புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
வறியவர் வழக்கு -(PAUPER SUIT)

           ஓரு நபர் தான்  உடுத்தியுள்ள ஆடைகளைத்தவிர வேறு எந்தவிதமான உடமைகளும் இன்றி இருக்கும் நிலையில் அவர் வறியவராக இருக்கிறார் எனக் கருத முடியும். பொதுவாக உரிமையியல் நீதிமன்றத்தில் இரு  நபர்களிடையே நடைபெறும் ஒரு வழக்கில், வழக்கின் விண்ணப்பதாரர், அந்த வழக்கிற்காக தான் செலுத்த வேண்டிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்திட தன்னிடம் எவ்வித வழிவகையும் இல்லையெனத் தெரிவித்து தன்னை வறியவராகக் கருதி நீதி மன்ற கட்டணம் செலுத்து வதிலிருந்து தனக்கு விலக்களித்திடக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். இது போன்ற நேர்வுகளில், வழக்கு தொடுத்துள்ள நபர் உண்மையிலேயே வறியவர்தான் என்பதனை  அறிந்து வழக்கினை அனுமதித்திட மாநில அரசின் பிரதிநிதி என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து நீதிமன்றம் அறிக்கை கோர வேண்டும்.
           உரிமையியல் விதி தொகுப்பு நூல் பிரிவு 33-ல் (Civil Procedure Code XXXIII) வறியவர் என்பவருக்கான விளக்கம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1)நீதிமன்றக்கட்டணம் செலுத்த வசதி இல்லாதவர்.

2)ரூ.1000-க்கு மேல் சொத்துக்கள் ஏதும் இல்லாதவர். (வழக்கில் உள்ள சொத்துக்கள் தவிர்த்து)

3)வழக்கு தொடுத்த பிறகு ஏதேனும் சொத்துக்களை இரண்டு மாதங்களில் விற்பனை செய்யும் நேர்விலும் அல்லது சொத்துக்களை வாங்கும் நேர்விலும் - வறியவராக கருத இயலாது.

4)வழக்கு தொடுத்த நபர், தனது உறுதி ஆவணத்தில் (Affidavit) தனக்கு உள்ள சொத்து விவரங்களைப் பட்டியலிட்டு உறுதி அளித்து கையெழுத்து போட்டிருப்பார். குறிப்பிடப்பட்ட அச்சொத்துக்கள் தவிர்த்து வேறு ஏதேனும் சொத்துக்கள் இருப்பின் அவர் வறியவராக கருதப்படமாட்டார்.

             நீதிமன்றத்திலிருந்து  மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வரப்பெற்றதும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக விசாரணை செய்து உண்மை நிலையினை கண்டறிய வேண்டும். விசாரணையின் போது கீழ்க்காணும் விவரங்கள் குறித்து விரிவாக பரிசீலிக்க வேண்டும்.

1)வறியவர் என்று சொல்லக்கூடியவர் வழக்கு தொடுத்துள்ள சொத்துக்களைத் தவிர்த்து வேறு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்மீது ஏதேனும் அனுபவம், உரிமை அல்லது அக்கறை கொண்டுள்ளாரா என்பது குறித்தும்.

2) அவருடைய வருமான ஆதாரம், வருமானம் மற்றும் அவர் எவ்வாறு ஜீவனம் செய்து வருகிறார் என்பது குறித்தும்.

3)வழக்கு தொடுப்பதற்கு முன்னதாக ஏதேனும் சொத்துக்களை எந்த வகையிலாவது தீர்வு செய்துள்ளாரா என்பது குறித்தும்.

பரிசீலித்து உண்மை நிலையினை அறிக்கையாக வட்டாட்சியர் அளிக்க வேண்டும்.

வழக்கு தொடுத்துள்ள நபர் விசாரணையின் அடிப்படையில் உண்மையிலேயே வறியவர் என முடிவு செய்து மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நீதிமன்றக்கட்டணம்  வசூல்:

           மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அல்லது சார்பு நீதிமன்றங்களிலிருந்து வரும். தீர்ப்பாணை (Decree) அல்லது தீர்ப்புரையில் (Judgement)வாதியிடமிருந்தோ அல்லது பிரதிவாதியிடமிருந்தோ நீதி மன்றக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். என்கின்ற விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கப்படும். அத்தொகையை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலித்திட வட்டாட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு 0070- வரவினம் என்ற தலைப்பின்கீழ் செலுத்தப்படும் வரை வட்ட அலுவலக கேட்புப் பதிவேட்டில் நிலுவையில் இருந்து வரும். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தொகை வசூலிக்க இயலாத நிலை ஏற்படின் தொகையினை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசாணை எண்.516 உள்துறை நாள் 26.2.79, அரசாணை எண்.482 உள்துறை நாள் 25.2.82, அரசாணை எண்.2561 உள்துறை நாள் 22.11.89 ஆகியவற்றின் படி வறியவர் வழக்குத்தொகையை தள்ளுபடி செய்திட கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

1. வருவாய் கோட்ட அலுவலர்           - ரூ.1,000-  வரை

2. மாவட்ட ஆட்சியர்                     - ரூ.2,500-  வரை

(வருவாய் நிலை ஆணை எண்.189ஏ)

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.