புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
நில எடுப்பு (LAND ACQUISITION)

      மத்திய  மாநில அரசு துறைகள், அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட பொது காரணங்களுக்காக தேவைப்படும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தை அரசு கையகப்படுத்துதல் என்பது “நில எடுப்பு” ஆகும். இது நில எடுப்பு சட்டம் 1894(மத்திய சட்டம் 1/1894)ன் கீழ் செய்யப்படுகிறது. பின்னர், 24.9.1984ல் இச்சட்டத்தின் பல முக்கிய பிரிவுகளுக்கு முக்கிய திருத்தங்கள் அளித்து இச்சட்டம் நில எடுப்பு திருத்த சட்டம் 68/1984 ஆக திருத்தம் செய்யப்பட்ட சட்டமாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது காரியம் என்பதற்கு சட்டப்பிரிவு 3(எப்) ன் கீழ், எட்டு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கம்பெனிக்காக நிலம் கையகப்படுத்துதல் பொது காரியமாக கருத முடியாது. “நிலம்” என்பது அதில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பயிர்கள் அடங்கும்.

நிலம் கோரும் துறையினரின் விண்ணப்பம்:

பொது காரணங்களுக்காக தேவைப்படும் தனியார் நிலத்தை கையகப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் மாவட்ட ஆட்சியருக்கு படிவம் ஐ ல் விண்ணப்பிக்க வேண்டும் (இணைப்பு XII படிவம் I வருவாய் நிலை ஆணை எண்.90). விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
1)  கூட்டு வரைபடம்
2)  நிர்வாக துறையினர் அனுமதி
3)  நிதி இருப்பிற்கான சான்று
4)  நஞ்சை நிலமாக இருந்தால் அரசிடமிருந்து பெறப்பட்ட அனுமதி
இடதேர்வு:
1)  நஞ்சை நிலங்கள் தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும் நஞ்சை நிலமாக இருப்பின் அரசின் அனுமதி பெற வேண்டும்.
2)  பாசனவசதி பெற்றுள்ள புஞ்சை நிலங்களையும், நஞ்சை நிலங்கள் போன்றே பாவிக்க வேண்டும்.
3)  கோவில் பட்டா நிலங்களை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
4)  சிறு விவசாயிகளின் நிலங்கள்(2ஏக்கருக்கும் குறைவு) ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் ஆகியவற்றை விலக்கிட வேண்டும். (அரசாணை எண்.395 வருவாய்த்துறை நாள்:23.6.94 அரசாணை எண் 363 வருவாய்த்துறை நாள்:28.4.95)
பொதுவாக, நில எடுப்பு அலுவலர் என்பவர் நிதி அதிகார வரம்பிற்கேற்ப (Monetory Limit) வட்டாட்சியரோ, கோட்டாட்சியரோ இருப்பார்கள். 75 ஏக்கருக்கு மேல், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்த வேண்டிய இனங்களில் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் இச்சட்டத்தின் கீழான நடவடிக்கை என்பது 4(1)ன் கீழ் செய்யப்படும் அறிவிப்பிலிருந்து துவங்குகிறது.
4(1) அறிவிக்கை:
4(1) அறிவிக்கை என்பது பொது மக்களுக்கு உத்தேச நில எடுப்பு குறித்து தெரிவிக்கப்படுவது ஆகும். நில எடுப்பு அலுவலர் நிலம் கோரும் துறையினரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற 90 நாட்களுக்குள் நில எடுப்பு சட்டப்பிரிவு 4(1) ன் கீழான வரைவு அறிவிக்கை ஒன்றினை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு பின் வரும் விவரங்களுடன் அனுப்பிட வேண்டும்.
1)  குறிப்பிட்ட படிவத்தில் 4(1) வரைவு அறிவிக்கை
2)  கிராம கணக்குகளின் நகல்
3)  வரைபடங்கள்
4)  சந்தை மதிப்பு நிர்ணயம் செய்திட விலைப்புள்ளி விவரங்கள்
5)  துறையினரின் நிர்வாக அனுமதி
40 ஏக்கருக்கு மேற்படாமலும் நில மதிப்பு 25 லட்சத்திற்கு மிகைப்படாமலும் இருந்தால் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று, மாவட்ட அரசிதழ் மற்றும் உள்@ர் தினசரிகளில் விளம்பரப் படுத்தப்பட வேண்டும்.
75 ஏக்கருக்கு மேற்படாமலும், நில மதிப்பு 50 லட்சத்திற்கு மிகைப்படாமலும் இருந்தால் நில நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெற்று தமிழ்நாடு அரசிதழிலும் உள்ளுர் தினசரிகளிலும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
இதர இனங்களில் அரசின் அனுமதி பெற வேண்டும்.
விளம்பர அறிவிப்பு என்பது மூன்று முறைகளில் செய்யப்பட வேண்டும். 1)அரசிதழ் 2)நில எடுப்பு பகுதியில்  பிரசுரமாகும் இரண்டு நாளேடுகள் 3) மற்றும் நில எடுப்பு பகுதியில்  இவ்விளம்பரத்தின் சுருக்கத்தினை விளம்பரப்படுத்த வேண்டும். இவ்விளம்பரம் ஒன்றுக்கொன்று முந்தியதாக அமையலாம். விளம்பர தேதிகளில் எது கடைசியாக உள்ளதோ அது 4(1) விளம்பர தேதியாகும். மேலும் முதல் விளம்பர தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் இவ்விளம்பர நடவடிக்கை முடிக்கப்பெற வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட 4 (1) அறிவிக்கை நகல் ஒன்றினை நில உரிமையாளரிடம் கொடுத்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் பெற வேண்டும்.

பிரிவு 5 ஏ -ன் கீழ் ஆட்சேபணை குறித்த விசாரணை:

4(1) வரைவு அறிவிக்கை விளம்பரப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு குறையாமல் இடைவெளி அளித்து 5 ஏ விசாரணை மேற்கொண்டிட விசாரணை தேதி குறிப்பிட்டு படிவம் 3 ஏ-ல் நில உரிமை தாரருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நோட்டீஸ் சர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளித்தே 5 ஏ - விசாரணை நடத்தப்பட வேண்டும் விசாரணையின் போது நிலம் கோரும் துறையினரின் பிரதி நிதியும் உடன் இருக்க வேண்டும் விசாரணையின் போது வரப்பெறும் ஆட்சேபனைகள் மீது நிலம் கோரும் துறையினரின் கருத்தினைப் பெற்று நில எடுப்பு அலுவலரின் குறிப்புரையுடன் கூடிய செயல் முறை ஆணைகளுடன் 6ன் கீழான விளம்பல் அறிவிக்கை ஒப்பளிப்பு செய்யும் அலுவலருக்கு (நில நிர்வாக ஆணையர் / அரசு) விசாரணை அறிக்கையினை அனுப்பிட வேண்டும்.நில சீர்திருத்த சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் இதில் வரப்பெறுகிறதா என்பதற்கான விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும். மேற்படி 5ஏ விசாரணையை 4(1) அறிவிப்பு விளம்பரப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 50 நாட்களுக்குள் முடிக்கப் பெற வேண்டும்.

பிரிவு  6 ன் கீழான விளம்பல் அறிவிக்கை ஒப்புதல் அளித்தல்:

பிரிவு 5ஏ-ன் கீழ் 4(1) விளம்பரத்தில்  குறிப்பிடப்பட்ட நிலங்களின் பேரில் வரப்பெற்ற ஆட்சேபனை தொடர்பான விசாரணை முடித்த பின்னர் நில எடுப்பு அலுவலர் அறிக்கையினை ஆணை பிறப்பிப்பதற்கு நில நிர்வாக ஆணையர் / அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நில நிர்வாக ஆணையர் / அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . நில நிர்வாக ஆணையர் / அரசு பிரிவு 6ன் கீழான விளம்பல் அறிவிக்கையினை ஏற்று ஒப்புதல் செய்தல் வேண்டும். இதனை 4(1) விளம்பரத்தினைப் போன்றே மூன்று வித முறைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் 4(1) அறிவிக்கை  வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒராண்டிற்குள் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். 4(1) அறிவிக்கை விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பிரிவு 6ன் கீழான விளம்பல் அறிவிக்கை விளம்பரப்படுத்தப்படாத நிலையில் பிரிவு 4(1) ன் கீழ் செய்யப்பட்ட விளம்பரம் தானாகவே காலாவதியாகிவிடும். நீதி மன்ற தடையானண காலத்தினை பிரிவு 6 ன் கீழான விளம்பல் அறிவிக்கை விளம்பரத்திற்கு  கணக்கில்  எடுத்துக்கொள்ளதேவையில்லை. பிரிவு 6 ன் கீழான விளம்பல் அறிவிக்கை செய்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தமிழ்நாடு நில உரிமை பெறல் விதிகள் 1991 விதி 6ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 7 ன் கீழான வரைவு கட்டளை:

பிரிவு 6ன் கீழான விளம்பல் அறிவிக்கை விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் பிரிவு 7ன் கீழான வரைவு கட்டளை தயார் செய்யப்பட்டு நில எடுப்பு அலுவலர் மாவட்ட ஆட்சியரின்  ஒப்புதல் பெற்று அரசிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.

பிரிவு 4 (1) ன் கீழான அறிவிப்பினை ரத்து செய்யும் நடவடிக்கை:

உத்தேச நில எடுப்பினை கைவிட்டு விட அரசினர் முடிவு செய்து விட்ட போதும் 4(1) விளம்பர  தேதியிலிருந்து  ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாகியும் பிரிவு 6ன் கீழான விளம்பல் அறிவிக்கை விளம்பரம் செய்யப்படாத நிலையிலும் 4(1) ன் கீழ் செய்யப்பட்ட விளம்பரம் தானாகவே காலாவதியாகிவிடும்.
கீழ்கண்ட நேர்வுகளில் ரத்து செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
1) 4(1) விளம்பரத்தினை தொடர்ந்து பிரிவு 6ன் கீழ் விளம்பல் அறிவிக்கை செய்யப்படாதவை.
2)  பிரிவு 6ன் கீழ் விளம்பல் அறிவிக்கை செய்யப்பட்டு அதனை தொடர்ந்து பிரிவு 7ன் கீழ் கட்டளை பிறப்பிக்கப்படாதவை.
3) 4(1) விளம்பரத்தில் காணப்படும் குறைபாடுகளை, பிழை திருத்தம்(நுசசயவரஅ) மூலம் நிவர்த்தி செய்ய முடியாதவை.
மேலே குறிப்பிட்டவை தவிர, இதர நேர்வுகளில் பிரிவு 48(1) ன் கீழ் நில எடுப்பினை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியிடுதல் வேண்டும்.

தீர்ப்பு நடவடிக்கைகள்

தீர்ப்பு விசாரணைக்கு முன்னதாக பிரிவு 8ன் கீழ் நிலத்தினை அளந்து, வரைபடம் தயார் செய்து வைக்கப்பட வேண்டும். பிரிவு 7 ன் கீழ் நில எடுப்பு செய்திட கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தீர்;ப்பு விசாரணைக்கு தேதி நிர்ணயித்து பிரிவு 9(1) மற்றும் 10ன் கீழ் பொது  அறிவிப்பு ஒன்றினை படிவம் 6ல் வெளியிடப்பட வேண்டும். பிரிவு 9(3) மற்றும் 10ன் கீழ் தனி அறிவிப்பினை படிவம் 7ல் நிலத்தினை அனுபவிப்பவர் அக்கரை கொண்டோர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் ஆகியோரிடம் சார்வு செய்யப்பட வேண்டும். தீர்ப்பு விசாரணை நாளன்று அல்லது ஓத்திவைக்கப்பட்ட தேதியில் விசாரணை செய்யப்பட்டு அக்கரையுள்ள நபரால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை குறித்தும் நில அளவை குறித்தும், நில மதிப்பு குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டும். நில உரிமைதாரரால் கோரப்படும் இழப்பீட்டு தொகை  குறித்து விசாரிக்க வேண்டும். ஒரே நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உரிமை கோரும் நிலையில் இழப்பீட்டு தொகையினை பகிர்ந்தளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். 4(1) விளம்பர தேதியில் நிலவிய சந்தை மதிப்பினை அடிப்படையாகக் கொண்டு நிலமதிப்பு நிர்ணயித்தும் கட்டிடங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கான மதிப்பினை நிர்ணயித்தும் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பிரிவு 11ன் கீழ் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வரைவு தீர்ப்பு உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்ற பின்னரே தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும்.

தீர்ப்பு விசாரணையின் போது நில உரிமைதாரர் ஆஜரில் இருந்தால்,அவரிடம் செய்யப்படும் எழுத்து மூலமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிவு 11(2) ன் கீழ் தீர்ப்பு வழங்கிடலாம். இவ்வாறு ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் பிரிவு 11(2) ன் கீழ் தீர்ப்பு வழங்கிடலாம். தீர்ப்பில் நிர்ணயிக்கப்படும் இழப்பீட்டு தொகை கீழ் குறிப்பிட்டவாறு உள்ளடக்கியதாகும்.
1)  நில மதிப்பு - நிலத்திலுள்ள மரங்கள் கட்டிடங்கள் உட்பட
2) நில மதிப்பு தொகைக்கு ஆண்டொன்றுக்கு 12 விழுக்காடு வீதம் 4(1) விளம்பர தேதியிலிருந்து தீர்ப்பு தேதி முடிய அல்லது நிலம் அரசு வசப்படுத்தும் தேதி முடிய கணக்கிடப்பட்ட தொகை (இதில் எது முந்தையதோ அந்த தொகை)
3)  நில மதிப்பு தொகைக்கு 30 விழுக்காடு தொகை
தீர்ப்பானது பிரிவு 6ன்கீழான அறிவிக்கை விளம்பரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். அத்தகைய கால அளவிற்குள் வழங்கப்பட வில்லையாயின் அனைத்து நில எடுப்பு நடவடிக்கைகளும் காலாவதியாகிவிடும். நீதிமன்ற தடையேதும் இருந்தால் அத்தகைய காலத்தினை கணக்கிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
தீர்ப்பளிக்கப்பட்டவுடன் பிரிவு 16ன் கீழ் நிலத்தினை அரசு வசப்படுத்தி கோரப்பட்ட துறையினருக்கு நிலத்தை ஒப்படைத்திடவும் நில எடுப்பு அலுவலர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துதல்:
1)  தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை ஏற்காமல் கூடுதலாக இழப்பீட்டு தொகை கோரினால் பிரிவு 18ன் கீழ் நீதிமன்ற முடிவுக்கு அனுப்பி வைக்க கோரி நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நில உரிமைதாரர் விண்ணப்பம் செய்திடலாம்.
2)  நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையினை பகிர்ந்தளிப்பதில் தீர்வு காண இயலாத நிலையில் பிரிவு 30ன் கீழ் நீதி மன்ற முடிவுக்கு அனுப்பிடலாம்.
3)  இழப்பீட்டு தொகை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்காத  நிலையிலும், நிலத்தை விற்பனை செய்திட அதிகாரம் பெற்றிருந்த போதிலும் இழப்பீட்டு தொகை பெறுகின்ற உரிமையில் தீர்வு காண முடியாத போதும் அல்லது இழப்பீட்டு தொகையை பகிர்ந்தளிக்க முடியாத போதும் பிரிவு 31(2) ன் கீழ் தொகையினை நீதி மன்ற வைப்புத் தொகையாக வைக்கவும், அதற்கு பிரிவு18ன் கீழ் குறிப்பு அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசரத்தன்மை கொண்ட நேர்வுகளில் தீர்ப்புக்கு முன்னதாக நிலத்தினை அரசு வசப்படுத்த பிரிவு 17 வகை செய்கிறது.
பிரிவு 25ன்படி நீதி மன்றத்தில் தீர்ப்பளிக்கும் இழப்பீட்டு தொகை நில எடுப்பு அலுவலரால்  பிரிவு 11 ன் கீழ் தீர்ப்பளிக்கப்பட்ட தொகைக்கு குறைவாகவோ நில உரிமைதாரர் கோரியுள்ள தொகைக்கு கூடுதலாகவோ இருக்கக் கூடாது.
பிரிவு 23ஏ-ன் படி நீதி மன்றத்தால் தீர்ப்பு செய்யப்பட்ட இழப்பீட்டு தொகையினை நில எடுப்பு அலுவலரால்  நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டும். ஆனால் அத்தொகையினை இறுதியாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டும். ஆனால் அத்தொகையினை இறுதியாக நீதிமன்றத்தில் (ஐn வாந ர்iபாநளவ குழசரஅ) முடிவு செய்யப்படும் வரை அக்கரையுள்ள நபருக்கு தொகையினை நீதி மன்றம் வழங்கக்கூடாது. நீதிமன்றம் அவசியம் எனக் கருதினால் நில எடுப்பு அலுவலர் தீர்ப்பு செய்த தொகையினை மட்டும் அவரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம்.
நில எடுப்பு அலுவலரால் திருத்திய தீர்ப்பு வழங்கிட அனுமதிக்கப்படவில்லை பிரிவு 13ஏ-ன் படி எழுத்து பிழைகளுக்கான திருத்தங்கள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு பின். தீர்ப்புக்கு பிந்தைய நடவடிக்கை தொடரப்பட வேண்டும்.

நேரடி பேச்சு வார்த்தை:
நில உரிமைதாரர்கள் ஒப்புக்கொள்ளும் நிலையில் அரசுக்கு தேவைப்படும் நிலங்களை நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தாமல் நேரடி பேச்சு வார்த்தை மூலம் தனியாரிடமிருந்து நிலத்தினை அரசு விலைக்கு வாங்கி கொள்ளலாம். (அரசாணை எண்.885 வருவாய்த்துறை நாள்:21.9.95 மற்றும் அரசாணை எண்.1246  வருவாய்த்துறை நாள்:22.11.96) மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டும், மாநில அளவில் நில நிர்வாக ஆணையரை தலைவராகக் கொண்டும் நேரடி பேச்சுவார்த்தை மூலம்  நிலம் வாங்கிட அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நிலத்தின் மதிப்பு சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டுப்பதிவேட்டில் உள்ள நிலமதிப்பு ஆகிய இரண்டில் எது குறைவானதோ அதில் 150 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவாக நிர்ணயம் செய்து கொள்ள மாவட்ட கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கப்படும் நிலத்தின் மொத்த மதிப்பு 20 லட்சத்திற்குள்ளாக இருக்க வேண்டும். 20 லட்சத்திற்கும் கூடுதலாக நிலமதிப்பு இருப்பின் மாநில கமிட்டியின் முடிவிற்கு முன் மொழிவுகள் அனுப்பிட வேண்டும்.
நில எடுப்பு செய்திட நில எடுப்பு சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டவாறு நிர்ணயிக்கப்பட்ட காலக்கொடுவிற்குள் ஒவ்வொரு நடவடிக்கையும் தொடர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு (Pert Chart) ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நில எடுப்பு பணியில் பிரதான பணி என்பது நில மதிப்பு நிர்ணயம் செய்வதேயாகும். இதற்கான விலைப்புள்ளி விவரங்கள் தயாரிப்பது என்பது வருவாய் ஆய்வர்களின் முக்கிய கடமையாகும். இதற்கான விவரப்பட்டியல் ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

விற்பனைபுள்ளி விவரங்களுக்குரிய படிவம்
1.   வரிசை எண்
2.   புலஎண் / வகை
3.   மனை எண்
4.   விற்பனைபரப்பு
5.   விற்ற விலை
6.   விற்றவர் பெயர்
7.   வாங்கியவர் பெயர்
8.   மண்வயமை
9.   தரம்
10.  தீர்வை
11.  1ச.அடி (அல்லது) 1 சென்ட் மதிப்பு
12.  வழிகாட்டி பதிவேட்டின்படி 1 ச.அடி (அல்லது) 1 சென்ட் மதிப்பு
13.  பத்திர எண் மற்றும் பதிவு நாள்
14.  குறிப்புரை:மதிப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா அல்லது நிராகரிக்கப்படுகிறதா காரணம் குறிப்பிட வேண்டும்.

சான்று: 1.6கி.மீ சுற்றளவில் நிகழ்ந்துள்ள விற்பனைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டது.
நில எடுப்பு / நிலமாற்ற - தலத்துடன் ஒப்பிடப்பட்டது என சான்றளிக்கப்படுகிறது.

 

நில எடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் – பெர்ட் (PERT)

அட்டவணைப்படி அனுமதிக்கப்பட்ட கால –அளவு


1.

நிலங்கோரும் துறையினரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற நாளிலிருந்து நில எடுப்பு சட்டப்பிரிவு 4(1) முன்மொழிவுகள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு நில எடுப்பு அலுவலரால் அனுப்பி வைத்திட அனுமதிக்கப்பட்ட கால அளவு

60 நாட்கள்

2.

4(1) அறிவிக்கை அரசிதழில் பிரசுரம் செய்யப்பட அனுமதிக்கப்பட்ட கால அளவு

90 நாட்கள்

3.

உட்பிரிவு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கூராய்வு செய்யப்பட கால அவகாசம்

30 நாட்கள்

4.

நில  எடுப்பு சட்டப்பிரிவு 5 ஏ நோட்டீஸ் சார்வு செய்யப்பட    

30 நாட்கள்

5.

வட்டாட்சியரிடமிருந்து விலை மதிப்பு முன்மொழிவுகள் நில எடுப்பு அலுவலர் பெறுதல். 4(1) அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து.

30 நாட்கள்

6.

நில எடுப்பு சட்டப்பிரிவு 5ஏ விசாரணை நடத்தி பிரிவு 6 ன் கீழான வரைவு உறுதி அறிவிக்கை மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பி வைத்தல்.
(5ஏ நோட்டீஸ் சார்வு செய்த நாளிலிருந்து)

ஆட்சேபனை இனங்கள்

ஆட்சேபனை
யற்ற  இனங்கள்

35 நாட்கள்

20  நாட்கள்

7.

(வட்டாட்சியரிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்ட நாளிலிருந்து) நில எடுப்பு புலங்கள் மற்றும் விற்பனை புலங்கள் புலத்தணிக்கை. மாவட்ட வருவாய் அலுவலருக்கு இறுதி விலை மதிப்பீட்டறிக்கை அனுப்பி வைத்தல்

20 நாட்கள்

8.

இறுதி விலை மதிப்பீட்டறிக்கை ஒப்புதல் அளித்தல்

30 நாட்கள்

9.

நிலங்கோரும் துறையினரிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறுதல். (இறுதி விலை மதிப்பீட்டறிக்கை ஒப்புதல் பெறப்பட்ட நாளிலிருந்து)

30 நாட்கள்

10.

பிரிவு 6-ன் கீழான வரைவு உறுதி அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுதல் மற்றும் பிரிவு 7-ன் கீழான வரைவு  கட்டளை ஒப்புதல் அளித்தல்.
(பிரிவு 6-ன் கீழான வரைவு உறுதி அறிவிக்கை நில எடுப்பு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட நாளிலிருந்து)

ஆட்சேபனை இனங்கள்

ஆட்சேபனை
யற்ற  இனங்கள்

100 நாட்கள்

60  நாட்கள்

11.

தீர்ப்பு விசாரணை நடத்தப்படுதல் (தீர்ப்பு விசாரணை நோட்டீஸ் 9(1)  மற்றும் 9(3)  சார்வு செய்யப்பட்ட நாளிலிருந்து

40 நாட்கள்

12.

தீர்ப்புரை வாசிக்கப்படுதல் (தீர்ப்பு விசாரணை நடத்தப்பட்ட நாளிலிருந்து

15 நாட்கள்

13.

13           நில உரிமைதாரர்களுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ் 12 (2) பிரிவு (தீர்ப்பு வாசிக்கப்பட்ட நாளிலிருந்து)

5 நாட்கள்

14.

நீதிமன்றத்திற்கு பிரிவு 18-ன் கீழ் அனுப்புதல் (தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து)

90 நாட்கள்

15.

சார் பதிவாளருக்கு படிவம் 13 அனுப்புதல்
(தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து)

7 நாட்கள்

16.

நில உரிமைதாரர்களுக்கு காசோலை வழங்கப்படுதல். (12(2) நோட்டீஸ் சார்வு செய்யப்பட்ட நாளிலிருந்து)

15 நாட்கள்

17.

அ(ம) அ அ அட்டவணை மாநில கணக்காயருக்கு அனுப்பி வைத்தல் (நில உரிமைதாரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நாளிலிருந்து)

15 நாட்கள்

18.

நிலங்கோரும்  துறையினரிடம் நிலம் ஒப்படைத்தல் (தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து)   

15 நாட்கள்

19.

கிராம கணக்குகளில் உரிய மாற்றங்கள் செய்தல். (தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து)

20 நாட்கள்

20.

தமிழ்நாடு நில அளவை (ம) எல்லைகள் சட்டம் 1923-ன் படி பிரிவு 9(2) நோட்டீஸ் சார்வு செய்யப்படுதல். (தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து)

20 நாட்கள்

21.

உட்பிரிவு ஆவணங்களில்  இறுதி கூராய்வு செய்தல். (கிராமக் கணக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட நாளிலிருந்து)

22 நாட்கள்

22.

வட்டக் கணக்குகளில் மாற்றம் செய்தல். (உட்பிரிவுகள் இறுதி கூராய்வு செய்யப்பட்ட நாளிலிருந்து)

10 நாட்கள்

23.

தமிழ்நாடு நில அளவை  மற்றும் எல்லைகள் சட்டம் 1923-ன் படி பிரிவு 13-ன் கீழான விளம்பரம்  மாவட்ட அரசிதழில் வெளியிடுதல்.(வட்டக் கணக்குகளில் மாற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து)

90 நாட்கள்

24.

இறுதி தணிக்கைக் குறிப்பு அனுப்பி வைத்தல் பிரிவு 13-ன் கீழான விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து)

30 நாட்கள்

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.