புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
தடையாணை புத்தகம்

       மாவட்ட அலுவலக நடைமுறை நூல் பத்தி 161-ல் தடையாணைப் புத்தகத்தின் பதிவு செய்ய வேண்டிய நிலங்கள் மற்றும் முறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்தவிதமான நிலங்களை ஒப்படை, நிலமாற்ற உரிமை மாற்றம் குத்தகை போன்றவைக்கு கொடுக்கக் கூடாது என உறுதி செய்து தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

1. கிராமத்தில் உள்ள நீர் நிலைப் புறம்போக்குகள் , மயானம், மந்தைவெளி புறம்போக்குகள் அவற்றின் பொது நன்மை கருதியும், பிற்கால தேவை கருதியும் தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

2. குறிப்பிட்ட புறம்போக்கில் ஒரு வகுப்பினர் ஆக்ரமணம் செய்ய எத்தனித்திருக்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதினால் அந்நிலத்தை தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்திடல் வேண்டும்.

3.  நகர்புற எல்லையிலிருந்து 8 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து புறம்போக்கு நிலங்களையும் அரசின் பிற்கால தேவையைக்கருதி தடை ஆணைப் புத்தகத்தில் பதிந்திட வேண்டும்.       

தடை ஆணை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும். சரக வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்களில் முகாமிடும்பொழுது இத்தகைய நிலங்களை பார்வையிட்டு ஆக்ரமணம் ஏதும் இருப்பின் உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம/ வட்ட அளவில் உள்ள தடையாணைப் பதிவேடு கோட்ட மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்கப்படும். பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்து ஒவ்வொரு வருடம் ஜீலை 20-ம் தேதிக்குள் சான்று பெற வேண்டும்.

நகல் மனுக்கள்

பொது மக்கள் தங்களுக்கு தேவைப்படும் வருவாய்க்கணக்குகளின் நகல்கள் மற்றும் இதர ஆணைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம். மேற்படி ஆவண நகல்கள் நேரிடையாக அவர்களுக்குத் தொடர்புடைய தாகவோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுபவையாகவோ இருத்தல் வேண்டும். இரகசியத் தன்மை உடைய ஆவணங்கள் தவிர்த்து இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்படும் ஆவணங்களின் நகல்கள் பெற தேடு கூலியாக ஒவ்வொரு ஆவணத்திற்கும் முதல் வருடமாக இருப்பின் ரூ.10/-ம் அதற்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5/-ம் செலுத்திட வேண்டும். ஆவணங்களின் நகல்கள் வட்ட அலுவலகங்களில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக  உதவியாளராலும் சான்றொப்பமிடப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிடப்படுதல் வேண்டும்.
(வருவாய் நிலை ஆணை எண்-173 மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல்)

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.