணக்கில் தனி பக்கத்தில் வசூல் விவரத்தைப் பதிந்து மொத்த தொகையினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எஸ்.எப்.டி கணக்குகளில் தனியே செலுத்து சீட்டு மூலம் செலுத்தப்பட வேண்டும். 2சி மரவரியை 7ம் நெம்பர் மற்றும் 10ம் நெம்பர் கணக்குகளில் கொண்டு வரக்கூடாது.
         அரசாணை நிலை எண்:864 வருவாய்த்துறை நாள்.30.8.96 ன்படி கீழ்கண்டவாறு மரவரி வசூலிக்க ஆணையிடப்பட்டுள்ளது.


வ.எண்

மரத்தின் வகை

மரவரி பாய்

1.

புளி

6

2.

மா

6

3.

தென்னை

8

4.

புனை

1

5.

பலா

6

6.

இலுப்பை

1.25

7.

கொய்யா

3

8.

கருவேப்பிலை

3

          2சி பட்டா வழங்கும்போது, 2சி உரிமையை மாற்றம் செய்ய அதிகாரம் இல்லை என்றும், அவ்வாறு மாற்றம் செய்தால், பட்டா ரத்து செய்யப்படும் என்றும் இந்த நிபந்தனையினை, இதர நிபந்தனைகளுடன் சேர்த்து குறிப்பிடப்பட வேண்டும்.
அரசாணை 2772 நாள். 4.1.77 ன் படி  2சி பட்டா வழங்கப்படாத பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்படாத அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களின் (செக்ஷன் 1ல் கண்டுள்ள மரங்கள்) மகசூலை ஒவ்வொரு ஆண்டும் பசலி துவக்கத்தில் வருவாய்த்துறையினரால் விடுபாடு இல்லாமல் மகசூல் ஏலம் விடப்பட வேண்டும். நடப்பு ஆண்டில் ஏலம் விடப்படும் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக பட்ச ஏலத்தொகைக்கு குறைவாகவோ அல்லது இதே தொகையாகவோ இருப்பின் மேற்படி தொகை முழுவதும் ஊராட்சி ஒன்றியத்தில் செலுத்தப்பட வேண்டும். மேற்படி ஏலத் தொகை கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச ஏலத்தொகைக்கு கூடுதலாக  இருப்பின் மேற்படி கூடுதல் ஏலத் தொகையில் 1/3 பாகமும் ஏலத் தொகையும் பஞ்சாயத்து கணக்கிலும் எஞ்சிய 2/3 பங்கு கூடுதல் தொகை வருவாய்த்துறை கணக்கில் “029தலவரி, மரவசூல் மற்றும் இதர வரவுகள்” என்ற தலைப்பின் கீழ் செலுத்தப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண் 2டி

பாசன திட்டங்களின் கீழ் பாசன வசதி செய்யப்பட்ட நிலப்பரப்பினைக் காட்டும் பதிவேடு இக்கணக்கு அடங்கலில் உள்ள பதிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இக்கணக்கு இரு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும். முதல் பிரிவு ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரி பாசனங்களைக் கொண்டது. இரண்டாம் பிரிவு கிணறுகள் பற்றிய விவரங்களைக் கொண்டது.

2எப் கணக்கு (தரிசு நிலங்கள் பதிவேடு)
ஒவ்வொரு பசலியிலும் சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் சாகுபடி செய்யாது விடப்படும் மற்றும் வேறு வகையாக உபயோகப்படுத்தப்படும் நிலங்களின் பரப்பினை காட்டும் வருடாந்திர கணக்காகும். இப்பதிவேடு அடங்கலில் கலம் 18(அ)ல் குறிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும். கிராமங்களில் சாகுபடி செய்யப்படாத பரப்பு 8 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சாகுபடியாகாத நிலங்களை புல எண் வாரியாக எழுதி அந்நிலபரப்பு எந்த வகையைச் சேர்ந்தது என அந்தந்த கலத்தில் குறிக்க வேண்டும் ஒவ்வொரு இனத்திற்கும் கூடுதல் போட வேண்டும். கடைசியாக கிராம நிகர சாகுபடி பரப்பினையும் ஒரு முறைக்குமேல் சாகுபடி ஆன பரப்பினையும் அடங்கலிலிருந்து எடுத்து எழுதி பயிரிடப்பட்ட மொத்த பரப்பினைக் காட்ட வேண்டும்.
கிராம கணக்கு எண்: 3 (பட்டா மாறுதல்)
நிலங்களில் பதிவுகள் குறித்து ஏற்படும் மாறுதல்களைக்காட்டும் வருடாந்திர பதிவேடாகும். இது நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.
பிரிவு - 1 உரிமையை விட்டு விடுதல்
பிரிவு - 2 நில ஒப்படை
பிரிவு - 3 பட்டா மாறுதல்
பட்டா மாறுதல் பின்வரும் இனங்களில் செய்யப்படுகிறது.
அ) வருவாய் பாக்கிக்காக ஏலம் விட்டது.
1) அரசால் வாங்கப்பட்டது.
2) தனி நபரால் வாங்கப்பட்டது.
ஆ) நீதி மன்ற ஆணையின் பேரில் மாற்றபட்டது.
இ)1) தனியார் விற்பனை
2) தானம்
3) பரிவர்த்தனை
4) பாகப்பிரிவினை மூலம் பெறப்பட்டது.
ஈ) வாரிசு முறைப்படி மாற்றப்பட்டது.
உ) 12ஆண்டு அனுபோக பாத்தியத்தின் பேரில் மாற்றபட்டது
ஊ) வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்றது.
பிரிவு 4-இதர மாறுதல்கள் (நில எடுப்பு, நில வகைபாடு மாற்றங்கள் போன்றவை)
இக்கணக்குகளில் கலம் 8ல் மாறுதலுக்கான ஆணை எண் தேதி, கலம் 9ல் யாரிடமிருந்து யாருக்கு மாற்றப்பட்டது என்ற விவரம் கலம் 10ல் கிராம கணக்குகளில் மாற்றப்பட்ட விவரம் ஆகியவை தவறாது குறிக்கப்பட வேண்டும். நிரந்தர மாறுதல்களாக இருந்தால் கிராம “அ” கணக்கு, சிட்டா மற்றும் அடங்கலிலும், இதர மாறுதல்கள் எனில் சிட்டா மற்றும் அந்த பசலி அடங்கல் ஆகியவற்றிலும் மாற்றங்கள் செய்து அதற்கு சான்றாக சரக வருவாய் ஆய்வரின் சுருக்கொப்பம் பெறப்பட வேண்டும். வட்ட அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் மாறுதல் ஆணை நகல்களை தேதி வாரியாக அடுக்கி ஆண்டு இறுதியில் தைத்து 3ம் நெம்பர் பதிவேட்டுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
இக்கணக்கிற்கு துணை கணக்குகளாக பட்டா மாறுதல் மனுக்கள் பைசல் செய்யப்பட்டமைக்கு கிராம கணக்கு எண் 10சி பிரிவு(1) மற்றும் பிரிவு 2ல் இரு பதிவேடுகளாக பராமரிக்கப்படவேண்டும்.
பிரிவு (1) - வட்ட அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் மாறுதல் மனுக்கள்.
பிரிவு (2)-வாரிசுப்படி அனுபோக பாத்தியதை விசாரணையில் அனுப்பப்படும் அறிக்கைகள் பற்றியது.
கிராம கணக்கு எண்: 3 (ஏ)
கிராம கணக்கு எண் 3ன் மொத்தத்திற்கான சுருக்கத்தினைக் காட்டும் வருடாந்திர கணக்கு ஆகும். கணக்கு எண் 3ன் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள கூடுதலை இக்கணக்குகளில்  எடுத்து எழுத வேண்டும். இதன் கலம் 11ல் கண்ட நிகரப்பரப்பு கிராம சிட்டாவின் மொத்த பரப்பிற்கு இணையாக இருத்தல் வேண்டும்.
கிராம கணக்கு எண்: 4 (அரசிறைக்கழிவு)
இது அரசிறை கழிவுக்கான நிலையான கணக்கு ஆகும். இது இரண்டு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.
1) இந்து சமய அறநிலையங்களுக்காக கழிக்கப் பெறுபவை.
2) இதர காரியங்களுக்காக கழிக்கப் பெறுபவை.
இக்கணக்கில் அரசிறைக்கழிவுத் தொகை அதற்குரிய பணிக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான சான்றினை பசலி முடிவில் கொடுக்கப்பட வேண்டும்.
கிராம கணக்கு எண்: 5

இது நிலவரி  வஜா கணக்கு என்று சொல்லப்படும் நிலவரி தள்ளுபடிகளை காட்டும் வருடாந்திர பதிவேடாகும். பருவநிலை சரியில்லாமல் எப்போதாவது ஏற்படும் தரிசு பயிர் இழப்பு இவற்றிற்கு கொடுக்கும் தள்ளுபடிகளுடன் நிலையான தள்ளுபடிகளையும் இதில் சேர்க்க வேண்டும். இப்பதிவேடு மூன்று பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.

பிரிவு-I

கைப்பற்று நிலங்களில் பருவ நிலை சரியில்லாமல் எப்போதாவது ஏற்படும் தரிசு மற்றும் பயிர் இழப்பு இவற்றின் போது அளிக்கப்படும் தள்ளுபடிகளை (வஜா) எழுதப்படுவதாகும். இது பாசன ஆதாரங்கள் வாரியாக, புல எண் வாரியாக அடங்கல் பதிவுகளில் மகசூல் மதிப்பினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். இப்பதிவேட்டில் தள்ளுபடிக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை வருவாய் கோட்டாட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பட்டாதாரர்களின் கேட்பிலிருந்து கழிக்கப்பட வேண்டும்.புறம்போக்கு நிலங்களின்  சாகுபடிக்கு நிலவரி, நீர்வரி தள்ளுபடி செய்தல் கூடாது.

 பிரிவு-II இது இருபாகங்களைக் கொண்டது.

முதல் பாகம் : பிரிவு - ஐ ல் எழுதப்பட்ட தள்ளுபடி தொகைக்கு பட்டாதாரர் வாரி சுருக்கமாகும்.
இரண்டாம் பாகம் நிலையான தள்ளுபடிகளைக் கொண்டதாகும். நிலையான தள்ளுபடிகள் என்பது இறவை அலியினேசன் நில ஆர்ஜிதம் நீண்டநாள் குத்தகைவரி தள்ளுபடி ஆகும்.
பிரிவு-III

வழக்கத்திற்கு மாறாக புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றின் காரணமாக ஒரு சில நிலப்பகுதிகளுக்கு வருவாய் வாரிய நிலை ஆணை எண்14ன் கீழ் அரசு நிலவரி தள்ளுபடி செய்து ஆணைகள் பிறப்பிக்கும் நிலையில் இப்பிரிவில் எழுதப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்: 6 (தண்ணீர் தீர்வைப் பட்டி)

அனுமதிக்கப்பட்ட அரசு பாசன ஆதாரத்திலிருந்து நீர்ப்பாசனம் பெறும் திட்ட ஒரு போக நஞ்சை நிலங்களில் 2ம் போக சாகுபடி பரப்பிற்கும் புஞ்சை மானாவாரி நிலங்களில் நீர்பாய்ச்சப்பட்ட 1 மற்றும் 2ம் போக சாகுபடி பரப்பிற்கும் புறம்போக்கு நிலங்களில் நீர்ப்பாய்ச்சப்பட்ட சாகுபடி பரப்பிற்கும் விதிக்கப்படும் தண்ணீர் தீர்வையினையும் புறம்போக்கு  நிலங்களுக்கு  விதிக்கப்படும் தண்டத் தண்ணீர் தீர்வையும் காட்டும் மாதாந்திர கணக்கு ஆகும். இக்கணக்கு அடங்கலில் உள்ள சாகுபடி விஸ்தீர்ணத்தை  ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். பாசன ஆதாரம் வாரியாக நஞ்சை, புஞ்சை புறம்போக்கு என வகைபாடு வாரியாக புல எண்கள் வாரியாக வரிசையாக எழுதப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 25ந் தேதி வருவாய் ஆய்வாளர்கள்  கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று தங்களது குறிப்புரையுடன் வட்டாட்சியர் ஆணை பெற தவறாது அனுப்பிட வேண்டும்.
கடந்த பசலியில் பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி விதிக்கப்பட்டிருந்தால் நடப்பு பசலியில் அந்த புல எண்கள் தவறாது பார்வையிடப்பட்டு கணக்கிடுதல் வேண்டும். கம்மி இனம் ஏதேனம் இருந்தால் அவற்றை கண்டறிந்து நடப்பு பசலியில் தண்ணீர் பாய்ச்சப்படவில்லையென அடங்கலில் குறிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
புறம்போக்கு நிலங்களில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை வழியாக முறையற்ற நீர்பாசனம் செய்யப்பட்ட இனங்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டத்தீர்வை விகிதம் வருவாய் நிலை ஆணை எண்4ல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விதிக்கப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:7

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஆக்ரமணம் நீண்டகால / குறுகிய கால குத்தகைகள் முதலான அரசுக்கு வரவேண்டிய ப ல்வேறு வருவாய் இனங்கள் குறித்து எழுதப்படும் வருடாந்திர பதிவேடாகும். இதனை இரு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.
பிரிவு - I ஆக்ரமணங்கள் பற்றியது.
இப்பதிவேட்டில் அரசு புறம்போக்கில் ஆக்ரமணம் செய்பவர்களுக்கு ஆக்ரமணப்பட்டி(பி.யாதாஸ்து) கொடுக்கப்பட்டு வட்டாட்சியரிடம் உரிய ஆணைகள் பெற்று பி யாதாஸ்துகளை பட்டா எண் வாரியாக வரிசைப்படுத்தி கணக்கு தயாரித்தல் வேண்டும்.
பிரிவு - II இதர வருவாய் பற்றியது
ஆக்ரமணத்திற்கான தண்ணீர் தீர்வை அபராத தண்ணீர் தீர்வை , அபராத தீர்வைக்கான உள்@ர் மேல் வரிகள் குறுகிய கால குத்தகை தொகைகள்(பகுதி) அதற்கான உள்@ர் மேல்வரிகள் பொதுப்பணித்துறை குத்தகை ஆறிடசில் வரி / தள்ளுபடி (River Wash) அதாவது இயற்கை சீற்றத்தினால் புயல், மழை, வெள்ளம், சூறாவளி, பூகம்பம் ஆகியவற்றினால் பட்டாதாரர்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டு அந்நிலங்களில் பெரிய ஆறுகள் திசைமாறி பட்டா நிலங்கள் பெரிய ஆறாக மாறும் பொழுது அந்நிலங்களுக்கான நிலவரி தள்ளுபடி ஒவ்வொரு பசலியிலும் செய்த தொகை, ஆகியவற்றின் மீதான விதிக்கப்படும் மேல் வரிகள் மற்றும் நிலவரி தள்ளுபடி செய்ததை காட்டப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்: 8 ஏ மற்றும்  8 பி

அரசு ஆதாரங்களிலிருந்து நீர்ப்பாசனம் பெறப்பட்ட அனைத்து நிலங்களிலிருந்தும் கிடைக்கக் கூடிய மொத்த வருவாயினைக் காட்டும் வருடாந்திர கணக்காகும். முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பாசன ஆதாரங்கள் தொடர்பான கணக்கினை 8ஏ படிவத்திலும்,  3,4,5ம்  வகுப்பு பாசன ஆதாரங்கள் தொடர்பான கணக்கினை 8 பி படிவத்திலும் எழுத வேண்டும். ஒவ்வொரு பாய்ச்சல் ஆதாரத்திற்கும் வாய்க்கால் வாரி தனித்தனியாக எழுதப்பட வேண்டும். கிராம கணக்கு எண் 2,6,9ஏ ஆகியவற்றின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்: 9 ஏ

1963 ம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல் தீர்வை மற்றும் கூடுதல் தண்ணீர் தீர்வை சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வருவாயினைக் காண்பிக்கும் வருடாந்திரப் பதிவேடாகும். அடங்கல் மற்றும் 6 நெம்பர் தண்ணீர் தீர்வை கணக்கைக் கொண்டு ஒவ்வொரு பசலி வருவாய்  தீர்வாயத்தின் போது எழுதப்படும் கணக்காகும்.
நஞ்சை நிலங்களுக்கு தனிப்பதிவேடும் புஞ்சை மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கென தனிப்பதிவேடுமாக இருபதிவேடுகளாக தயாரிக்க வேண்டும். இவ்விரு பதிவேடுகளிலும் நிர்ணயிக்கப்படும் மொத்த கேட்பு ஒரு பட்டாதாரருக்கு கூடுதல் நிலவரி என்பதாகும்.

கிராம கணக்கு எண்:10 பிரிவு ஐ (சிட்டா).

கிராமத்தில் பட்டாதாரர் வாரியாக கைப்பற்றில் உள்ள நஞ்சை,புஞ்சை மானாவாரி நிலங்களையும் அதற்கான தீர்வையினையும் காட்டும் பதிவேடாகும். இப்பதிவேடு ஐந்தாண்டுகளுக்கொருமுறை எழுதப்பட வேண்டும். இப்பதிவேட்டில் உள்ள மொத்த பக்கங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றும் முத்திரையும் பதிவேட்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாறுதல்கள்  செய்யும் பொழுது தொடர்புடைய  பட்டாக்களில்  உரிய மாற்றங்கள் செய்து அதற்குரிய வட்ட அலுவலக  ஆணையினைக் குறிப்பிட்டு வருவாய்  ஆய்வரின் சுருக்கொப்பம் பெறப்பட வேண்டும். மாற்றத்திற்கு ஏற்றவாறு பட்டாகைப்பற்று சுருக்கம் பசலிதோறும் தவறாது போட வேண்டும். நிபந்தனைக்குட்பட்டு  ஒப்படை செய்யப்பட்ட நிலங்களை ஒப்படை பெற்றவருக்கு ஏற்கனவே பட்டா எண் இருப்பின் அதில் சேர்க்காது தனியே  நிபந்தனை பட்டா எண் கொடுத்து தனியே எழுதப்பட வேண்டும்.
மேலும் சிட்டாவில் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பட்டாதாரர்களின் பெயரை சிகப்பு மையினால் எழுதப்பட வேண்டும்.
கிராம கணக்கு எண்: 10 பிரிவு II
பட்டா வாரியாக ஒவ்வொரு பசலிக்கும் நிர்ணயிக்கப்படும் மொத்த நிலவரி, கூடுதல் நிலவரி கேட்பினைக் காட்டும் வருடாந்திர கணக்காகும். கிராம கணக்கு 5(i) (ii) (iii)இ6ஏஇ(i) (ii)இ 9ஏஇ10(i) நஞ்சை, புஞ்சை தீர்வை வஜா பதிவேடு ஆகிய கணக்குகளின் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு எழுத வேண்டும். இதில் பத்திவாரி கூடுதல் சரியாக போடப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:10ஏ.

இக்கணக்கு சாதாரணமாக “வாரிசுப்பட்டி” என குறிப்பிடப்படும் இறந்து போன பட்டாதாரர்களின் பெயரினையும் மேற்படி பட்டா நிலங்கள் வாரிசு முறையில் மாற்றப்பட வேண்டிய நபர்களின் பெயரினையும் காண்பிக்கும் மாதாந்திர கணக்காகும்.
ஒவ்வொரு மாதத்திலும் நேரிடுகிற பட்டாதாரர்களின் இறப்பு இனங்களை எழுதி (இரு நகல்கள்)சரக வருவாய் ஆய்வர்கள் மூலமாக வட்ட அலுவலகத்திற்கு ஆணை பெற்று ஒரு நகல் கிடைக்கப் பெற்றவுடன் அவ்வாளை குறித்து தொடர்புடைய புலங்கள் சம்பந்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் மாதந்தோறும் 25ந் தேதி இக்கணக்கு சரக வருவாய் ஆய்வர்கள் மூலமாக வட்டாட்சியருக்கு  அனுப்பப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண் :10சி

பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வட்ட அலுவலகத்திலிருந்து வரப்பெறும்  மனுக்கள், வாரிசு பட்டிகள், அனுபோக  பட்டிகள் ஆகியவற்றை காண்பிக்கும் வருடாந்திர கணக்காகும். இப்பதிவேடு இருபிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
பிரிவு 1. வட்ட அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெறும் பட்டா மாறுதல் மனுக்கள் குறித்த பதிவேடு.
பிரிவு.2. கிராம நிர்வாக அலுவலர்களால் வட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்படும் வாரிசுபட்டி அனுபோக பட்டி இவைகளை காண்பிக்கும் பதிவேடு.

கிராம கணக்கு எண்:11
இது ஒவ்வொரு பட்டாதாரருக்கு அளிக்கப்படும் பட்டா படிவமாகும், இது கிராம கணக்கு எண்.10(1) சிட்டாவின் தூய நகலே ஆகும்.
கிராம கணக்கு எண்:11
7ம் நெம்பர் கணக்குபடி பல்வகை வருவாய்த் தொகையினை காட்டும் பட்டா வடிவாகும்.
கிராம கணக்கு எண்: 12

இக்கணக்கு கிராமம் முழுமைக்கும் ஒரு பசலிக்குரிய மொத்த நிலவரி கேட்பினைக் காட்டும் வருடாந்திர பதிவேடாகும். கிராம கணக்கு எண் 2,3 ஏ மற்றும் 10பிரிவு (ஐஐ) ன் பதிவுகளை ஆதாரமாக கொண்டு எழுத வேண்டும். இறுதியில் கிராம கணக்கு எண் 4ன் படி அரசிறைக்கழிவுத் தொகை, கணக்கு எண் 2 சின் அரசுக்கு சொந்தமான மரங்களின் வருடாந்திர மகசூல் ஏலத் தொகை, பாசிக்குத்தகை ஆகியவற்றையும் குறிக்க வேண்டும்.

கிராம கணக்கு எண்: 13(ரோஜ் வாரி)

கிராமத்தின் தினசரி வசூலை காண்பிக்கும் சிட்டாவாகும் “ரோஜ்வாரி” என வழக்கத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறது. பசலி துவக்கத்தில் (ஜுலை -1ம் தேதி) தொடங்கப்பட வேண்டும். இப்பதிவேட்டின் பக்கங்கள் எண்ணிடப்பட்டு வட்ட அலுவலகத்தில் சான்றும், முத்திரையும் பெற்றிருக்க வேண்டும். பற்றுச்சீட்டு மூலம் (கிராமக் கணக்கு எண் :18) வசூலிக்கப்படும் எல்லா தொகையும் இப்பதிவேட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு இருசால் தேதியின் போதும் இக்கணக்கினை முடித்து வசூலான முழுத் தொகையும், இக்கணக்கின் நகல் ஒன்று தயாரித்து, செலுத்துச் சீட்டுடன் வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பற்றுச்சீட்டு மூலம் வசூலிக்கப்படும் எல்லா தொகையும் இப்பதிவேட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதா என்பதை சரக வருவாய் ஆய்வர்கள் கிராமங்களில் முகாமிடும் போது தணிக்கை செய்யப்பட வேண்டும், தணிக்கையில் கீழ்கண்ட இனங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

1.இருசால் தேதியில், வசூல் செய்யப்பட்ட தொகை முழுமையும் இருசால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2.கிராம நிர்வாக அலுவலர் தன்கையில் ரூ.1000க்கு மேல் கையிருப்பு வைத்திருக்கக் கூடாது.
3.வசூல் செய்யப்பட்ட தொகைக்கும் குறைவான தொகை இருசால் செய்யப்பட்டிருக்கக் கூடாது.
4.வசூல் செய்யப்பட்ட தொகை, பற்றுச் சீட்டு அசல் மற்றும் இரண்டு அச்சிடப்பட்ட நகல்களிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசம் இருக்கக் கூடாது.
5.தண்டல் தொகை சரியாக கட்டப்படாமல் குறைவாக கணக்கிடப்பட்டு இருசால் செய்யப்படக் கூடாது.
6.பற்றுச்சீட்டில் காட்டப்பட்டுள்ள தொகை முழுமையாக வசூல் செய்யப்பட்டு, இருசால் செய்யப்பட  வேண்டும்.
7.பற்றுச் சீட்டில் இருபுற மை படிதாள் (Double side coated carbon) உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
8.வசூல் காலங்களில் அடிக்கடி முகாம் சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
9. சில ரயத்துகளிடமிருந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்று கணக்கு எண்: 13ல் உள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும். வசூல் காலங்களில் அடிக்கடி சோதனை மேற்கொள்வதன் மூலம் அரசு பணம் கையாடல் தடுக்க வழி வகுக்கும்.
கிராம கணக்கு எண்:14

ஒவ்வொரு பட்டாதாரரிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட தொகையினை 13ம் எண் (ரோஜ்வாரி) கணக்கிலிருந்து வசூலிக்கப்பட்ட தினத்தன்று எடுத்து எழுதப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் எடுத்து எழுதுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பட்டாவிற்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட வேண்டும். இக்கணக்கு , நடப்பு பசலி கேட்பு, முந்தைய பசலி நிலுவை மற்றும் அபராதத்தொகை ஆகியவற்றிற்கு தனித்தனியே எழுதப்பட வேண்டும். நடப்பு பசலி கேட்பினை பொருத்த மட்டில் ஜமாபந்தி முடிவுற்றவுடன் கணக்கு எண்:10 பிரிவு 2ல் கண்டுள்ள பதிவுகளின்படி எடுத்து  எழுதப்பட வேண்டும். முந்தைய பசலி நிலுவையை பொருத்தமட்டில் பசலி நிலுவைக்கான பதிவேட்டில் முந்தைய பசலி கணக்கு முடிக்கப்பட்ட கிராமக் கணக்கு எண்:14-ன் படியுள்ள நிலுவையினை கேட்பாக எடுத்து எழுதப்பட வேண்டும். அபராதத் தொகைக்கு கிராமக் கணக்கு எண்:17ல் கணக்கிட்டுள்ளபடி அபராதத் தொகை கேட்பாக எடுத்து எழுதப்பட வேண்டும்.

மேலும், நடப்பு பசலிக்கான கேட்பு பதிவேட்டில், முந்தைய  பசலி கிராமக் கணக்கு எண்:14சி-யில் கணக்கிடப்பட்டுள்ள அதிக வசூல் தொகையினை பட்டா வாரியாக, முன்பண வசூலாக பசலி ஆரம்பத்தில் சிகப்பு மையினால் வரவு வைத்து சரக வருவாய் ஆய்வாளர் சான்று கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
வசூல் விபரங்களை, தினத்தோறும் கணக்கு எண்:13-லிருந்து பட்டா வரியாக எடுத்து எழுதப்பட வேண்டும். பசலி முடிவில் (ஜுன் 30) பட்டா வாரியாக கூடுதல் போட்டு பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலுவை இருக்கிறதா என்றும், கேட்புக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதா என்றும் கேட்புக்கு மேல் வசூல் செய்யப்பட்டிருப்பின் அதிக வசூலாக கருதி கணக்கு எண்:14சி-யில் எடுத்து எழுதப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்: 14சி
ஒவ்வொரு பசலியிலும் பட்டா வாரியாக அதிக வசூல் விபரங்களை காண்பிக்கும் பதிவேடு. இக்கணக்கு மூன்று பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.
முதல் பிரிவில் அதிக வசூல் உள்ள அதே பட்டாக்களுக்கு அடுத்து வரும் பசலிகளில் சரி கட்டக் கூடிய அதிக வசூல் தொகையினை குறிக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவில் அதிக வசூல் உள்ள பட்டாக்களுக்கு அடுத்து வரும் பசலிகளில் சரிகட்ட இயலாததும் ரொக்கமாக பட்டாதாரர்களுக்கு திருப்பி அளிக்கக் கூடியதுமான அதிக வசூல் தொகையினைக் குறிக்க வேண்டும்.
மூன்றாவது பிரிவில் 10 பைசாவிற்கு குறைவாக உள்ள அதிக வசூல் தொகையினை குறிக்க வேண்டும்.

 

கிராம கணக்கு எண்:15

ரோஜ்வாரியில் (கணக்கு எண்:13) பற்றுச்சீட்டுப்படி பல்வேறு இனங்களில் வரவு வைக்கப்பட்ட தொகையினை அரசு கருவூலத்தில் செலுத்துவதற்குரிய  படிவம் செலுத்துச் சீட்டு ஆகும். இப்படிவம் தற்போது நடைமுறையில் இல்லை. இதற்குப் பதிலாக எம்.டி.சி செலான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரக வருவாய் ஆய்வாளர்கள் 13 கணக்கு பதிவேட்டுடன் இருசால் செய்யப்பட்ட செலான்களை ஒத்து பார்க்க வேண்டும்.

கிராம கணக்கு எண்:16

பசலி வாரியாக ஒவ்வொரு மாத கடைசியிலும், ஒவ்வொரு பட்டாதாரரைப் பொறுத்து அவருக்கான கேட்பு, வசூல், அதிக வசூல், நிலுவைத் தொகையினை காண்பிக்கும் கணக்காகும். இக்கணக்கு நிலுவைப் பசலிக்கு தனியாகவும், நடப்பு பசலிக்கு தனியாகவும், அபராதத் தொகைக்கு தனியாகவும், எழுதப்பட வேண்டும். மாதத்தின் கடைசி இருசாலுடன் இக்கணக்கினை வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:17

ஒவ்வொரு பட்டாதாரரும் செலுத்த வேண்டிய அபராதத் தொகை குறித்த கேட்பு,வசூல், பாக்கி ஆகியவற்றின் விபரங்களை காண்பிக்கும் பதிவேடாகும், நிலவரியானது  எந்த பசலிக்குரியதோ அந்த பசலி  உட்பட இரண்டு ஆண்டு காலத்திற்குப்  பிறகு, தொகை செலுத்த தவறிய காலத்திற்கு ஆண்டொன்றிற்கு நூற்றுக்கு 5 விழுக்காடு வீதம் அபராதம் விதிக்கப்படும். இந்தக் கணக்கை ஒவவொரு பசலி ஆண்டிற்கும் தயாரித்து மாதத்தின் கடைசி இருசாலுடன் 16-வது எண் கணக்கு மற்றும் செலுத்தப் பட்டியல் (15-வது எண் கணக்கு) ஆகியவற்றுடன் வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 

கிராம கணக்கு எண்:18

பட்டாதாரரிடமிருந்து நிலவரி உள்ளிட்ட பல்வகை வருவாய்  இனங்களுக்காக கேட்புத் தொகை வசூல்  செய்யும் போது அவரிடமிருந்து தொகை பெற்றுக் கொண்டமைக்கு கிராம நிர்வாக அலுவலரால் அவருக்கு அளிக்கப்படும் பற்றுச் சீட்டாகும், அச்சிடப்பட்ட எண்ணுடன் கூடிய பற்றுச்சீட்டுப் புத்தகம். முப்பிரதிகள்  அடங்கியது. வட்ட அலுவலகத்தில் முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு சமயத்தில் ஒரு புத்தகம்( வசூல் காலம் தவிர) மட்டும் வழங்கப்படும். அசல் பிரதி ரயத்துக்கும், இரண்டாவது பிரதி இருசால் செய்ய அனுப்பும்போது செலுத்துச்சீட்டுடன் அனுப்புவதற்கும் உரியதாகும். பற்றுச் சீட்டுகளில் எழுதும் போது கிராம நிhவாக அலுவலர் இருபுற மைபடி(Double side coated carbon) தாளினை உபயோகிக்க வேண்டும். பட்டாதாரரிடமிருந்து தொகை வசூலிக்கும்போது. முதலில் பசலி பாக்கி ஏதுமிருந்தால் அதற்கும் , அப்பாக்கியின் மீதான அபராதத்தொகைக்கும், வரவு வைத்துக்கொண்டபின் மீதம் ஏதுமிருந்தால், அதனை நடப்பு தொகைக்கு வரவு வைக்க வேண்டும். வசூல் காலங்களில் கிராமங்களில் அடிக்கடி முகாமிட்டு நிலவரி மற்றும் இதர வருவாய்  வசூல் சரியான முறையில் செய்யப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:19

பத்தி 1  : பிறப்பு பதிவேடு
பத்தி 2  : இறந்து பிறத்தலுக்கான பதிவேடு
பத்தி 3  : இறப்புப் பதிவேடு
மேற்குறித்த பதிவேடுகள் சனவரி தொடக்கம் முதல் டிசம்பர் இறுதி முடிய ஒவ்வொரு ஆண்டிற்கும் பராமரிக்கப்பட வேண்டும். அச்சிட்ட பக்க எண்கள் இட்டு ஒவ்வொரு ஆண்டும் வட்ட அலுவலகத்திலிருந்து வழங்கப்படும்.
இப்பதிவேடுகளிலிருந்து  பிரதி  மாதம் 3ம் தேதிக்கு முன்னதாக கிராம மொத்த பிறப்பு, இறந்த, பிறந்த பதிவுகளின் சுருக்கத்தினை படிவம் 19(ஏ)ல் வட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழ் நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000படி திருத்தியமைக்கப்பட்ட படிவங்களை கையாள வேண்டும்.
சரக வருவாய் ஆய்வர்கள் கிராமங்களுக்கு முகாம் செல்லும் பொழுது இப்பதிவேட்டினை பார்வையிட்டு கையொப்பம் இட வேண்டும்.
கிராம கணக்கு எண்: 19 பிரிவு III
இப்பதிவேட்டில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் இயற்கை மரணம் நீங்கலாக கால் நடைகள் வியாதியாலோ, விஷக்கடி, கொடிய விலங்குகள் அடித்து கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்கள் இப்பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
கிராம கணக்கு எண்: 19 டி
அம்மை குத்தப்பட்டு பாதுகாப்பு பெற்றிராத குழந்தைகள் பற்றிய விவரங்களைக் காட்டும் பதிவேடாகும்.

கிராம கணக்கு எண்:  20

கிராமத்தில் பெய்யும் மழை குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எழுதி பராமரிக்கப்படும் “மழை கணக்கு” பதிவேடாகும், மழையின் அளவு மில்லி மீட்டரில் எழுதப்பட வேண்டும். இக்கணக்கின் நகல் பிரதி மாதம் 25ந்தேதி சரக வருவாய் ஆய்வர் மூலம் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:  21

5 ஆண்டுகளுக்கொருமுறை எடுக்கப்படும் கால்நடைகள் பற்றிய கணக்கெடுப்பை அனுசரித்து கிராமத்தில் இருக்கும் விவசாய கால் நடைகள் மற்றும் விவசாய கருவிகள் எண்ணிக்கையை காட்டும் பதிவேடு.

கிராம கணக்கு எண்:  23

இக்கணக்கு பட்டாதாரர்களை அவர்கள் செலுத்தம் அடிப்படை நிலவரியின் தகுதியில் பல்வேறு வகை மதிப்புள்ள பகுதிகளாக கணக்கிடப்பட்டு தயாரிக்கப்படுவதாகும். ஒரு ரூபாய் அதற்கு குறைவாக அடிப்படைவரி செலுத்துபவர்கள் ஒரு ரூபாயிலிருந்து ரூ.10/- வரை அடிப்படைவ ரி செலுத்தும் பட்டாதாரர்கள் ரூ.10/-முதல் ரூ.30/-வரை செலுத்தும் பட்டாதாரர்கள் என ஒன்பது வகையாக பட்டாதாரர்களைப் பிரித்து ஒவ்வொரு வகையிலும் உள்ள பட்டாதாரர்கள் இவர்களின் கைப்பற்று புஞ்சை நஞ்சை தீர்வை விவரம் இக்கணக்கில் எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் தீர்வை மதிப்பீட்டின்படி தனிப்பட்டா, கூட்டுப்பட்டா இவைகளுக்கு தயாரிக்கப்பட வேண்டும். மேற்காணும் விவரங்களை கிராம கணக்கு எண் 10(ii) சிட்டாவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கு  ஆண்டு தோறும் தயாரிக்கப்பட வேண்டும்.

கிராம கணக்கு எண்:  24

கனிமங்களைப் பற்றிய ஆண்டு பதிவேடாகும். கிராமத்தில் வெட்டி எடுக்கும் கனிமங்களைப் பற்றிய விவரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் முடிய ஒராண்டிற்கு எழுதப்பட வேண்டிய கணக்கு ஆகும்.
பொது:
1) மேற்காணும் கிராம கணக்குகள் தவிர்த்து கிராமத்துக்குரிய வரைபடம், புலப்பட பதிவேடு (கு.ஆ.டீ) டி.ஸ்கெட்ச் ஆகியவற்றையும் கிராம நிர்வாக அலுவலர்கள் வைத்து வர வேண்டும்.
2) உரிய ஆணையின்றி கிராம கணக்குகளில் எவ்வித திருத்தமும் செய்யக் கூடாது.
3) சாகுபடி கணக்கு, ஆக்ரமணபட்டி தண்ணீர் தீர்வை பட்டி ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக பசலி ஆண்டுக்கு ஒரே தடவையாக கொடுக்கக் கூடாது அந்தந்த மாதங்களில் 25ந் தேதிக்கு முன்னதாக சரக வருவாய் ஆய்வர்கள் பெற்று வட்டாட்சியருக்கு அனுப்பிட வேண்டும்.
4) ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கு, கோவில் புறம்போக்கு இவைகள் இந்நிறுவனங்களின் உபயோகத்திற்காக ஆக்ரமணம்  செய்யப்பட்டால் இவைகளை ஆக்ரமணமாகக் கருதக் கூடாது.
5) கிராம கணக்குகள் நடப்பு பசலி மற்றும் முந்தைய பசலி கணக்குகள் தவிர்த்து முந்தைய பசலி கணக்குகள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் வட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

அரசாணை (நிலை) எண்:360 வருவாய் நிதி 4(2) துறை
நாள்:6.7.2000ல் வழங்கப்பட்ட ஆணைகளின்படி
(1) நீக்கப்பட வேண்டிய கிராம கணக்ககளின் விபரம்

கிராம கணக்கு எண்

தலைப்பு

நீக்கப்பட வேண்டியதின் காரணம்

(1)

(2)

(3)

1.

சாகுபடி(Cultivation) பற்றிய மாதாந்திர பதிவேடு (Monthly Register)

அடங்கல் பதிவேட்டினை கணினி மயமாக்கப்பட்ட உடன் இக்கணக்குகளை நீக்கலாம்

1.ஏ

சாகுபடி செய்யப்பட்ட வௌ;வேறு பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டி.

அடங்கல் பதிவேட்டினை கணினி மயமாக்கப்பட்ட உடன் இக்கணக்குகளை நீக்கலாம்.

2டி.

கிராமத்தில் சில பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாய்ச்சப்பட்ட பரப்பில் விவரங்களை காட்டும் விவரப்பட்டி

இக்கணக்குகளின் விவரங்கள் கணக்கு எண் 2இலும் மற்றும் “அ”பதிவேட்டிலும் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

2எப்.

கிராமத்தில் பல்வேறு வகை நில வகுப்புகளின் பரப்புகளைக் காண்பிக்கும் விவரப்பட்டி

இக்கணக்குகளின் விவரங்கள் கணக்கு எண் 2இலும் மற்றும் “அ”பதிவேட்டிலும் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

4.

அனைத்து வகை அரசிறைக்கழிவுகளைக் (டீநசணை னுநனரஉவழைn) காட்டும் விவரப்படி.

அத்தகைய அரசிறைக் கழிவுகள் (டீநசணை னுநனரஉயவழைn) தற்சமயம் கிராமங்களில் செய்யப்படுவதில்லை. எனவே  நீக்கலாம்.

8ஏ.

I மற்றும் II - ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் நீர்ப்பாய்ச்சப்பட்ட நிலங்களைக் காண்பிக்கும் விவரப்படி.

இக்கணக்குகளை நிர்வகிப்பதினால் பெறப்படும் விவரங்கள் “அ” பதிவேட்டிலும் காணப்படுவதினால் இதனை நீக்கலாம்.

8பி.

III-ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாசனம் பெற்ற நிலங்களின் விவரப்பட்டி.

இக்கணக்குகளை நிர்வகிப்பதினால் பெறப்படும் விவரங்கள் “அ” பதிவேட்டிலும்  காணப் படுவதினால் இதனை நீக்கலாம்.

10சி
மற்றும்
10டி.

வருவாய் பதிவுகளை மாற்றுவதற்காக (Transfer of Registry) கிராம நிர்வாக அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டு வரும் துணைப் பதிவேடு (Subsidiary Register)   

கிராம கணக்கு எண் 3-இல் இதன் விவரங்கள் பெறப்படுவதினால் இவைகள் நீக்கப்படுகின்றன.

23.

பலவகை  மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டும் விவரப்பட்டி. 

இக்கணக்கு, கணக்கு எண்10(1) கணக்குடன் சேர்த்து பேணப்பட ஆணையிடப்படுவதால் நீக்கப்படுகிறது.

 

 

 

               

இணைப்பு - II
(1) தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டிய கிராம கணக்குகளின் விபரம்.

கணக்கு எண்

தலைப்பு

2

கைப்பற்று நிலத்தையும், சாகுபடி நிலத்தையும் புலவாரியாக காட்டுகின்ற வருடாந்திர அறிக்கை.

2சி.

அரசு, குடிகள் ஆகியோருடைய தோட்டம் மற்றும் தோப்புகளைக் குறித்த விவரப்பட்டி.

5(iii)

வருவாய் நிலை எண் 14-இன் கீழ் அளிக்கப்படும் வழக்கத்திற்கு மாறான தள்ளுபடி பற்றிய விவரப்பட்டி.

7.

பல்வகை வருவாயினைக் (ஆளைஉநடடயநெழரள சுநஎநரெந) காண்பிக்கும் விவரப்பட்டி

10(i)

பட்டாவாரியாக ஒவ்வொரு நபருடைய நிலவரித்திட்ட விவரத்தினைக் காண்பிக்கும் சிட்டா. இக்கணக்கு முன்பு பேணப்பட்டு வந்த கணக்கு எண்-10(ஏ) உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். மேலும் தற்சமயம் கணக்கு எண்23-இல் பேணப்பட்டு  வருகின்ற  விவரங்களையும் சிட்டாவின் கடைசிப் பக்கத்தில் காட்டக் கூடியதாக பேணவேண்டும். இக்கணக்கை கணினி மயமாக்கும்பொழுது கண்டிப்பாக கணினியில் கொண்டு வரவேண்டும்.

10(ii)

ஓவ்வொரு கிராமத்திலும் நிலவரித்திட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலங்களின் விவரம்.

11.

(Particulars of Settlement in each village)

12.

பட்டா படிவம் (இப்படிவம் கிராமக் கணக்கு எண் 11ஏஆன பல்வகை வருவாய்க்கான பட்டா வடிவ விவரங்களை உள்ளடக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

13.

மொத்த கிராமத்திற்கான நிலவரித்திட்ட சுருக்க விவரப்பட்டி.

14(பி)

தினசரி  வசூல் சிட்டா

15.

வசூலிக்க இயலாத பாக்கிகளுக்கான விவரப்பட்டி.

18.

செலுத்துப்பட்டியல்

19.

பற்றுச்சீட்டு படிவம்

20.

பிறப்புகளையும், இறப்புகளையும் மற்றும் கால்நடை வியாதிகளையும், கால்நடை இறப்புகளையும் மற்றும் அம்மை குத்திப் பாதுகாப்புப் பெற்றிராத குழந்தைகளை பற்றிய பதிவேடு.

21.

மழை மற்றும் நீர் வழங்கு விவரப்பட்டி

24.

கால்நடைகளையும் மற்றும் விவசாயக் கருவிகளையும் பற்றிய விவரப்பட்டி இக்கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புள்ளிவிவரம் எடுக்காமல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிடப்பட்ட நாளில் புள்ளிவிவரம் எடுத்து புதுப்பிக்கப்பட வேண்டும்.
கிராமத்தில் கிடைக்கத் தக்க கனிமங்களைப் பற்றிய விவரப்பட்டி.

                               
மேலும்  கணக்கு எண்:3 தொடரும்போது, அதன் வரிசை எண் 9-ஐ 9(a) மற்றும் 9(b)எனப் பிரித்துக் காட்ட வேண்டும். 9(ய)ல் விற்பனையாளர் பெயரும், 9(a) இல் வாங்குபவர் பெயரும் குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக 9(b)இல் வாங்குபவர் பெயர் குறிப்பிடும் பொழுது விரிவாக,  நில ஒப்படை நிகழ்வாக இருந்தால் அதன் D.K..நம்பரும், நீதிமன்ற ஆணைகளின் (Decree) மூலம் பெறப்பட்டு இருந்தால் அவற்றின் விவரம் மற்றும் “பவுதி” (Pouthi) நிகழ்வாக இருந்தால் இறந்தவரின் பெயர் மற்றும் விவரம் குறிப்பிடப்பட வேண்டும். வரிசை எண்9(டி) -இலும் இவ்வாறே கீழ்க்காணும் நபர்களின் விவரம் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்.
(1) வாங்கியவர்
(2) ஒப்படை பெற்றவர்
(3) நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் பெற்றவர் (Decree holder) மற்றும்
(4) சட்டமுறைப்படி   பெற்றவர்.
வாய்மூல விற்பனை ஏற்பட்டால், அவற்றையும் கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியருக்கும் தெரியப்படுத்தி கணக்குகளில் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் கணக்கு எண் 3(a) இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தனியாக பராமரிக்காமல் அவற்றை கணக்கு எண் 3-இன் சுருக்கமாக (Abtract for Account No.3)குறிப்பிட வேண்டும்.
கிராம கணக்கு எண்கள் 5(1),5(11) மற்றும் 9 ஆகியவை பின்னால் முடிவு செய்யப்படும்.
கணக்கு எண் 6 : கிராம கணக்கு எண் 6 மற்றும்  6 (a) இரண்டும் நீர்ப்பாசனம பற்றிய கணக்காக இருப்பதினால் அவற்றை ஒன்றாக இணைத்து கிராம கணக்கு எண் 6 என கணக்காக கடைபிடிக்க வேண்டும்.
கிராமக் கணக்குகள் 14, 14(ஏ), 14(சி),16 மற்றும் 17 ஆகியவை ஒருங்கிணைத்து, கிராமக் கணக்கு எண் 14 என ஒரே பதிவேட்டில் (Regiter - இல்) அனைத்து விவரங்களும் பராமரிக்கப்பட வேண்டும்.

 

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.