புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
சான்றுகள்

தமிழகத்தில் வசிக்கும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற வகுப்பினர் என ஐந்து இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிற வகுப்பினரைத் தவிர ஏனையோருக்கு வருவாய்த்துறை மூலம்  சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இனம் வாரியாக அங்கீகரிக்கப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு.(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.)

வ.எண்

இனம்

அங்கீகரிக்கப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை

1.

பழங்குடியினர் (S.T)

36

2.

தாழ்த்தப்பட்டோர் (S.C)

77

3.

மிக பிற்படுத்தப்பட்டோர் (M.B.C)

41

4.

சீர்மரபினர் (D&C)

68

5.

பிற்படுத்தப்பட்டோர்(B.C)

142

 

கூடுதல்

364

 

பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை:

1. சம்பந்தபட்ட நபரின் பிறப்பிடத்தை ஒட்டியும், பள்ளி சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சாதியையும் ஒப்பிட்டு நன்கு தீர விசாரணை செய்து உண்மை சாதியினை கண்டறிய வேண்டும்.
2. சாதி சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை.(அரசாணை எண்97 வருவாய்த்துறை நாள்:15.2.94)
3. பொதுவாக சாதிசான்று இரண்டு நாட்களில் வழங்கப்பட வேண்டும். மலைச்சாதியினருக்காக சாதிசான்று உரிய விசாரணை தேவைப்படும் இனங்களில் இரண்டு வாரங்களில் வழங்கப்பட வேண்டும்.
(வருவாய்த்துறை அரசு கடித எண்.517 நாள்:18.6.93)
4.சாதிசான்று உரிய படிவத்தில் நிரந்தர சாதி சான்றாக வழங்கப்பட வேண்டும். முற்பட்ட வகுப்பினருக்கு நிரந்தர சாதி சான்று படிவத்தில், சாதி சான்று வழங்கிட தேவையில்லை. (அரசு கடித எண் 1713 வருவாய்த்துறை நாள்:27.7.90)
5. வருவாய் ஆய்வர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் சாதி / வருமான சான்று வழங்குவது குறித்து விண்ணப்பம் வரப்பெற்ற நாள் சான்று வழங்கிய நாள் ஆகிய விவரங்களை நிர்ணயிக்கப்பட்ட பதிவேட்டில் வரிசையாக பதிந்து வரவேண்டும். இப்பதிவேட்டினை நிர்ணயித்த படிவத்தில் தவறாது பராமரிக்க வேண்டும். (அரசு கடித எண் 1003 வருவாய்த்துறை நாள்: 19.6.1984) மற்றும் (அரசாணை எண் 2240 வருவாய்த்துறை நாள்:30.11.88)
6.பொய் சாதி சான்று வழங்கும் அரசு அலுவலர்கள் மீது துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுப்பதோடு சட்டப்படியான நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டுமென அரசு ஆணைகள் வழங்கியுள்ளது.
(அரசாணை எண் 345 சமூக நலத்துறை நாள்:26.2.87) மேலும்  தீய  நோக்கத்தோடு பொய்யான சாதி சான்று வழங்கியதாக துறை விசாரணையில் நிருபிக்கப்பட்டால் சான்று வழங்கிய தொடர்புடைய அலுவலர்கள் மீது கைது நடவடிக்கை  தொடரப்பட் வேண்டும். ( அரசாணை எண்:898 வருவாய்த்துறை நாள்:13.6.91)

சாதிசான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்கள்.

வ.எண்

வழங்கப்படும் சான்று

சான்று வழங்கிட அதிகாரம் பெற்ற அலுவலர்

அனுமதிக்கப்பட்ட அரசாணை எண் விவரம்

1.

ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சான்று (S.C)

வட்டாட்சியர்

அரசாணை எண்.1888
வருவாய்த்துறை நாள்:10.11.83

2.

பழங்குடியினர் வகுப்பு சாதி சான்று (S.T)

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்

அரசாணை எண்.2137 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்:11.11.89

3.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் சாதி சான்று BC/MBC/DC

துணை வட்டாட்சியர்

     அரசாணை (நிலை) எண்.516
வருவாய்த்துறை நாள்:17.4.86

4.

மத்திய அரசு பணிக்கான பிற பிற்படுத்தப்பட்டோர் சான்று (O.B.C)

வட்டாட்சியர்    

அரசாணை நிலை எண்.12 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நாள்:28.3.94

5.

பிறப்பிடச் சான்று ((Nativity Certificate)) மற்றும் நாட்டின சான்று (Nationality Certificate)    

வட்டாட்சியர்

அரசாணை எண்.1888 வருவாய்த்துறை நாள்:10.11.83

6.

இருப்பிட சான்று
Residence Certificate

வட்டாட்சியர்

அரசாணை எண்.1004 வருவாய்த்துறை நாள்:19.6.84

7.

வருமான சான்று

வட்டாட்சியர்

அரசாணை எண்.2906 வருவாய்த்துறை நாள்:4.11.81

பிறப்பிடம் வெளி மாநிலமாக இருந்தாலும்
பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்குவது குறித்து:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் அல்லது அவர்களது பெற்றோரது பிறப்பிடம் வேறு மாநிலமாக இருப்பினும் அவர்களது மூதாதையர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மனுதாரர்களை இம்மாநிலத்தை சேர்ந்தவராகக் கருதி அவர்களது முன்னோர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தால்  இவர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெறவில்லை என்பதற்கான உறுதி ஆவணத்தைப் பெற்றுக் கொண்டு, இம்மாநிலத்தை சேர்ந்தவராக கருதி அவ்வகுப்பக்குரிய சலுகைகள் வழங்கிடலாம். இந்நேர்வுகளில், மூத்hதையர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்களா என்பது பற்றியும் அவர்களது வகுப்பு பற்றியும் மாவட்ட வருவாய் அலுவலர் அளவில் ஆய்வு செய்து அதனடிப்படையில் சாதி சான்று வழங்கிடலாம்.

(அரசாணை(நிலை) எண்.25பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்:5.6.2002)

கிறித்துவர்களாக மதம் மாறியவர்களுக்கு சான்று வழங்குதல்:

கிறிஸ்துவர்களாக மதம் மாறியவர்களுடன் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள யாதொரு இந்து சமூகத்திலிருந்தும் மதம் மாறியவர்களாக இருக்கின்ற கிறிஸ்துவ சமூகங்களை சேர்ந்த மற்றவர்களும் குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்படுவார்கள் என்றும் இந்திய அரசமைப்பின் 16(4)ம் பிரிவினை பொறுத்த அளவில் அரசு பணியில் போதிய பிரதி நிதித்துவம் பெறாதவர்கள் என்றும் அரசு விளம்புகிறது. இவர்கள் 1986 -87ம் கல்வி ஆண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட நலத்துறையும் கல்வி துறையும் அளிக்கும் கல்வி சலுகைகளைப்பெற தகுதியுடையவர்கள் ஆவர். கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு இவர்கள் 1986 -87ம் கல்வி ஆண்டு தொடக்கத்திலிருந்து இட ஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள் ஆவர். அரசு பணியிலும் இட ஒதுக்கீட்டைப் பொறுத்த மட்டிலும் கூட இவர்கள் இந்த ஆணை வெளியிடப்படும் நாளிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு சமமாக இட ஒதுக்கீடு பெற தகுதியுடைவர்கள் ஆவர்.

(அரசாணை நிலை எண்.558 சமூகநலத்துறை நாள்:24.2.86)

       கிறிஸ்துவ பெற்றோருக்கு பிறக்கும் குழந்தையும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்ததே என்றும், பிறப்பில் கிறிஸ்துவர் பின்னாளில் இந்துவாக மாறினாலும் இட ஒதுக்கீட்டிற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு  தகுதியில்லையென்றும் உச்ச நீதி மன்ற சிறப்பு அனுமதி எண்.27571/99 நாள்:25.1.96ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் பிறப்பால் கிறிஸ்துவர் பின்னர் இந்துவாக மாறினால் “ஆதி திராவிடர் சான்று” பெறவோ இட ஒதுக்கீட்டிற்குரிய சலுகைகளை துய்க்கவோ தகுதியில்லையென்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடித எண்.81 நாள்.19.9.2000ல் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று பிறப்பால் கிறிஸ்துவராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறிய மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் அவ்வகுப்புகளுக்குரிய சாதி சான்று பெறவோ இட ஒதுக்கீட்டிற்குரிய சலுகையை துய்க்கவோ முடியாது என்றும் அவர்கள் பிறக்கும்போது இருந்த வகுப்புக்குரிய சான்று பெறவும். அவ்வகுப்புக்குரிய இட ஒதுக்கீட்டு சலுகையை மட்டும் துய்க்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடிதம் (நிலை) எண்.13 நாள்:16.4.2004)

கலப்பு திருமண சலுகைகள்:

அரசாணை எண்.477 சமூக நலத்துறை நாள்:27.6.75 மற்றும் அரசாணை எண்.1907 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்:29.9.89 ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி கீழ்க்காணும் வகுப்புகளிடையே நடைபெறும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் - முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் - பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம்.

3.தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது பழங்குடி வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும் - மிகபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவருக்கும இடையே நடைபெறும் திருமணம்.

4. முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் - பிற்படுத்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்குமிடையே நடைபெறும் திருமணம்.

மேற்குறிப்பிடப்பட்ட வகையிலான திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களின் ஒருவரது சாதியில் ஏதேனும் ஒரு சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற இயலும். இவர்களில் தந்தையின் சாதி அல்லது தாயாரின் சாதி இதில் எதனை அனுசரிக்க வேண்டுமென பெற்றோர்கள் தீர்மானித்து உறுதிமொழி அளிக்கிறார்களோ அந்த சாதியினையே கணக்கிற்கொண்டு சாதி சான்று வழங்கிடலாம். ஒரு குழந்தைக்கு நிர்ணயிக்கும் சாதி தான் மற்ற குழந்தைகளுக்கும் பொருந்தும்.
(அரசாணை எண் 477 சமூக நலத்துறை நாள்:27.6.75) அரசாணை எண் 2டி எண்.17 ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை நாள்:16.8.94)
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நடைபெறும் திருமணம் கலப்பு திருமணமாகக் கொள்ள கூடாது. மேற்படி சலுகை இவ்வினத்திற்கு பொருந்தாது.
(பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கடித எண்.1418/பிநசீமி 2001 நாள்:21.5.2001)
மேலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பழங்குடியினர் / தாழ்த்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற சாதி அடிப்படையில் வருவதாலும் மேற்கண்ட நான்கு இனத்தின் கீழ் செய்யப்படும் திருமணங்கள் மட்டுமே கலப்பு திருமணங்கள் என்பதனாலும் மதங்களின் அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் கலப்பு திருமணங்கள் என கொள்ள இயலாது.(சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை கடித நிலை எண்.235 நாள்:27.7.97)

திருமணம் புரிந்து கொள்ளும் ஆண் / பெண் இருவரில் ஒருவர் பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் ளுஊ/ளுவு வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் பொருட்டு இத்திருமணம் கலப்பு திருமணமாக கருதப்படும்.(அரசாணை எண்.939 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறைநாள்:24.9.86)

முன்னுரிமை சான்று:

தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் அனாதை இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள் அந்த இல்லங்களிலிருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர இயலாத கிராமப்புற தாய் / தந்தையற்ற நபர்கள் வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றின் அடிப்படையிலும் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்.

(அரசாணை நிலை எண்.8 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை நாள்:10.1.2000)
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (O.B.C) சான்று வழங்குதல்:
மைய அரசு பணிகள் மற்றும் பதவிகளில் 27 சதவிகித இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (O.B.C) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு பிரிவு ஐ அலுவலர்களுக்கும் (Creamy Layer) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் வளமான பிரிவினருக்கு (Class I Officers) பொருந்தாது. நகர்புற பகுதிகளில் காலிமனை / கட்டிடம் வைத்திருப்பதால் மட்டுமே வளமான பிரிவினராக கருத வேண்டியதில்லை. சம்பளம் மற்றும் வேளாண்மை வருமானம் நீங்கலாக இதர வருமானம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பெற்ற ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்பது ரூ.2.50 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம்) என நிர்ணயிக்கப்பட்டு திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது.(பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு கடித எண்.209/ 2003-7 நாள்:21.5.2004) நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமானத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கப்பெற்றால் அல்லது சொத்துக்களின் மதிப்பு செல்வவரி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புக்கு கூடுதலாக இருந்தால் மட்டுமே வளமான பிரிவினராகக் கருத வேண்டும்.
(அரசு கடித எண்.5637 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள்:12.3.2001)
2000 - 2001ம் ஆண்டு முதல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்தும் போது இறுதி சடங்கு செலவிற்கென ரூ.500/-அவரது குடும்பத்திற்கு உள்ளாட்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையினை பெற ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்குள் இருக்க வேண்டும். (அரசாணை நிலை எண்.61 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை நாள்:13.6.2000)

வருமானச்சான்று

வருமான சான்றிதழ்பெற விண்ணப்பித்தல் ரூ.10/-க்காக முத்திரை கட்டண வில்லை ஒட்டப் படவேண்டும்.
பெற்றோரின் தாய் / தந்தை இருவரது ஆண்டு வருமானத்தையும் கணக்கிற்கொண்டு சான்று வழங்க வேண்டும். மாத ஊதியம் ஈட்டுபவராக இருந்தால் வேறு வகையால் பெறப்படும். இதர வருமானங்களையும் சேர்த்தே ஆண்டு வருமானமாக கணக்கிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களால் அளிக்கப்படும் இச்சான்றிதழ் தாமதத்தை தவிர்த்திடும் பொருட்டு சரக வருவாய் ஆய்வர்கள் வருமான சான்றிதழை மேலொப்பம் செய்திட தேவையில்லை. வட்டாட்சியர் மட்டுமே வருமான சான்று வழங்க வேண்டும்.
வருமான சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்ல தக்கது.
(அரசாணை எண்.1509 வருவாய்த்துறை நாள்:27.11.91 மற்றும் அரசானண எண்.97 வருவாய்த்துறை நாள்:15.2.94)

பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகைப்பெற
நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு
1). பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்குள் இருக்க வேண்டும்.
2). இந்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் முழு உதவித்தொகைப்பெற ரூ.38,220/-க்கு குறைவாகவும், அரை உதவித் தொகைப்பெற ரூ.50,920/-க்கு குறைவாகவும் இருந்தால் மத்திய அரசு உதவித் தொகைப்பெற தகுதியுடையவர்களாவார்கள்.
3). மதம்மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.50,000/-க்கு குறைவாக இருந்தால் மாநில அரசு உதவித்தொகைப்பெற தகுதியுள்ளவர்களாவார்கள்.
4).மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் இந்து ஆதி திராவிடர் / பழங்குடியினர் மதம்மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர் மாணவர்கள் வயது வரம்பின்றி முழுக் கல்வி கட்டண சலுகைப் பெற தகுதியுள்ளவர்களாவார்.
மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்கிட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பெற்றோர்கள் / பாதுகாவலரின் அனைத்து இனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் கணக்கிற் கொள்ளப்படும் வருமானவரி கணக்குகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் வீட்டு வாடகைப்படி மட்டுமே வருமான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கிட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் பெற்றோர் / பாதுகாவலர் மாத சம்பளம் பெறுபவர்களில் பஞ்சப்படி மற்றும் சீருடைப்படி தவிர பெற்றோர் / பாதுகாவலரின் இதர வருமானங்கள் அனைத்தும் வருமானங்களாக கணக்கிடப்படும்.
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் கடித எண்.ஐ4/29063/93-ரூ2 நாள்:1.6.93)

இருப்பிடசான்று
இருப்பிடசான்று வழங்கப்படும்போது வாக்காளர்பட்டியல், குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது மற்றும் இதர தேவையான ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே இருப்பிடச்சான்று வழங்கப்பட வேண்டும். இச்சான்று கோரும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட முகவரியில் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேலாக குடியிருந்து வருகிறார் என்பதற்கான அடிப்படை ஆதாரத்துடன் விசாரணை செய்து சான்று வழங்க வேண்டும். இருப்பழட சான்று பெற ரூ.10/-க்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும் (அரசாணைஎண்.95 வருவாய்த்துறை நாள்:20.2.2003)
பிறப்பிடச்சான்று (யேவiஎவைல ஊநசவகைiஉயவந)இ இருப்பிடச்சான்று (சுநளனைநnஉந ஊநசவகைiஉயவந) மற்றும் நாட்டின சான்று (யேவழையெடவைல ஊநசவகைiஉயவந) ஆகிய மூன்றும் வேறு வேறானவை. நாட்டினம் (யேவழையெடவைல) என்பது ஒரு நாட்டினுடைய குடிமகன் ஆவார். பிறப்பிடம் (யேவiஎவைல) என்பது ஒருவர் பிறந்த இடத்தை குறிப்பிடுவதாகும்.  இவர் பிறந்த இடத்தில் தான் வசிக்க வேண்டுமென்ற நிபந்தனை ஏதுமில்லை. இருப்பிடம் அல்லது வசிப்பிடம் வேறாக இருந்தாலும், பிறப்பிடத்தின் கிராமம், தாலுக்கா மற்றும் மாவட்டத்திற்கான ஆதாரத்தைப் பெற்று விசாரணை அடிப்படையில் பிறப்பிட சான்று வழங்கிடலாம். இருப்பிடம் என்பது ஒரு நபர் நிரந்தரமாகவோ அல்லது தொடர்ந்தோ ஒரு இருப்பிட வசித்து வருபவராக இருந்தால் அவர் இருக்கும் / வசிக்கும் கிராமம் / தாலுக்கா குறித்து வழங்கும் சான்று இருப்பிட சான்றாகும்.
(அரசு கடித எண் வருவாய்த்துறை எண்.க்யூ 2/58249/ 95 நாள்:21.4.95)
சொத்து மதிப்பு சான்று:
சொத்து மதிப்பு சான்று என்பது ஒப்பந்த பணிகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு கருதி வட்டாட்சியரால் அளிக்கப்படும் சான்று ஆகும். இச்சான்று பெற வெள்ளைத்தாளில் அளிக்கப்படும் விண்ணப்பத்துடன்
1.ரூ.2/க்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டிய விண்ணப்பம்.
2. அசையா சொத்துக்கான பத்திர செராக்ஸ் நகல்
3. நகராட்சி / பேரூராட்சி வரி ரசீது நிலவரி ரசீது
4. 13 ஆண்டு காலத்திற்கான வில்லங்க சான்று
5. நிலமாக இருந்தால் அதற்குரிய சிட்டா அடங்கல் (அ) பதிவேடு
6. ரூ.50,000/-க்கு சொத்து மதிப்பு பெற ரூ.100/- செலுத்தி அசல் செலான் இணைக்கப்பட வேண்டும்.
ரூ.50.000/-க்கு மேல் சொத்து மதிப்பு பெற ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200/- செலுத்திட வேண்டும்.
(அரசாணை எண்.95 வருவாய்த்துறை நாள்:20.2.2003)
சரக வருவாய் ஆய்வர்கள் விசாரணையின்போது விண்ணப்பதாரர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சொத்துக்குரிய பகுதியில் உள்ள பொது மக்களில் இருவர் ஆகியோரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்று பதிவு செய்திட வேண்டும். நிலத்திற்கான மதிப்பினை கண்டறிய வழிகாட்டிப் பதிவேடு மற்றும் மார்க்கெட் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் கட்டிடத்தின் மதிப்பினை கண்டறிய பொதுப் பணித்துறை மற்றும் பத்திரப் பதிவு துறைகளில் கட்டிட மதிப்பிற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையின் அடிப்படையில் கணக்கீடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் சொத்து மதிப்பு சான்று ஆறு மாத காலத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாகும்.
சொத்து மதிப்பு சான்று அசையாப் பொருட்களுக்கு  மட்டுமே வழங்கப்பட வேண்டும். அசையும் பொருட்கள் சேர்க்கப்படக் கூடாது குறிப்பிட்ட சொத்து அடமானம் அல்லது கடன் பெறப்பட்டிருந்தால் சொத்து மதிப்பில் அந்த தொகை கழித்துக் கொண்டு சொத்து மதிப்பு சான்று வழங்க வேண்டும்.(வருவாய் நிர்வாக ஆணையர் கடித எண்.பமுக்யூ/1914/96 நாள்:17.12.96) (அரசாணை எண்.97 வருவாய்த்துறை நாள்:15.2.94)

வாரிசு சான்றிதழ்:
இறந்து போனவரின் நேரடி வாரிசுதாரர்களுக்கு சொத்துரிமை பெயர் மாற்றம் செய்யவும் ஓய்வூதியம் மற்றும் இதர விவரங்களுக்காகவும் வாரிசு சான்று வழங்கப்படுகிறது. வாரிசு சான்று வருவாய் வட்டாட்சியரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.(அரசாணை எண்.2706 வருவாய்த்துறை நாள்:4.11.81)
நேரடி வாரிசுதாரர்கள் என்பவர்கள் இறந்து போனவர்களின் மனைவி / கணவன் / மகன்/ மகள்/ தாய்/ தந்தை ஆகியோர் ஆவார்கள். பெற்றோர்கள் உயிருடன் இருந்து திருமணம் ஆகாத மகன் ஒருவன் இறந்துவிட்டால் அவருக்கு வாரிசாக அவரது பெற்றோர்கள் கருதப்பட்டு வாரிசு சான்று வழங்கிடலாம்.
வாரிசு சான்று வேண்டுவோர் விண்ணப்பத்துடன்
1. ரூ.2/க்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டிய விண்ணப்பம்.
2. அசல் இறப்பு சான்று
3. வாரிசுதாரர்களில் எவரேனும் ஏற்கனவே இறந்திருந்தால் அவருடைய இறப்பு சான்று
4. குடும்ப அட்டை செராக்ஸ் நகல்.
ஆகியவற்றை இணைக்க வேண்டும். வாரிசு சான்று எந்த காரணத்திற்காக தேவைப்படுகிறது என்ற விவரம் குறிக்க வேண்டும். சரகவருவாய் ஆய்வர்கள் கீழ்கண்டவர்களை விசாரணை செய்ய வேண்டும்.
1. விண்ணப்பதாரர்
2. வாரிசு சான்றிதழி ல் அடங்கும் மற்றவர்கள்
3. இறந்தவரின் உறவினர் மற்றும் பக்கத்தில்  குடியிருப்பவர்கள்
4. கிராம நிர்வாக அலுவலர்
விசாரணையின் போது காலஞ்சென்றவரின் பெயரிலுள்ள குடும்ப அட்டையினைப் பெற்றும் குடும்ப அட்டை இல்லாத நிலையில் இறந்து போனவர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும், இறந்து போனவருக்கு சொந்தமான சொத்துக்கள், உயில், திருமண பத்திரிக்கை மற்றும் அவரால் விட்டுச் செல்லப்பட்ட இதர ஆவணங்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து இறந்து போனவரின் வாரிசு தாரர்கள் யார் யார் என  கண்டறிய வேண்டும் இறந்து போனவரின் திருமணமான மகளாக இருந்தாலும் வாரிசுதாராக சேர்க்க வேண்டும்.
நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொறுத்தவரை வட்டாட்சியர் வாரிசு சான்று வழங்குவதை தவிர்த்து உரிமையியல் நீதிமன்றம் மூலமாக பெற்றுக் கொள்ள தெரிவிக்க வேண்டும்.
1. இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன் / மனைவி இருந்தாலும், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும், பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தாலும்.
2. ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டுச் சென்ற நபர்களை இறந்தவர்களாக கருதி வாரிசு சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போது
3. வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும் வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்கு மூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்
4. இறந்தவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் போதும்  (அரசு கடித (நிலை) எண்.1534 வருவாய்த்துறை நாள்:28.11.91
ஆதரவற்ற விதவை சான்று:
இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இச்சான்று வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோருவதற்கு பயன்படுவதாகும். இறந்துபோனவரின் இறப்பு சான்று மட்டுமின்றி, சான்று கோருபவர் மறு திருமணம் செய்து கொண்டவரா, இவருக்குரிய, இறந்தவர் பெயரில் உள்ள சொத்து, விண்ணப்பதாரரின் வருமானம் ஆகியவை குறித்தும் விசாரணை செய்ய வேண்டும். இவருக்கு ஆதரவாக உள்ள உறவினர் குறித்தும் விரிவாக விசாரணை செய்ய வேண்டும். ஆதரவற்ற விதவை என்பவர் ஒரு விதவை, குடும்ப ஓய்வூதியம், இன்ன பிற பணிகள் மூலம் பெறும் ஊதியம், பிற வகைகளில் ஈட்டப்பெறும் வருமானம் ஆகிய அனைத்தும் சேர்த்து மாத வருமானனம் ரூ.1000/-(ஆயிரம்)க்கு மிகைபடாமல் உள்ளவரே “ஆதரவற்ற விதவை” எனக் கருதப்படுவார். விவாகரத்து பெற்றவர் “விதவை” என கருத இயலாது.
(அரசாணை எண். 395 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை நாள்:4.11.93)
பள்ளி சான்றிதழ் காணாமல் போனது குறித்து சான்று வழங்குதல்:
பள்ளி / கல்லூரியில் படிக்கும் / படித்த மாணவன் தனது பள்ளி / கல்லூரி சான்று காணாமல் போனாலோ, வீணாகி போனாலோ நகல் சான்று பெற பள்ளி சான்றிதழ் காணாமல் போனது உண்மையென வருவாய் வட்டாட்சியரால் இச்சான்று வழங்கப்பட வேண்டும்.
பள்ளி சான்று காணாமல் போனதாக விண்ணப்பிக்கும் போது விசாரணையில்.
1.காவல் துறையில் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகல்
2.காணாமல் போன சான்று கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு காவல் துறையினரால் அளிக்கப்படும் சான்று
3. சான்று உண்மையில் காணாமல் போனது உண்மை என்பதனை உறுதி செய்திட கிராம நிர்வாக அலுவலர், விண்ணப்பதாரர் மற்றும் தெருவாசிகள் ஆகியோரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற வேண்டும்.
சான்று கரையான் அரித்து விட்டதாகவோ,
வீணாகி போனதாகவோ தெரிவித்து விண்ணப்பிக்கும் போது
1.விண்ணப்பதாரர் வசித்து வரும் வீட்டின் தன்மை (கூரைவீடு /மண் குடிசை போன்றவை) குறித்து பார்வையிட்டு விசாரணை செய்து வீணாவதற்குரிய வாய்ப்புகள் குறித்து அறிக்கை செய்ய வேண்டும்.
2.வீணாகிபோனது பகுதியானதாக இருந்தால் மீதி பகுதியினைப்பெற்று அறிக்கையுடன் அனுப்பிட வேண்டும்
கருணை அடிப்படையில் நியமனம் பெற வறிய நிலைச் சான்று வழங்குதல்.
இறந்து போன அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்கிட இறந்து போனவரின் 1)குடும்ப சொத்து மதிப்பு சான்று 2)ஆண்டு வருமானச்சான்று 3) அரசு மற்றும் தனியார் துறை பணியில் எவரும் இல்லையென்பதற்கான சான்று 4) வறிய நிலை சான்று ஆகியவற்றை வட்ட பொறுப்பு வட்டாட்சியர் வழங்கிட வேண்டும்.
இது தொடர்பாக வரப்பெறும் விண்ணப்பங்களை சரக வருவாய் ஆய்வர்கள் விசாரணை செய்திடும்போது இறந்தவரின் குடும்பம் வறிய நிலையில் உள்ளதா என்பதனைப் பரிசீலனை செய்திட கீழ்கண்டவற்றை கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.வட்டாட்சியரால் வழங்கப்பட்டுள்ள வாரிசு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இறந்தவர்களின் வாரிசுகள் விவரம், அவர்களது வயது, எங்கு யாருடன் வசிக்கின்றனர், திருமணம் ஆனவரா இல்லையா திருமண மானவராக இருந்தால் திருமண தேதி, வாரிசுகள் செய்த வேலை / தொழில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம், படித்துக்கொண்டிருந்தால் படிக்கும் வகுப்பு ஆக கூடுதலாக அரசு ஊழியர் இறந்தபோது குடும்ப அங்கத்தினர் மூலம் கிடைத்து வந்த மொத்த ஆண்டு வருமானம்.
2. இறந்தவரின் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களின் முழுவிவரம் (இறந்தவரின் சொந்த ஊரில் உள்ள சொத்துக்கள் விவரம் உட்பட) ஒவ்வொரு சொத்தின் மதிப்பு, அந்த சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம்.
3. அரசு ஊழியர் இறப்பதற்கு முன்னர் குடும்பத்தில் அரசு பணியில் எவரேனும் இருந்தால் அவர் அரசு ஊழியர் இறக்கும் முன்னரே திருமணமாகி தனியே வசித்து வந்தால் அதற்கான விவரம்.
4.குடும்ப அங்கத்தினர்கள் ஈட்டும் வருமானம் மற்றும் சொத்துக்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் ஆகியவை இறந்தவரின் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக உள்ளதா இல்லையா என்பதற்கான விவரம்.
5.இறந்துபோன அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கிடைத்த ஒய்வூதியம் மற்றும் இதர பணப்பயன்கள் மூலம் கிடைத்த தொகை அதற்கான செலவு விவரம், வங்கியில் வைப்பு செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி விவரம்.
மேற்குறிப்பிடப்பட்ட விவரங்களை உள்ளடக்கிய வறிய நிலைச் சான்றின் உண்மை தன்மையினை உரிய ஆதாரங்களுடன் ஆய்வு செய்து அதன் பின்னர் விண்ணப்பதாரர், குடும்ப அங்கத்தினர்கள் கிராம நிர்வாக அலுவலர்  மற்றும் வீட்டின் அருகாமையில் உள்ள இருநபர்கள் ஆகியோரின் வாக்கு மூலங்களைப்பெற்று அறிக்கை அனுப்பிட வேண்டும்.
அரசு கடித எண்.46539 பணி -9 -98-1 வருவாய்த்துறை நாள்:11.9.98 வருவாய் நிர்வாக ஆணையர் கடித எண்.நக பணி 6(2)82888/98 நாள்:31.1.99)
மின் இணைப்பு சான்று:
நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்ரமணம் செய்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஆக்ரமண தாரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கக் கூடாது.
(அரசாணை நிலை எண்.977 வருவாய்த்துறை நாள்:30.10.95)

 

தொழுநோயாளிகள் சான்றிதழ் பெற
தொழுநோயாளிகளின் சான்றிதழ் பெற கையெழுத்து போட இயலாத நிலையில் பின்பற்றப்பட வேண்டிய நெறி முறைகள்.
1.விண்ணப்பதாரர் பெயரை எழுதி அதற்கு கீழே “தொழுநோயாளி கையொப்பம் / ரேகை வைக்க இயலாது” என்று குறித்து அந்தந்த வருவாய்த்துறை அதிகாரியே இரு சாட்சியங்களின் கையெழுத்து பெற்று விண்ணப்பதாரர் கேட்ட சான்றிதழ் வழங்கிடலாம்.
2.சம்பந்தப்பட்ட தொழுநோயாளியின் வாரிசு அல்லது நம்பிக்கைக்கு பாத்திரமான முக்கியமான ஒரு நபர் அல்லது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அவருக்காக விண்ணப்பங்களிலோ அல்லது பத்திரத்திலோ கையெழுத்து இடலாம்.
3. தொழு நோயாளி தங்கி இருக்கும் விடுதி காப்பாளரிடமோ அல்லது அவர் யாருடைய பாதுகாப்பில் இருந்து வருகின்றாரோ அந்த பாதுகாப்பாளரிடம் கையெழுத்து அல்லது கைரேகைப் பெற்று அவருக்கு தேவையான சான்றிதழ் வழங்கிடலாம்.
4. அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடமோ அல்லது குற்றவியல் நீதிபதியிடமோ மனுதாரருக்கு கையெழுத்து அல்லது கைரேகை இடமுடியாது என்பதனைக்குறிக்கும் சான்றிதழைப்பெற்று பத்திரங்களை மனுதாரர் பெயருக்கு பதிவு செய்திடலாம். அத்துடன் அப்பத்திரத்தில் குற்றவியல் நீதிபதி மேலொப்பம் செய்த மனுதாரரின் போட்டோவினை பத்திரத்தின் மேல் பகுதியில் ஒட்டி பின்பு பதிவு செய்திடலாம்.
(அரசாணை (பல்வகை) எண்.254 வருவாய்த்துறை நாள்:21.2.84)

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.