புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
படைக்கலச்சட்டம்

படைக்கலச் சட்டம் 1959 பிரிவு 3(1) ன் படியும் மற்றும் 1962ம் ஆண்டின் படைக்கல விதிகளின் படியும் படைக்கல உரிமம் இன்றி எந்தவொரு நபரும் படைக்கலத்தை வைத்திருத்தல் கூடாது. மேற்கண்ட சட்டப்பிரிவு 3(2) ன் படி ஒரு நபர் மூன்று படைக்கலங்களுக்கு மேல் வைத்துக்கொள்ளக் கூடாது ஆனால் விதி எண் 3(2)ன் படி ரைபிள் கிளப்பில் ஆயுள் உறுப்பினராக இருக்கும்  நபர் மூன்று படைக்கலங்கள் தவிர்த்து ஒரு 22 ரைபிள்  வைத்துக் கொள்ளலாம். தற்காப்பு, பயிர் பாதுகாப்பு, கால் நடைபாதுகாப்பு விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல் போன்ற தகுதியான காரணங்களுக்காக மட்டுமே படைக்கல உரிமங்கள் வழங்கப்படுகின்றன. தடை செய்யப்படாத துப்பாக்கிகள், ரைபிள, ரிவால்வர், பிஸ்டல் போன்ற படைக்கலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் வழங்கும் அலுவலர்களாக இருப்பார்கள், படைக்கல சட்டத்தின் கீழ் வழங்கப்படும் படைக்கல உரிமம் பெற ஒருவர் 21 வயது நிரம்பியவராகவும், எவ்வித குற்றவியல் வழங்குகளிலும் தண்டனை அடைந்திராத நல்ல  நடத்தை உடையவராகவும், மனநிலை பாதிக்கப்படாத நபராகவும் இருத்தல் வேண்டும். (பிரிவு 9)

படைக்கல உரிமம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து, குறிப்பிட்ட கால வரையரைக்குள் காவல் துறையினரின் அறிக்கை மற்றும் சார்நிலை அலுவலரின் அறிக்கை பெறப்பட வேண்டும். விண்ணப்பங்கள் 90 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் விண்ணப்பதாரருக்கு நேரடி விசாரணைக்கான வாய்ப்பு ஒன்றினை உரிமம் வழங்கு அலுவலரால் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணக்கு பின்னர் படைக்கலம் வைத்துக் கொள்ள உரிமம் வழங்கிடலாம் அல்லது நிராகரித்திடலாம் (பிரிவு-13)

பொதுவாக உரிமங்கள் மூன்றாண்டு காலத்திற்கு செல்லதக்கதாகும் குறிப்பிட்ட காரணங்களுக்காக குறைந்த காலத்திற்கும் உரிமம் வழங்கிடலாம். ஒரு உரிமம் எவ்வளவு காலத்திற்கு வழங்கப்பட்டதோ, அதே கால அளவிற்கு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். (பிரிவு 15) பொருளாதார வசதி இல்லையென்ற காரணத்தின் அடிப்படையில் மட்டும் படைக்கல உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யலாகாது. (பிரிவு-14)

படைக்கலத்தை விற்கவும் மாற்றம் செய்யவும் உரிமம் பெற்ற நபர் சம்பந்தபட்ட உரிமம் வழங்கிய அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். படைக்கல உரிமம் பெற்ற நபர் காலமாகிவிட்டால் படைக்கலம் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல கிடங்கிலோ பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவேண்டும்.

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.