புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்

1. பயிராய்வு

2. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.

3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.

5. “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.

6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.

7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.

8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.

9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.

10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.

11. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.

12. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.

13. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

14. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.

15. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.

16. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.

17. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.

18. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.

19. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.

20. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.

21. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.

22. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.

23. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.

24. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.

25. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.

26. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்

27. பல்வேறு பிற பணிகள்:-
அ) மர மதிப்பு நிர்ணயம் செய்தல்

ஆ) நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.

இ) கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.

ஈ) வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.

உ) சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.

ஊ) தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.

எ) மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

ஏ) கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.

ஐ) கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.

28. பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.

29. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.

30. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.சரக வருவாய் ஆய்வாளர் மேற்பார்வை பணிகள்

 

வ.எண்

ஆய்வு பொருள்

விவரம்

தொடர்புடைய கிராமக் கணக்குகள்/ வருவாய் நிலை ஆணை / அரசு ஆணை விபரம்

(1)

(2)

(3)

(4)

1.

பயிராய்வு

கிராம  நிர்வாக அலுவலர் பிரதிமாதம் பயிராய்வு மேற்கொண்டு அடங்கலில் பதிவு செய்தல்

எண்.2(அடங்கல்)

2.

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்கள்

அரசு-குடிகள் ஆகியோருடைய தோட்டம் மற்றும் தோப்புகள் மரத்தீர்வைக்குட் பட்டவை, மரத்தீர்வை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை, மரத்தீர்வைக்குட்படாத மரங்களின் பலன்களை பசலிதோறும் ஏலம் விடுதல், மரங்கள் நடுவதற்கு உரிமம் வழங்குதல்.    

 

3.

ஆக்ரமணங்கள்

ஆக்ரமணங்கள் பார்வையிட்டு அடங்கலில் பதிவு செய்தல்
ஆட்சேபணையற்ற ஆக்ரமணங்கள் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தல் ஆக்ரமணங்கள் பேரில் சாதாரண தீர்வை தண்டத்தண்ணீர் தீர்வை விதித்தல்.
ஆக்ரமணங்கள் காலி செய்ய நடவடிக்கை எடுத்தல்,. ஆக்கிரமிப்பு சட்டம் 5,7,6வது பிரிவின் கீழ் அறிவிப்பு நடவடிக்கை

2 (அடங்கல்)

 

ஏ.மெமோ
வ.நி.ஆ.26(5)

 

பி.மெமோ
வ.நி.ஆ.26(2)
நில ஆக்ரமணச்சட்டம்1905

4.

நிபந்தனைமீறப்பட்ட இனங்கள்

நிலமாற்றம்
நிலஉரிமை
நிலஉரிமை விட்டுவிடல்
நில ஒப்படை(சாகுபடி நிலம்)
தாழ்த்தப்பட்டோருக்கு ஓதுக்கீடு
செய்யப்பட்டவை
வீட்டுமனை ஒப்படை
குறுகிய மற்றும் நீண்டகால
குத்தகைக்குவிடப்பட்ட இனங்கள்
ஆய்வுபோது நிபந்தனைகள்
மீறப் பட்டுள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.

 

வ.நி.ஆ.23
வ.நி.ஆ.24
வ.நி.ஆ.33
வ.நி.ஆ.15
அ பதிவேடு (செட்டில்
மெண்டு பதிவேடு)
வ.நி.ஆ.21
வ.நி.ஆ.24(அ)
வ.நி.ஆ.17

5.

மாதாந்திர சாகுபடி கணக்கு பராமரித்தல்

பிரதிமமாதம் பயிர் சாகுபடி விபரம். வட்ட அலுவலகத்திற்கு வருவாய் ஆய்வாளர் மூலம் 25ம். தேதி அனுப்பிவைத்தல்.

எண் 1,1ஏ

6.

அரசு பாசன ஆதாரங்களிலிருந்து நீர்; பாய்ச்சப்பட்ட சாகுபடி பரப்பிற்கு தண்ணீர் தீர்வை விதித்தல் 

பசலி  ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி மற்றும் முறையற்ற விதமாக சாகுபடிக்கு நீர்பாய்ச்சப்பட்டமைக்கு அபராத தண்ணீர் தீர்வை விதித்தல், வட்ட அலுவலகத்திற்கு தண்ணீர் தீர்வை பட்டி அனுப்பி ஆணை பெறுதல்

எண்.6
வ.நி.ஆ.4

7.

பருவ நிலை கோளாறு காரணமாக ஏற்படும் தரிசு மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு அரசால் வழங்கப்படும் வழக்கத்திற்கு மாறான தள்ளுபடி.

தள்ளுபடி குறித்து அரசாணை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல்

எண்.5-1,5ஐஐஐ
வ.நி.ஆ.13,14

8.

நிலையான தள்ளுபடிகள்

இறவை,  நில உரிமை மாற்றம் (அலியநேஷன்), நில உரிமை பெறல்(நில ஆர்ஜிதம்) நீண்ட நாள் குத்தகை வஜாக்கள் (தள்ளுபடி தொடர்ந்து தேவையா என ஆய்வு செய்யப்பட வேண்டும்)

செட்டில்மெண்ட் பதிவேடு
வ.நி.ஆ-24
நில உரிமை பெறல்
சட்டம் 1894
வ.நி.ஆ.17

9.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதல் நடவடிக்கைகள், முழுபுலங்கள் மற்றும் உட்பிரிவு இனங்கள் (பதிவுகள் சரிபார்த்து ஒப்புதல் செய்யப்பட வேண்டும்

எண.3
2(அடங்கல்)10-ஐ
(சிட்டா)அ பதிவேடு
வ.நி.ஆ.தொகுதி-ஐ
நி.ஆ.31

10.

வசூல் கணக்குகள்

நிலவரி, அபராதம், கடன் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய தொகை வசூலித்தல், தாமதித்த இருசால் மற்றும் கையாடல் இனங்கள் கண்டு பிடித்தல்       

 

13,14,14சி, 15,16, 17,18

 

11.

தடையாணை புத்தகத்தில் பதிவுகளை செய்தல்

திட்டமிடப்பட்ட அல்லது எதிர்கால திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்கள்.
பள்ளிகள், சாலைகள், ரயில் நிலையம் முதலானவற்றின் எதிர் காலத்தேவைக்கு தேவைப்படும் நிலங்கள்
பெருமளவில் கனிமவளம் கொண்டுள்ள நிலங்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அளிக்கக்கூடாத நிலங்கள்
இவ்வகையான நிலங்களை தகுந்த ஆணைபேரில் தடையானண புத்தகத்தில் பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல்.

தொடர்புடைய அரசாணை மற்றும் நில நிர்வாக ஆணைகள்
வ.நி.ஆ.15-2(2)
தடையாணை புத்தகம்
அ பதிவேடு அடங்கல்

12.

புhசன ஆதாரங்கள்

வருடம் முழுவதும் நீர் அளிக்கக்கூடிய காவிரிபோன்ற ஆறுகள் (முதல் வகுப்பு)
8 முதல் 10 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (இரண்டாம் வகுப்பு)
5முதல் 8 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (மூன்றாம் வகுப்பு)
3 முதல் 5 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (நான்காம் வகுப்பு)
3 மாதங்களுக்கு குறைவாக நீர் கிடைக்கக் கூடியது (ஐந்தாம் வகுப்பு)
இந்த பாசன ஆதாரங்களில் பழுது, சேதம் போன்றவற்றினை வருவாய்த்துறை கண்காணித்தல்.
புhசன ஆதாரங்களில் பொதுப்பணித் துறையினரால் மாற்றம் செய்ய உத்தேசிக்கும் போதும் மற்றும் சிறுபாசன திட்டம் செயலாக்கத்தின்போதும் மற்றும் புது திட்டங்கள் திட்டமிடும்போதும் ஒத்திசைவு கோரும் போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல்.

மேம்பாட்டு வரிவிதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்

பாசன ஆதாரத்தின் வகுப்பு உயர்த்துதல் நடவடிக்கை எடுத்தல்

 

13.

பிறப்பு இறப்பு பதிவேடுகள்

கிராம நிர்வாக அலுவலக பதிவாளர் என்ற முறையில் மேற்கொள்ளும் பணிகள்

படிவம்-1(பிறப்பு)
படிவம்-2(இறப்பு)
படிவம்-3 (இறந்து பிறத்தல்)
இதுஇரண்டு பகுதிகளாகக் கொண்டது
1.சட்ட ரீதியான பகுதி (டுநபயட Pயசவ)
2.புள்ளிவிபரப்பகுதி (ளுவயவளைவiஉயட Pயசவ)
முதல் பகுதி - பதிவாளர் பராமரிப்பில் உள்ளது.
இரண்டாவது பகுதி - பிரித்தெடுத்து சுகாதார துணை இயக்குநருக்கு அனுப்பி வைத்தல்;
பதிவுகள் குறித்து வாய்மொழி விசாரணை செய்து சரிபார்த்தமைக்கான ஒப்புதல் செய்யப்பட வேண்டும்.

த.நா.பிறப்பு இறப்பு விதிகள் 2000
எண்.19-பதிவேடுகள் (மேற்படி விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்டது)

14.

கால்நடைவியாதி மற்றும் இறப்பு அம்மை குத்திய பாதுகாப்பு பெற்றிராத குழந்தைகள் பற்றிய பதிவேடு

இம்மாதிரியாக நிகழ்வுகள் குறித்து ஆய்வுபோது விசாரணை மேற்கொண்டு சரிபார்த்தல்

எண்.19

15.

மழை  மற்றும் நீர்; வழங்கு விவரப்பட்டி

மழையளவு மற்றும் நீர் வழங்கு ஆதாரத்தின் தண்ணீர்வரத்து பதிவு செய்தல் முகாம் போது வருவாய் ஆய்வாளர் பதிவுகள் சரிபார்த்து சோதனை முடிவினை குறிப்புரை கலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

எண்.20

16.

கிராமச் சாவடிகள்

கிராமச் சாவடிகள் பராமரிப்பு,
பழுதுபட்டிருப்பின் சீரமைக்க முன்மொழிவுகள் அனுப்பி வைத்தல்

தனி  நிதிகள் விதி
தொகுப்பு

17.

கால்நடைப்பட்டிகள்

கிராம நிர்வாக அலுவலர்களால் கால்நடைப்பட்டிகள் நிர்வாகம், கால்நடை அடைப்பு, கட்டணம் வசூலித்தல், விடுவித்தல் மற்றும் விடுவித்துச் செல்லாத கால்நடைகளை ஏலத்திற்கு கொண்டு வருதல் முதலான நடவடிக்கைகள் ஆய்வு செய்தல். கட்டிடம் பழுதுபட்டிருப்பின் சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் தனிநிதிகள் விதித் தொகுப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்கள் 34,35,36,37,38,39 ஆகியவை பராமரித்தல்

தமிழ்நாடு கால்நடைகள் உரிமையில்லாத இடத்தில் நுழைதல் சட்டம் 1871

தனி நிதிகள் விதி தொகுப்பு கூறு 86

 

18.

கடன் பதிவேடுகள்

விவசாயி கடன் மற்றும் விவசாய நில அபிவிருத்தி கடன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்பாக்கி, நில உச்சவரம்புச் சட்டம் உபரிநில அடமான விதிகளின் கீழ் அடமானம் செய்யப்பட்ட நிலங்களுக்கு நில மதிப்பு தொகை வசூல் செய்தல்.

தொடர்புடைய சட்டங்கள் அரசாணைகள் த.நா.நில உச்சவரம்பு சட்டம் உபரி நிலம் அடமானம் விதிகள்

19.

கல் டிப்போக்கள்

கல் டிப்போவில் கற்கள் இருப்பு சரிபார்த்தல்

ஏ ரூ பி கற்கள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள்

20.

குவாரிகள்

குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்ட இனங்களில், குத்தகைக்கு விடப்பட்ட பகுதிக்கு அப்பாலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு கீழும் கனிமங்கள் தோண்டாமலிருப்பதை கண்காணித்தல் மற்றும் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.

தமிழ்நாடு சுரங்கம் மற்றும் கனிமங்கள் (டி ரூ ஆர்) சட்டம் 1957

21.

திருமணப் பதிவேடு

குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவரின் திருமணத்தை மட்டும் இப்பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்பட வேண்டும். படிவத்தில் உள்ள எல்லா தகவல்களும் பெற்று பூர்த்தி செய்யப்படவேண்டும் மணமகன் - மணமகள் பிறந்த தேதி பிறப்பு சான்று, மருத்துவமனை பிறப்பு சான்று, பள்ளி சான்றுடன் சரிபார்க்கப்பட வேண்டும்

குழந்தைகள் திருமணம் தடை (திருத்தம்) சட்டம் 2/1978

22.

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

1.நிலவரி வசூல் காலத்தில் (கிஸ்தி சீசன் போது ) நடப்பு கேட்புக்குமட்டும் வருவாய் ஆய்வாளர் நெ.1 டிமாண்டு (ஜப்தி ஆணை) ஒப்புதல் செய்தல்
2.நிலுவை கேட்புக்கு வட்டாட்சியர் ஒப்புதல் பெறுதல்.
3.அரசுக்கு சேர வேண்டிய வருவாய் வசூலித்தல்.
4.அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்தல்:
படிவம் - 1 ஜப்தி ஆணை சார்வு செய்தல்
படிவம் - 2 (ஜப்தி பொருட்கள் பட்டியலிட்டு)  நோட்டீஸ் சார்வு செய்தல்  
படிவம் - 3 ஏல நோட்டீஸ் சார்வு
செய்தல்  மற்றும் ஏல நடவடிக்கைகள்.
5.அசையா சொத்துக்கள் ஜப்தி செய்தல்:
படிவம் - 4 டிமாண்டு நோட்டீஸ் சார்வு செய்தல்.
படிவம் - 5 ஜப்தி செய்யப்பட்டமைக்கான நோட்டிஸ் சார்வு செய்தல்
படிவம் -6 சொத்தின் நிர்வாகத்தினை பெற்றுக்கொண்டதற்குரிய அறிவிப்பு
படிவம் - 7 ஏல நோட்டீஸ் சார்வு செய்தல் மற்றும் ஏல  நடவடிக்கைகள்.
படிவம்  - 10 நிலத்தை ஏல விற்பனையில் வாங்கியதைப் பற்றிய அரசாங்க அறிவிப்பு.
சூரிய உதயத்திற்கு பின்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் ஜப்தி செய்யப்படவேண்டும்.
இச்சட்டப்பிரிவுகள்படி நடவடிக்கை எடுக்கும்போது ஏதேனும் முறைகேடுகள் மற்றும் சட்ட மீறல்கள் நிகழாமல் தவிர்ப்பதற்கான அறிவுரைகள் வருவாய் நிலை ஆணை - பாகம் - 2ல் (நிலை ஆணை 41 பத்தி 26-ன் கீழ் இணைப்பு - ஐஐஐ) அளிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம்  1864 வருவாய் நிலை ஆணை
தொகுதி ஐஐ
வ.நி.ஆ. 41-6

23.

முதியோர் உதவித்தொகை (65வயது)
ஆதரவற்ற விதவை உதவித்தொகை (வயது வரம்பு இல்லை) ஊனமுற்றோர் உதவித் தொகை(45வயது) கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை (30 வயது) நலிவடைந்த விவசாய தொழிலாளர் உதவித்தொகை
(60 வயது) 

கிராம  நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் பதிவேடு முகாமின் போது ஆய்வு செய்தல், உதவித்தொகை பெறுபவர்களை நேரில் சந்தித்து பதிவேட்டில் குறிப்பு எழுதப்பட வேண்டும்.

தொடர்புடைய அரசாணைகள்

24.

சாதிச் சான்று வழங்குதல்

தனிப்பதிவேடு கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது. வட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மனுக்களை பதிவு செய்து அறிக்கை அனுப்புவதை சரி பார்க்கப்பட வேண்டும.

தொடர்புடைய அரசாணைகள்

25.

நில  உரிமை விட்டு விடுதல்

வட்டாட்சியர் ஏற்பு செய்யலாம். பாதை அமைத்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரயத்துக்கள் தங்கள் நிலங்களின் உரிமையினை விட்டு விடும் நேர்வுகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏற்பு செய்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

வருவாய் நிலை ஆணை எண்:33.

26.

நிபந்தனை மீறப்பட்ட இனங்களில் நிலத்தினை மீட்டல்

ஒப்படை செய்யப்பட்ட அரசு நிலங்களில் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து,  மீண்டும் அரசு நிலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

வருவாய் நிலை ஆணை எண்:15-1 அரசாணை எண்:619, வருவாய் துறை நாள்:1.9.77

 கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.