புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
தமிழ்நாடு நலிந்தோர் குடும்பநல உதவித்திட்டம்

          நலிவுற்ற ஒரு குடும்பத்தில் பொருளீட்டும் முக்கிய நபர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வருமான இழப்பால் துயருறும் அக்குடும்பத்தின் துயர் களைந்திட தமிழக அரசு அரசாணை (நிலை) எண் 470 நிதி (முதலமைச்சர் பொது நிவாரண நிதி) துறை நாள்:23.5.89ன்படி”தமிழ்நாடு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்” என்ற திட்டத்தினை துவக்கி வருவாய்த்துறை மூலம் செயலாக்கம் செய்து வருகிறது இதன் கீழ் நிவாரணம் வழங்கிட நலிந்தோர் நல திட்ட தனி வட்டாட்சியர் அதிகாரம் பெற்ற அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு கால கட்டங்களில் உதவித் தொகை கீழ்கண்டவாறு வழங்கப்பட்டு வருகின்றது.

23.5.89 முதல் 31.3.90 முடிய ரூ.2000/-(அரசாணை எண் 470 நிதி (மு.பொ.நி.நி)துறை நாள்:23.5.89)

1.4.90 முதல் 21.6.92 முடிய ரூ.3000/-(அரசாணை எண் 755 வருவாய்த்துறை நாள்:10.5.90)

22.6.92 முதல் 28.8.96 முடிய ரூ.5000/-(அரசாணை எண்714 வருவாய்த்துறை நாள்:22.6.92)

29.8.96 முதல் 1.8.98 முடிய ரூ.7500/-(அரசாணை எண் 844 வருவாய்த்துறை நாள்:28.8.96)

2.8.98 முதல் இன்று வரை ரூ.10,000/- (அரசாணை எண் 11 சமூக நலம் மற்றும் சத்துணவு துறை  நாள்:22.1.99)

 நிவாரணம் பெற அடிப்படை தகுதிகள்:

1)”குடும்பம்” என்பது பெற்றோர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் அடங்கிய ஒன்றாகும்.கூட்;டு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தனித்தனி குடும்பமாகக் கருதப்படும்.

2)குடும்பத்தலைவரான ஆணோ, பெண்ணோ இவர்களுல் யார் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாரோ அவர் பொருளீட்டும் நபராக(டீசநயன றுinநெச) கருதப்படுவார்.

3) வருமானம் என்பது கூலி,சுயவேலை, லாபம், வாடகை, வட்டி முதலிய அனைத்து ஆதாரங்கள் மூலம் கிடைக்கக் கூடியவை ஆகும்.

4) வயது மூப்பினாலோ, இயலாமையினாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினாலோ குடும்ப தலைவர் வருமானம் ஈட்டாதவராக இருந்தால் அக்குடும்பத்தில் முக்கிய பொருளீட்டும் நபரை குடும்பத்தை காப்பாற்றுபவராகக் கொள்ளலாம்.

5) ஆனால் குடும்பத்தில் குடும்ப தலைவர் முக்கிய பொருளீட்டுபவராக இருந்து குடும்பத்தில் உள்ள மற்ற பொருளீட்டும் நபர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அக்கும்பம் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியற்றதாகும்.

6) மரணமடைந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

வருமான வரம்பு:

1) ஒரு குடும்பம் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ விவசாயம் அல்லாத வருமானத்தை நம்பியிருந்தால் அனைத்து ஆதாரங்களின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.7200/-க்கு மிகைபடக்கூடாது (அரசாணை எண்.726 வருவாய்(எஸ்)துறை நாள்:5.8.96) குடும்ப ஆண்டு வருமானம் என்பது குடும்பதலைவர் இறப்பதற்கு முன்னதாக ஈட்டிய வருமானம் என கணக்கிற்கொள்ள வேண்டும்.(அரசு கடித எண்.58841/ எஸ்1/93-2 வருவாய்த்துறை நாள்:13.4.93.

2)நிலமில்லாத விவசாயக்கூலி குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கூலி வருமானத்தை நம்பி வாழ்பவர்களாக இருந்தால், அக்குடும்பம் ஏழ்மையான குடும்பம் என கருதப்பட வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.7200/-க்குள் இருக்க வேண்டும்.(அரசாணை எண்.726 வருவாய்த்துறை நாள்:5.8.96).

3) ஒரு குடும்பத்தில் 2.5ஏக்கருக்கு குறைவான பாசன வசதி நிலமோ அல்லது 5 ஏக்கருக்கு குறைவான பாசன வசதியற்ற நிலமோ இருந்தாலும்  அல்லது இவ்விரு வகை நிலங்களின் மொத்தம் 5 ஏக்கர் பாசன வசதியற்ற நிலத்திற்கு ஈடானதாக இருந்தாலோ அக்குடும்பம் ஏழ்மையான குடும்பம் எனக் கொள்ளலாம்.

4) குத்தகை நிலம் சாகுபடி செய்து வந்தால் குத்தகை சாகுபடி பரப்பில் அரைப்பங்கு சொந்த நிலம் என்ற கணக்கில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

நிதி உதவி கோர தகுதி பெற்றவர்கள்:

1) வாரிசு அடிப்படையில் இறந்து போனவரின் மனைவி அல்லது கணவர்.

2) இறந்தவரின் திருமணமாகாத மூத்தமகன் அல்லது மூத்த மகள் (மைனராக இருப்பின் அவர்களது பாதுகாவலர்)

3) இறந்தவரின் பராமரிப்பில் இருந்த தாய் அல்லது தந்தை

4) இறந்தவரின் பராமரிப்பில் இருந்த மூத்த பேரன் அல்லது மூத்த பேத்தி

5) இறந்து போனவரைச் சார்ந்து அவருடன் வாழ்ந்தவர்களுல் வயதில் மூத்தவர்

இதரவகை:

1) இயற்கை மரணம் தவிர்த்து கொலை / தற்கொலை மூலம் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கிடலாம். ஆனால் போதை மருந்து போன்றவற்றை உட்கொண்டதன் மூலம் மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கக் கூடாது. அதே போன்று கொலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தாலும் அக்குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கக் கூடாது.

மேலும் வாரிசுதாரர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் சிறுவர்/சிறுமியராக இருந்தால் உதவித் தொகையினை அவர்களது பெயரில் உரிய வயது நிரம்பும் வரை நிரந்தர வைப்பு கணக்கில் மூலதனம் செய்திட வேண்டும்.(அரசு கடித எண்27512/எஸ்1/90.2 நாள்:9.3.90)

தகுதியற்றவர்கள்:

1) ஆதரவற்ற முதியோர் மற்றும் இதர உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வந்தவர்களின் வாரிசுகள் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற தகுதியற்றவர்கள்.

(அரசு கடித எண் 95 வருவாய்த்துறை நாள்:30.1.95)

2)வெள்ளம், புயல் தீ விபத்து, மின்னல் மற்றும் இடி போன்ற இயற்கை இடர்பாடுகளினாலும் ஜாதிக் கலவரங்களினாலும் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி போன்ற வேறு திட்டங்களின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருந்தால் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற தகுதியற்றவர்கள்.(அரசு கடித எண் 125997/எஸ்1/90-12 வருவாய்த்துறை நாள்:5.7.93)

3) ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் பொருளீட்டக்கூடிய நபர்களாக இருந்து தனியே வசித்து வந்தாலும், அல்லது 18 வயது முடிந்து குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தாலும் பொருளீட்டி வந்த தாய் /தந்தை இறந்து விட்டதற்காக நிவாரண உதவித்தொகை வழங்கக் கூடாது.

(அரசு கடித எண் 21944 / எஸ்1/95-2 வருவாய்த்துறை நாள்:19.5.95)
விண்ணப்பிக்க வேண்டிய முறை:

1) மரணமடைந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை நேரடியாக தனி வட்டாட்சியருக்கு அனுப்பிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களோ சரக வருவாய் ஆய்வர்களோ விண்ணப்பித்தினைப் பெறக் கூடாது.

2) விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அ) அசல் இறப்புச்சான்று          ஆ)குடும்ப அட்டை செராக்ஸ் நகல்
இ)வருமான சான்று            ஈ) பாஸ்போர்ட் அளவு விண்ணப்பதாரரின் போட்டோ-3

3)மரணமடைந்த நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேலும், ஓராண்டுக்குள் கால தாமதமாக விண்ணப்பித்திருந்தால் காலதாமதத்தின் காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் தாமதத்தை மாவட்ட ஆட்சியர் பிழை பொறுத்து ஆணையிடலாம். (அரசுகடித எண்:103454 / எஸ் /90-3 வருவாய்த்துஐற நாள்:3.1.91)

4)மரணமடைந்த நாளிலிருந்து 18 மாதங்களுக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

(அரசுகடித எண் 11262 / எஸ்/94-2 வருவாய்த்துறை நாள்:18.3.94)
விசாரணை செய்ய வேண்டிய முறை:

1.மனு வரப்பெற்றவுடன் தாலுக்கா பதிவேட்டில் பதிந்து விசாரணைக்கு சரகவருவாய் ஆய்வருக்கு அனுப்ப வேண்டும்.

2. விண்ணப்பத்தின் முதுநிலை வரிசை எண் விவரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இதற்கென காத்திருப்போர் விபரம் காட்டும் பதிவேடு முதுநிலை வரிசை அடிப்படையில் தயாரித்து பராமரிக்கப்பட வேண்டும்.

3.சரக வருவாய் ஆய்வர் விண்ணப்பத்தினை 30 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கையினை அனுப்பிட வேண்டும். விண்ணப்பதாரர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி தலைவர் / உறுப்பினர் உள்ளிட்ட கிராமப் பொது மக்கள் சிலரிடம் (குறைந்தது இரு நபர்களிடம்) விசாராணை செய்து வாக்கு மூலம்  பெறப்பட வேண்டும். இறந்துபோனவர் அவரது குடும்ப வருமானம் குறித்து சரியாக கணக்கிட்டு அறிக்கை தர வேண்டும். சிறு /குறு விவசாயிகளாக இருந்தால் நிலத்தின் சொத்து விவரத்திற்கான ஆதாரம், கிராம கணக்கு நகல்கள் இணைக்க வேண்டும். குடும்ப தலைவர் இறந்த பின்னர் வாரிசுதாரர்களின் தொழில் குடும்ப வருமானம் குறித்தும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட வேண்டும். யாருக்கு நிவாரண தொகை வழங்கப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான குறிப்புரையுடன் பரிந்துரை செய்திட வேண்டும்.

சரக வருவாய் ஆய்வர்களிடமிருந்து வரப் பெற்ற விசாரணை மனுக்களில் 10 சதவிகித மனுக்கள் நலிந்தோர் நல திட்ட தனி வட்டாட்சியர் நேரடியாக தல விசாரணை செய்ய வேண்டும். உதவித்தொகை வழங்க தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தனி வட்டாட்சியர் தனது அலுவலகத்திற்கு நேரில் வரச் செய்து விசாரணை மேற்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களை முடிவு செய்தலில் இதற்கென நியமிக்கப்பட்ட நலிந்தோர் நல உதவித்திட்ட தனி வட்டாட்சியர்களின் தீர்வே முடிவானது. இது தொடர்பான மேல் முறையீடுகள் எதுவும் ஏற்க முடியாது. (அரசு கடித எண் 58771/எஸ்1/92-4 வருவாய்த்துறை நாள்:10.3.93)

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.