புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
புதையல்

            ஏதாவது மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “புதையல்” எனப்படும். இந்திய புதை பொருள் சட்டம் 1878 பிரிவு 4ன் படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், புதையலை கண்டுபிடித்தவர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக விவரத்தை தெரிவித்து கண்டறியப்பட்ட புதையலை அருகில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும். புதையலை கண்டெடுத்தவர் பிரிவு 4ன் கீழ் ஒப்படைக்கவோ தகவல் அறிவிக்காமல்  மறைக்கவோ செய்தால் புதையல் மதிப்பின் பங்கு தொகை வழங்க வேண்டியதில்லை. மேலும் ஒரு வருடம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையுமே விதிக்கலாம். புதையல் கண்டெடுத்த இடத்தின் உரிமையாளர் தகவல் அளிக்காவிட்டால் சட்டப்பிரிவு 20 மற்றும் 22ன் கீழ் ஆறு மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டையும் விதிக்கலாம்.

           புதையல் கண்டுபிடிக்கப்பட்ட விவரம் குறித்து எவரும் எழுத்து மூலமான தகவல் தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரே அப்பொருளை கைப்பற்றி கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் சட்டப்பிரிவு 5(ஏ)ன் படி புதைபொருள் விவரம் குறித்த அறிவிக்கை ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அரசிதழில் விளம்பரப்படுத்திட வேண்டும். புதையலுக்கு உரிமை கோருபவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பாக தங்களை நேரடியாகவோ அல்லது அவரது முகவர் மூலமாகவோ குறிப்பிட்ட தேதியன்று ஆஜராகி விவரம் தெரிவித்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டு மேற்கண்ட அறிவிக்கை விளம்பரப்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் புதைபொருள் விவரங்கள் குறித்து அரசு  அருங்காட்சியகத்திற்கு தகவல் அனுப்பி அருங்காட்சியகத்தில் வைக்க தேவையானதா என்பதை அறிந்திட வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டிணம் மாவட்டங்களைப் பொறுத்தவரை தஞ்சாவூர்  கலைக்கூட செயலாளரிடம் விவரம் கோர வேண்டும்.

           புதையல் பொருள்களின் மீது உரிமை கோருபவர்களது கோரிக்கை தகுந்த காரணங்களால் நிராகரிக்கப்படின் புதைபொருள் சட்டப்பிரிவு 9ன்படி புதைபொருள் மீது எவருக்கும் உரிமையில்லையென மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து ஆணை பிறப்பிக்கலாம். இந்த ஆணையின் மீது பாதிக்கப்பட்டதாக கருதினால் வருவாய் நிர்வாக ஆணையருக்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம். இத்தகைய உரிமையற்ற புதைபொருளை அரசு அருட்காட்சியகத்திற்கு அனுப்பிடலாம். அருங்காட்சியகத்திற்கு தேவைப்படாத இத்தகைய புதை பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து தொகையினை அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

           புதைபொருள் மத சம்பந்தப்பட்ட பொருளாக (விக்ரகங்கள் போன்றவை) இருப்பின் அரசு அருங்காட்சியகத்தின் அனுமதியை எதிர்நோக்கி வருவாய்த்துறை அதிகாரிகளே எடுத்து வரலாம். மேலும், உள்@ர் மக்களால் இதனை வழிபடுதற்குரிய பொருளாக கருதி கோரப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தன் விருப்பு அதிகாரத்தின்படி முடிவு மேற்கொள்ளலாம்.(அரசாணை எண் 1187 வருவாய்த்துறை நாள்:19.3.62)

            சட்டப்பிரிவு 3 ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்காக செயல்பட, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நியமனம் செய்திட அனுமதித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(அரசாணை எண் 113 வருவாய்த்துறை நாள்:18.1.1945)

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.