புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
1. வருவாய் நிர்வாகப் பணிகள்:-

1. வட்டஅளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள். உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய்த்துறை பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல்,

2. பயிர் மேலாய்வு செய்தல், நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.

3. நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000/-க்கு மிகைப்படாத இனங்களில் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களில் ஆணை பிறப்பித்தல்.

4. விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது ஆணை வழங்குதல்.

5. இயற்கை இடர்பாடுகள், தீ விபத்து, வெள்ளம், புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்கத் தக்க நடவடிக்கை எடுத்தல்.

6. நில ஆக்ரமணச் சட்டம் 1905 ன்படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.

7. பி.மெமோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.

8. கிராமச் சாவடி, கால்நடைப்பட்டி / கல் இருப்பு/ 2 சி மரங்கள் நிலபராதீனம் இனங்கள் / நில ஒப்படை இனங்கள்/ குத்தகை/ தண்ணீர் தீர்வை இனங்கள்/ ஆக்ரமணம்/ அரசு புறம்போக்கு நிலங்கள்/ தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள் இவைகளைத் தல ஆய்வு செய்தல்.

9. முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.

10. நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.

11. நிலம் கையகப்படுத்தும் இனங்களில், ஆணை பிறப்பித்தல்.

12. நில ஒப்படை / பராதீன இனங்களில் விதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.

13. பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்த தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.

14. வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களில் இருந்து, விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.

15. பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.

16. அரசுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.

17. நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி, கடன், ஊராட்சிவ ரி, சர்வே கட்டணம், வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், முத்திரைக் கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம், மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.

18. கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும், வரிவசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.

19. ஆண்டு வருவாய் திர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

20. வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயித்தல்.

21. நத்தம் மனை வரி நிர்ணயித்தல்.

22. அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயித்தல்.

23. தண்ணீர் தீர்வை இனங்களில் ஆணை பிறப்பித்தல்.

24. குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.

25. கிராம உதவியாளர் பணி நியமனம் செய்தல்.

26. கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.

27. கிராம நிர்வாகப் பணியமைப்பு தொடர்பான பணிகள்.

28. கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல்.

29. கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல்.

30. 2சி மரப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல். v 31. புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்ட விரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல்.

32. ஆறுகள், மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்டவிரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கப்படுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

33. வருவாய் நிலை ஆணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல்.

34. ஆதீன ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பாற்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.

35. உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல்.

36. வட்டக் கணக்கு நடைமுறை நூல்படி பதிவேடுகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல்.

37. ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல்.

38. அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.


2. குற்றவியல் நிர்வாகப் பணிகள்:-

1. வட்ட குற்றவியல் நடுவராகப் பணியாற்றுதல்.

2. வட்டத்தில் சட்டம். ஒழுங்கு பராமரித்தல்.

3. அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்கத் தக்க நடவடிக்கை எடுத்தல்.

4. குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.

5. கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.

6. காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.

7. காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து, மருத்துவ ஆய்வு செய்தல்.


3. பொதுவான பணிகள்:-

1. மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.

2. பொதுத் தேர்தல் காலத்தில், சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகப் பணியாற்றுதல்.

3. சட்டமன்ற / நாடாளுமன்ற தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.

4. பொது சுகாதாரம், கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.