புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
பயிராய்வு

பயிராய்வு மேற்கொள்ள கணக்கு எண்:2 (அடங்கல்) அடிப்படையானது இக்கணக்கு கிராம நிர்வாக அலுவலரால் , பொறுப்பு கிராமத்திற்கு, ஒவ்வொரு பசலி வருடத்திற்கும் கைப்பற்று நிலத்தையும், சாகுபடி நிலத்தையும் புல வாரியாகக் காட்டுவதற்கு தயாரிக்கப்படுவதாகும். பசலி துவக்கத்திலேயே எழுதப்பட வேண்டும். இதன் பக்கங்கள் எண்ணிடப்பட்டு வருவாய் ஆய்வாளர் சான்றுடன் வட்டாட்சியர் முத்திரை பெறப்பட்டிருப்பதை வருவாய் ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும் இதன் தொடக்கத்தில் மதல் சில பக்கங்கள் கிராமத்திற்கு வரும் வருவாய் அலுவலர்கள், தணிக்கை நாளன்று, கிராமத்தில் உள்ள பயிர்நிலை, பொது உடல் நலம்  மற்றும் அவசியமான குறிப்புகள் இப்பக்கங்களில் எழுதுவதற்குரியதாகும்.

இக்கணக்கு அரசு நன்செய், புன்செய், புறம்போக்கு வகைபாடு வாரியாகவும் நில அளவை எண்கள் உட்பிரிவு வாரியாகவும் எழுதப்படும், நன்செயின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரு போக நிலங்கள், இணக்கம் செய்யப்பட்ட இருபோக நிலங்கள் முதலில் பதிவு செய்தும், அவற்றின் கீழ் ஒருபோக நிலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் எந்தெந்த நீர்ப்பாசன ஆதாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதன்படி தொகுத்து எழுதப்பட வேண்டும். அதைப் போன்று புன்செய் புலங்களையும் அவற்றுக்குப் பாயும் பாய்ச்சல் ஆதாரத்திற்கு தகுந்தவாறு அவற்றின் கீழ் பிரித்தெழுதப்பட வேண்டும். தீர்வை விதிக்கப்பட்ட தரிசு நிலங்கள் புறம்போக்கு நிலங்களுக்கு முன்னதாக எழுதப்பட வேண்டும். இறுதியாக புறம்போக்கு நிலங்கள் எழுதப்படும்.

வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரால் பயிர் மேலாய்வு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலரால் அடங்கல் பதிவுகள் கீழ்கண்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா  என்பதனை, தணிக்கை செய்து உறுதி செய்யப்பட வேண்டும்.
1.  பசலி துவக்கத்திலேயே எழுதி சரி பார்த்து சான்று பெறப்பட்டுள்ளதா?
2. 1 முதல் 6 முடிய உள்ள கலங்கள் முந்தைய பசலி அடங்கல். -அ - பதிவேடு, சிட்டா, குத்தகை உரிமைப்பதிவேடு  ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதா?
3. வகைபாடு வாரியாகவும், நீர்ப்பாசன வாரியாகவும் எழுதப்பட்டுள்ளதா?
4. குத்தகை உரிமை விபரம் ஆம் - இல்லை என பதிவு செய்யப்பட்டுளள்தா?
5.  பட்டா மாற்றம் குறித்த பதிவுகள் உரிய பட்டா மாறுதல் ஆணைப்படி போக்குவரத்து செய்து வருவாய் ஆய்வாளர் சிறு கையொப்பம் பெறப்பட்டுள்ளதா?
6. சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், நெல் சாகுபடியாக இருப்பின், அதன் வகை ஐ.ஆர்.20, டி.கே. எண்.9 என குறிக்கப்பட்டுள்ளதா?
7. சாகுபடியான மாதம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?
8. சாகுபடி பரப்பு சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா? புல உட்பிரிவில் பகுதி சாகுபடி செய்யப்பட்டிருப்பின், அதன் பரப்பு அளந்து எழுதப்பட்டுள்ளதா. தரிசாகவோ, நாற்றங்காளாகவோபம்பு செட் கட்டிடம் என விடப்பட்டிருப்பின், அதன் விபரம் அளவுகளுடன் கலம் 18-ல் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
9.  பல்வேறு வகுப்புடைய நிலங்களில் புல எண்வாரியாக அதன் மொத்த விஸ்தீரணத்தில் சாகுபடி நீங்கலாக தரிசாக விடப்பட்டுள்ளது. அல்லது வேறு பயன்பாடாக உள்ளது. - அ- முதல் -ஏ- முடிய எட்டுவகைபாடுகளில் எந்தவகைபாடு சார்ந்தது என்பதற்கு அதற்குரிய குறியீட்டை கலம் 18(அ) -ல் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
10. உண்மையான பாய்ச்சல் ஆதாரம் எது என்பதற்கு ஆறு, வாய்க்கால் முதலானவற்றில் நேரிடையான பாய்ச்சலாயிருப்பின், - பாய்ச்சல் - என்றும், இறவை மூலமாக இருப்பின் -இறவை- என்றும், கசிவு மூலமாக இருப்பின் -கசிவு- என்றும், சொந்தக்கிணறு மூலமாக இருப்பின் -சொந்தக்கிணறு - என்றும், மானாவாரி சாகுபடியாயிருப்பின் -மானாவாரி- என்றும் கலம் 11-ல் குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும்.
11. அறுவடை மாதம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா?
12. கலம் 12-ல் விளைச்சல் அளவு (விழுக்காடு) குறிப்பிடப்பட்டுள்ளதா? (உ-ம்) 60%,70%
13. உணவுப்பயிர்களாயிருப்பின் பயிர் மேலாய்வு செய்யும்போது - இளம்பயிர்- தண்டு சிறியது, பால் அன்னம் முற்றியுள்ளது. அறுவடைக்கு தயார் உத்தேச மகசூல் மதிப்பு விழுக்காடு போன்றவற்றை பயிராய்வு செய்யும் அலுவலர், கலம் 19-ல் (ஆய்வுக் குறிப்பில்) குறிப்பிட வேண்டும்.
14. பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி இனங்கள் கடந்த பசலியில் இருந்து நடப்பு பசலியில் கொண்டுவரப்பட்டுள்ளதா? பசலி கம்மி, தீர்வை கம்மி இருப்பின் கிராம நிர்வாக அலுவலர் குறிப்புரையில் காண்பிக்கப்பட்டுள்ளதா?
15. நில அளவை புத்தகத்தில் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டிருக்கும் கண்ணி, கால்பாதை, அழிக்கப்படாமல் உள்ளதா? அழிக்கப்பட்டிருப்பின், அதனை மீண்டும் நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
16. புறம்போக்கு நிலங்களைப் பொறுத்து அவை எவ்வாறு வகை படுத்தப்பட்டுள்ளது. (களம், சுடுகாடு, கால்பாதை, ஆறு வாய்க்கால், குளம்) என அடங்கலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
17. புறம்போக்குகளில் ஆக்ரமணம் உள்ளதா? ஆக்ரமணம் இருப்பின், ஆக்ரமணப்பட்டி கொடுக்கப்பட்டுள்ளதா? ஆக்ரமண விபரம், ஆக்ரமணதாரர் பெயர், ஆக்ரமணத்தின் தன்மை, விஸ்தீரணம், நூதனம் அல்லது பழையது ஆட்சேபனைக்குரியதா இல்லையா? கால அளவு முதலியன சோதனையின் போது விசாரணை மேற்கொண்டு ஆய்வுக் குறிப்பு எழுதப்பட வேண்டும்.
18. அரசு புறம்போக்கு நிலங்களில் 2-சி மரப்பட்டா வழங்கப்பட்டிருப்பின், காய்ப்பு இளசு, எண்ணிக்கையுடன் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து மேலொப்பம் செய்யப்பட வேண்டும். 2-சி பெறாத மரங்கள் இருப்பின், 2-சி கணக்கில் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இநத நடவடிக்கை அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்கும் மரவரி விதிக்கப்படாமல் உள்ள மரங்களும் அடங்கலில் பதியப்பட்டிருக்க வேண்டும். பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கப்படாத புறம்போக்கில் உள்ள மரங்களின் பலன்களை ஏலத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
19. செட்டில்மெண்டபோது இறவை வஜா அளிக்கப்பட்ட நிலங்கள் ஈருக்கும், அவ்வாறு வஜா அளிக்கப்பட்ட நிலங்கள் தொடர்ந்து இறவை மூலம் பாசனம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட வேண்டும். நேரிடையாக பாசனம் பெறும் பட்சத்தில், வஜா நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
20. ஆக்ரமண இனங்களில்,ஆக்ரமணம் ஏதும் நடப்பு பசலியில் காலி செய்யப்பட்டிருப்பின் காலியான விபரம் மற்றும் முந்தைய பசலி ஆக்ரமணம் நடப்பு பசலியில் இல்லாது ஈருப்பின், ஆக்ரமணம் - கம்மி- என சிகப்பு மையினால் குறிப்பிட்டு காண்பிக்கப்பட வேண்டும்.
21. கிராம நிர்வாக அலுவலர்கள் பயிராய்வு  மேற்கொண்டு கிராமக் கணக்கு எண்:1,1-ஏ வருவாய் ஆய்வாளர் ஒப்புதலுடன் வட்ட அலுவலகத்திற்கு பிரதி மாதம் 25 ம் தேதி அனுப்பியுள்ளனரா?
22.  பிரதி மாதம் பயிராய்வு செய்யவில்லையெனில்,  சாகுபடி செய்யப்பட்ட பயிர் மற்றும் மாதம் அடங்கலில் பதிய விடுபட்டு அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பாகும். உதாரணமாக திடட ஒருபோக நன்செய்யில் அரசாங்க பாசன ஆதாரம் மூலமாக இருபோக நன்செய் சாகுபடி மேற்கொள்ளும்போது பசலி ஜாஸ்தி விதிக்கப்பட வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட விபரம் மற்றும் மாதம் விபரம் அதே மாதத்தில் பதிய விடப்பட்டால், பசலி ஜாஸ்தி விதிக்காமல் விட நேரிடும், புன்செய்யில் அரசாங்க நீர்ப்பாசன ஆதாரம் மூலம் பயிர் செய்யப்படும். பயிருக்கு முதல் போகமாக இருந்தாலும் இரண்டாம் போகமாக இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தீர்வை  ஜாஸ்தி விதிக்கப்பட வேண்டும். அந்தந்த மாதத்தில் புன்செய்யில் பயிராய்வு செய்து சாகுபடி பதிய விடப்பட்டால் தீர்வை ஜாஸ்தி விதிக்காமல் வருவாய் இழப்பு ஏற்பட நேரிடும் ஒவ்வொரு பசலியிலும் தீர்;வை ஜாஸ்தி, கம்மி, பசலி ஜாஸ்தி, கம்மி விபரம் தொடர்புடைய புல எண்ணுக்கு எதிரில் கிராம நிர்வாக அலுவலர் குறிப்பு எழுதப்பட வேண்டும்.
23.  பசலி முடிவில், அடங்கலில் சுருக்கம்(கோஷ்பாரா) எழுதப்பட வேண்டும் வகைபாடு வாரியாகவும், நீர்ப்பாசன ஆதாரம் வாரியாகவும் , கைப்பற்று - புறம்போக்கு நிலங்களுக்கு என தனித்தனியாக காண்பிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வகைபாட்டிற்கும் திட்ட விஸ்தீர்ணம், தீர்வை, முதல் போகம், இரண்டாம் போகம், மூன்றாம் போகம், சாகுபடி விஸ்தீர்ணம், தரிசு சாகுபடியானதில் நீர்ப்பாய்ச்சப்பட்டது நீர்ப்பாய்ச்சப்படாதது மானாவாரி என்றும், நீர்ப்பாய்ச்சப்பட்ட பரப்பில், பாய்ச்சல், கசிவு , இறவை, சொந்த கிணறு என்றும் பிரித்து காண்பிக்கப்பட வேண்டும். இறுதியாக திட்டப்பரப்புடன் மேற்காணும் விபரங்கள் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட வேண்டும்.

        பயிர் ஆய்வின் போது கீழ்கண்ட இனங்களையும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
1. குறுகிய மற்றும் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள்
2. நில மாற்றம், நில உரிமை மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்
3. நில ஒப்படையின் கீழ் ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள்
4. ஆதி திராவிடர்களுக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள்
5. வீட்டுமனை ஒப்படை செய்யப்பட்டவை.
மேற்காணும் இனங்களில் நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.
கிராமத்தின் போதிய நீர் இருப்பு பற்றிய விபரம், கிராமக் கணக்கு எண்:20 (மழையளவு கணக்கு)- யைக் கொண்டு அறியப்பட வேண்டும்.

       

   சாகுபடி நிலங்கள், அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட பாசன ஆதாரங்கள் மூலம் அல்லாது முறையற்ற வகையில் சாகுபடிக்கு நீர்; எடுத்து பயிர் செய்யப்பட்டால் அந்த சாகுபடி பரப்பிற்கு சாதாரண தண்ணீர் தீர்வையுடன், கூடுதலாக அபராதத் தண்ணீர் தீர்வையும் விதிக்கப்படும் அவ்வாறான முறையற்ற பாசனம் உள்ளதா என்பதை பயிராய்வின் போது கண்டறியப்பட வேண்டும்.(வருவாய் நிலை ஆணை எண்:4).

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.