புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
பட்டா மாறுதல்

    பட்டா நகல் ரயத்துக்களுக்கு கணினி மூலம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பட்டா மாறுதல் மிக முக்கியத்துவம்  வாய்ந்ததாகி விட்டது. இப்பணி செம்மையாக நடைபெறுவதை, கிராமத்தில் முகாமிட்டு சோதனை செய்வதன் மூலமும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்வதன் மூலமும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை:
கிராமக் கணக்கு எண்: 3 ஒவ்வொரு வருடமும் கிராம நிர்வாக அலுவலரால் எழுதப்படும் பதிவேடாகும். இப்பதிவேடு நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும்.

பிரிவு - உரிமையை விட்டு விடுதல்
பிரிவு - ஒப்படை
பிரிவு - பட்டாமாறுதல்.

  4 -  பிரிவு - இதர மாறுதல்கள் (நில எடுப்பு நில வகைபாடு மாறுதல்கள்)
ஒவ்வொரு பிரிவுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தின் தலைப்பினை மாற்றாமல் எழுதப்பட்டிருக்க  வேண்டியது அவசியம்.
3 - பிரிவு - பட்டா மாறுதல்:
இப்பிரிவு கீழ்கண்ட உட்பிரிவுகளை கொண்டிருக்க வேண்டும்.
1. வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டது.
அ) அரசால் வாங்கப்பட்டது   ஆ) தனிநபர்களால் வாங்கப்பட்டது
2. நீதிமன்ற ஆணையின் பேரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யப்பட்டது.
3. தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.
4. வாரிசு முறையினால் மாற்றப்பட்டது.
5. 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பதிவு பெற்ற பட்டாதாரர் காணப்படாது போனாலும் மாற்றப்பட்டவை.
6.  வாரிசு அற்று அரசினரை சேர்ந்த நிலங்கள்.

விண்ணப்பங்கள் பெறும் முறை:

பட்டா மாறுதல் கோரி தனி விண்ணப்பங்கள் கிடைக்கபெறுதல் பேரிலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர்கள் பெறும் விண்ணப்பங்கள் பேரிலும் பட்டா மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

i) தனி விண்ணப்பங்கள்:
வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் விண்ணப்பங்கள் பெறலாம் பதிவு செய்யப்படட பட்டாதாரர் இறந்து விடும் நேர்வுகளில் கிராம  நிர்வாக அலுவலர்கள், வாரிசு விபரங்களுடன் அறிக்கை அனுப்பலாம். மேலும் கிராம நிர்வாக அலுவலர் தங்களது கவனத்திற்கு வரப்பெற்றுள்ள நில உரிமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வட்டாட்சியருக்கு தெரிவிக்கலாம்.

ii) சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள்:
இவ்விண்ணப்பங்கள் படிவம் XXXV-I (வருவாய் நிலை ஆணை 1) -ல் ஆவணங்கள் பதிவு செய்யப்படும் போது, சார் பதிவாளரால் பெறப்பட்டு வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பகுதி நிலம் விற்பனை செய்யும் போது, உட்பிரிவு கட்டணம் வசூல் செய்து, விபரமும் சார் பதிவாளரால் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இரு முறைகளிலும் பெறப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் வட்ட அலுவலகத்தில் தனித்தனியாக இரு பதிவேடுகளில் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முழு புலங்கள் (Full  Fields):
முழு  புலங்கள் பொறுத்து பட்டா மாறுதல் கோரும் நேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், கணக்கு எண் : 3-ல் பதிவு செய்து, நிர்ணயிக்கப்பட்ட வினாப்படிவத்தினை பூர்த்தி செய்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் வினாப்படிவம் பூர்த்தி செய்யும் போது, குறிப்பிட்ட நேர்வில், தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலம் உட்படுகிறதா, நிபந்தனை மீறப்பட்ட இனமா, நீதிமன்ற நடவடிக்கை ஏதும் நிலுவையில்  உள்ளதா என்பதனை தெரிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அனுப்பியுள்ள அறிக்கையினை பரிசீலித்து மண்டல துணை வட்டாட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பகுதி நிலங்கள் (Part Fields) (Sub Division Cases)
உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆணை பிறப்பிக்க வேண்டிய இனங்களில், உட்பிரிவு கட்டணம் செலுத்தப்பட்ட செலான் மற்றும்  விண்ணப்பத்தினை அளவருக்கு அனுப்பி வைத்து உட்பிரிவு ஆவணங்கள் தயாரிக்கப்பெற்று, வட்டாட்சியரால் உட்பிரிவு அங்கீகரித்தும், பட்டா மாறுதல் செய்தும், ஆணை பிறப்பிக்கப்படும்.
மேற்கண்ட இரு நேர்வுகளில் மட்டுமே, வழக்கமாக விண்ணப்பங்கள்  அதிகமாக பெறப்படுகின்றன. இவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையினை, கிராமத்தில் முகாம் செய்யும் போது ஆய்வு செய்யப்பட வேண்டும். இணைப்பு ஆவணங்கள் (டுinமு னுழஉரஅநவெள)  இல்லையென மனுக்கள் நிராகரிக்கக கூடாது. மனுதாரருக்கு அதனை தாக்கல் செய்ய  உரிய வாய்ப்பளித்து, பின்னரே  விரிவான ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
பட்டா மாறுதல் ஆணை நகலொன்று கிராம நிர்வாக அலுவலருக்கு சம்பந்தப்பட்ட கணக்குகளில் மாற்றம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, கணக்கு எண்: 3-ல் பதிவுகள் மேற்கொண்டும், சிட்டா  மற்றும் அடங்கலில் உரிய மாற்றங்கள் செய்தும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து பதிவுகளை வருவாய் ஆய்வாளர் பராமரிப்பு நில அளவரால் சரி பார்த்து மேலொப்பம் செய்யப்பட வேண்டும். வட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படும் சிட்டாவின் மற்றொரு பிரதியிலும் உரிய மாற்றங்கள் செய்த பின்னரே கோப்பு முடிவு செய்யப்பட வேண்டும்.

 பட்டா மாறுதல் விண்ணப்பங்களை முடிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு:

புல உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்யக் கோரும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களும், மற்ற விண்ணப்பங்களுக்கு 15 நாட்களும் ஆகும்.

1.உட்பிரிவு கட்டணம்       
  நகரப் பகுதிகள்         ரூ.50/-
கிராமப் பகுதிகள்        ரூ.40/-    

2.எல்லை மனு கட்டணம்         ரூ.80/-

3.புலப்பட நகல் கட்டணம்          ரூ.20/-

1 சென்ட்          = 435.6 சதுர அடி
100 சென்ட்       = 1 ஏக்கர்
2.47 ஏக்கர்       = 1 எக்டேர்
100 ஏர்          = 1 எக்டேர்
1 ஏர்           = 1075 சதுர அடி

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.