புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
செயல்பாடுகள்

உங்களோடு சில வார்த்தைகள்
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே

வணக்கம். 6.10.1964 ல் துவக்கப்பட்ட நமது வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கடந்த 40 ஆண்டு காலமாக தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் நலனில் அக்கரை கொண்டு செயலாற்றி வருவதை தாங்கள் அறிவீர்கள். உறுப்பினர் நலன் காப்பது என்பது உறுப்பினர்களின் பணி பாதுகாப்பு, பணியிடம் ஏற்படுத்தி கொடுப்பது. பணி உயர்வுக்கு வழிவகை செய்வது. ஊதியமாற்றம், இன்னபிற பணபலன்களுக்குரிய சலுகைகளைப் பெற்று தருவது மட்டும் சங்கத்தின் நோக்கமல்ல. கருவறை முதல் கல்லறை வரை பொது மக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சேவை ஆற்றி வரும் நமது வருவாய்த்துறை சகோதரர்களின் பணி என்பது வெறும் ஒரு தொழிலாக இல்லாமல் சமூகப்பார்வையுடன் கூடிய சமுதாயப்பணியாக இருக்க வேண்டுமென்பதிலும் சங்கம் அக்கறை கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் மாறி வரும் சட்டம் மற்றும் விதி திருத்தங்களினால் வருவாய்த்துரையில் உள்ள பல்வேறு அடிப்படையான விவரங்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நமது சகோதரர்கள் அறிந்து கொண்டு அவர்களது பணித்திறனை மேம்படுத்திட வேண்டியது அவசியமாகிறது. இதனை ஓரளவுக்கேனும் சரி செய்திடும் நோக்கில் கிராம நிர்வாக அலுவலர்கள முதல் வட்டாட்சியர்கள் ஈராக அன்றாடம் தாங்கள் செய்து வரும் பணிகளை அட்டவணைப்படுத்தி அண்மைக்கால சட்டவிதி திருத்தங்களுடன் ஒரு கையோடு தயார்செய்திடவும் இது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தி நமது உறுப்பினர்களின் பணித்திறனை மேம்படுத்திட வேண்டுமென நமது மாவட்ட சங்கத்தில் முடிவெடுத்து ஒரு கையேட்டினை தயாரித்திடுமாறு சங்கம் எங்களை பணித்துள்ளது. அதனடிப்படையில் வருவாய் நிலை ஆணை, சட்ட தொகுப்பு நூல்கள் அண்மைக்கால அரசாணைகள் ஆகியவற்றில் இருந்து வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம், சமூக நல உதவித்திட்டங்கள் போன்றவை குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் சில விவரங்களைத்தொகுத்து அளித்துள்ளோம். வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்துப் பொருட்கள் குறித்தும் இதில் கொண்டு வர இயலவில்லை. மேலோட்டமான விவரங்களே இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இக்கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நூல்களின் துணைக்கொண்டு முழுமையாக விவரங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் முடிந்த வரை வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு சட்டவிதிகளை தெரிந்து கொண்டு செயல்படுத்துவதன் மூலம் நிர்வாகத்தினை செம்மைப்படுத்துவதோடு நம்மை நாடிவரும் பொதுமக்களுக்கு தாமதமின்றி உதவிடும் வகையில், நமது செயல்பாடுகள் அமைந்திட இச்சிறு கையோடும், நமது சங்கத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பும் ஓரளவு பயன்தரும் என நாங்கள் நம்புகிறோம் இம்முயற்சிகளின் வெற்றி என்பது செயல்படுத்தவிருக்கின்ற உங்களது கையில்தான் உள்ளது. இக்கையேட்டில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டாலோ, முக்கியமான விவரங்கள் ஏதேனும் தெரிவிக்க விடுபட்டிருந்தாலோ திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக சங்கத்திற்கு தெரிவித்திடக்கேட்டுக்கொள்கிறோம்.

                                                                                                                                                                       வாழ்த்துக்களுடன்.....
    இர.கலியமூர்த்தி                                                                                                                                 டி.எஸ்.சௌரிராஜன்
   எஸ்.சுப்ரமணியன்                                                                                                                              க.பொன்னியின் செல்வன்மாவட்ட மையத்தின் பணிகள்
30-12-1996 அன்று சிறப்பு பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு எடுத்துக்கொண்டனர்.

2.1.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

6.1.1997 மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோருடன் சந்திப்பு. பழனி, ஒட்டன்சத்திரம் வட்டப்பிரிவினையினால் பறிக்கப்பட்ட 2 உதவியாளர்கள், 2 இளனிலை உதவியாளர் பணியிடங்கள் வழங்ககோரி, Chief minister, Revenue minister, Revenue secretary, C.R.A ஆகியோருக்கு Fax முறையீடு.

8.1.1997 ஊழியர் சந்திப்பு இயக்கம். திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நிலக்கோட்டை, நத்தம் கிளைகள்.

10.1.1997 நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுடன் சந்திப்பு, ரேசன் கடை ஆய்வு குறித்த பிரச்சனை, நத்தம் உறுப்பினர் திருமதி. லதா சர்வே பயிற்சி அக்பர் (ம) கிருஷ்ணன் பொங்கல் போனஸ்….. ஆகியவை குறித்து முறையீடு.

18.1.1997 சேலம் மத்திய செயற்குழுவில் பங்கேற்பு

20.1.1997 நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுடன் சந்திப்பு. outsting செய்யப்பட்ட 8 J.A - க்களுக்கு பணியிடம் பெற்று தரப்படும்.

27.1.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

30.1.1997 மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கட்டிடநிதி வசூல் பணி

31.1.1997 திண்டுக்கல் வட்ட அலுவலகத்தில் கட்டிடநிதி வசூல் பணி

5.2.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

6.2.1997 ஊழியர் சந்திப்பு இயக்கம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் கிளைகள்.

8.2.1997 தமிழ்நாடு கருவூலக்கணக்குத்துறை அலுவலர் சங்கத்துடன் (TASA) இணைந்து "Preperation of bills" "கருவூல அலுவலக நடைமுறைகள்" என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்பு.

25.2.1997 மாவட்ட செயற்குழு கூட்டம்

27.2.1997 --DRO, PA(G) ஆகியோருடன் மாவட்டப் பிரச்சனைகள் தொடர்பாக சந்திப்பு.

7.3.1997 TNROA கலைக்குழு அமைப்பாளர்கள் கூட்டம். 26.3.1997 கலைநிகழ்ச்சிகள்

10.3.1997 நேர்முக உதவியாளர் (பொது) கூடுதல் பொறுப்பில் இருந்த திரு.சுப்பையன் என்பவரது ஊழியர் விரோதபோக்கிற்கு எதிராக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கூட்டம். மாலை DRO உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் Revised Postings வெளியிட நிர்வாகம் ஒத்துக் கொண்டது.

11.3.1997 வேடசந்தூர் கிளைப்பொதுக்குழுவில் பங்கேற்பு.

13.3.1997 நிலக்கோட்டை கிளைப்பொதுக்குழுவில் பங்கேற்பு

14.3.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

17.3.1997 நத்தம் கிளைப்பொதுக்குழுவில் பங்கேற்பு

19.3.1997 பழனி கிளைப்பொதுக்குழுவில் பங்கேற்பு

22.3.1997 ROA கலைக்குழு ஒத்திகை நிகழ்ச்சிகள்

26.3.1997 முன்னாள் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும், TNROA கலைக்குழுவின் இசை நாட்டிய நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

3.4.1997 DRO வுடன் சந்திப்பு . 3/97 சம்பளம் General Section ஊழியர்களுக்கு வழங்கப்படாதது, OA ‘s Seniority மற்றும் பல பிரச்சனைகள் குறித்து முறையீடு.

9.4.1997 திண்டுக்கல் வட்ட அலுவலகம் (ஜாமபந்தி) திரு. P.C.செல்வராஜ், செக் மெமோ பார்க்ககூடாது என கி.நி.அலுவலர்கள் வற்புறுத்தல். திண்டுக்கல் கோ.ஆ.த.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கப்பட்டது.

17.4.1997 புதிய நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுடன் சந்திப்பு

21.4.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

26.4.1997 கட்டிடக்கடன் தொடர்பாக முன்னாள்- இந்நாள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்.

28.4.1997 அலுவலக உதவியாளர் N.பெத்தனன் என்பவரது பிரச்சனை தொடர்பாக நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் முறையீடு.

30.4.1997 மாநிலத்தலைவர், திரு.P.இராமு வருகை திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நிலக்கோட்டை வேடசந்தூர் பழனி ஆகிய கிளைகளில் சங்கக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள். ஒட்டன்சத்திரம் HQDT திரு.சதாசிவம் அவர்களுடன் தகராறு செய்த கிராம நிர்வாக அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க பழனி கோட்டாட்சியர் அவர்களிடம் முறையீடு அளிக்கப்பட்டது.

13.5.1997 திரு.பெ.சந்திரசேகரன் எல்' தலைமை உதவியாளரிடம் SDC திரு.கிருஷ்ணன் தவறான முறையில் பேசியது. SDC யிடம் பேச்சு வார்த்தை. மாவட்ட செயற்குழு

14.5.1997 குடிமைப்பொருள் பணியிடங்களை வருவாய்த்துறையிலிருந்து பிரிப்பதை தடுத்து நிறுத்துவது. உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளுக்காக மாவட்டம் முழுமையும் 8 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்.

16.5.1997 திரு.சந்திரமௌலி ஐ.ஏ.எஸ்., மாவட்ட ஆட்சியர் அரசியல் நிர்பந்தம் காரணமாக மாறுதல் அரசியல் தலையீட்டை கண்டித்து TNRDOA வுடன் இணைந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

19.5.1997 மாநில அறைக்கூவலுக்கு ஏற்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாவட்ட பேரணி

23.5.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

24.5.1997 கோவையில் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு.

30.5.1997 DRO, PA(G) யுடன் சந்திப்பு மாவட்டப்பிரச்சனைகள்

9.6.1997 PA(G) யுடன் சந்திப்பு மாவட்ட பிரச்சனைகள்

10.6.1997 மாநில மைய அறைகூவலுக்கு ஏற்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து அனைத்து கிளைகளிலும் மாலை நேர தர்ணா.

11.6.1997 DRO வுடன் சந்திப்பு மாவட்டப்பிரச்சனைகள். திரு.கிருஷ்ணன் HQDT மனு தொடர்பாக முறையீடு

13.6.1997 பழனி கோட்டாட்சியரை வேடசந்தூரில் சந்திப்போம். ஊழியர் விரோத செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள பேச்சுவார்த்தை.

30.6.1997 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விக்ரம் கபூர், IAS அவர்களுடன் சந்திப்பு . மாவட்ட பிரச்சனைகள்

1.7.1997 ஊழியர் சந்திப்பு இயக்கம் : வட்ட அலுவலகங்கள் திண்டுக்கல்.

2.7.1997 ஊழியர் சந்திப்பு : வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை கிளைகள்

3.7.1997 ஊழியர் சந்திப்பு : நத்தம் கிளை

7.7.1997 ஊழியர் சந்திப்பு : கொடைக்கானல் கிளை

29.7.1997 திரு.பாலசுப்பிரமணியன் து.வ.ஆ. இல்லத்தில் நகை திருடுபோனது தொடர்பாக நிலக்கோட்டை DSPயிடம் முறையீடு.

1.8.1997 மாவட்ட ஆட்சித்தலைவருடன் சந்திப்பு. மாவட்டப்பிரச்சனைகள்

6.8.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்.

13.8.1997 PA(G)யிடன் சந்திப்பு. மாவட்ட பிரச்சனைகள் வேலுநாச்சியார் வளாக அலுவலர்கள் குடியிருப்புகளில் A,B பிளாக்குகளுக்கு மின்வசதி குடிநீர் வசதி கோரி மாவட்ட ஆட்சித்தலைவர்க்கு மூறையீடு கடிதம். வேலுநாச்சியார் வளாகத்துக்கு கூடுதல் பஸ்வசதி கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு முறையீடு கடிதம்.

16.8.1997 திருச்சி மத்திய செயற்குழுவில் பங்கேற்பு

24.6.1997 ஒட்டன்சத்திரம் கிளைக்கு பயணம். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, மாற்று இடம் வழங்கும் பணியில் உள்ளுர் அரசயல்வாதிகள் வருவாய்த்துறை ஊழியர்களுடன் மோதல் தொடர்பாக பொதுக்குழு.

26.8.1997 ஒட்டன்சத்திரம் கிளைப்பிரச்சனை தொடர்பாக DRO விடம் முறையீடு. நடந்த தவறுகளுக்கு MLA வருத்தம் தெரிவித்ததால் இயக்க நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

1.9.1997 PA(G)யுடன் சந்திப்பு. மாவட்டப் பிரச்சனைகள்

4.9.1997 மாவட்ட செயற்குழு

9.9.1997 மாவட்டப் பேரவை, மாநில செயலாளர் திரு.டியூக் பொன்ராஜ் வருகை.

23.9.1997 சபா நாயகம் குழுவின் பாதகமான பரிந்துரைகள் அமுல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாவட்டப்பேரணி

26.9.1997 நில எடுப்பு பணிகளுக்கு போதிய இடங்கள் வழங்காததே ஜப்தி நடவடிக்கைகளுக்கு காரணம் என வலியுறுத்தி தினமணி, தினமலர் நாளிதழ்களில் அறிக்கை

27.9.1997 நத்தம் கிளை சுதந்திர தின பொன்விழா மாநாடு பங்கேற்பு. மாநில பொதுச்செயலாளர் திரு.கே.ராஜ்குமார் வருகை.

22.10.1997 DRO, Pa(G) யுடன் சந்திப்பு. மாவட்டப் பிரச்சனைகள்

15.11.1997 திருவண்ணாமலையில் மத்திய செயற்குழு

19.11.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

20.11.1997 SSPக்கு எதிராக தந்தி இயக்கம்

25.11.1997 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

27.11.1997 SSP க்கு எதிராக அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டங்கள்

1.12.1997 DRO விடம் OA’S பிரச்சனை தொடர்பாக பெருந்திரள் முறையீடு

5.12.1997 DRO யுடன் சந்திப்பு. மாவட்டப் பிரச்சனைகள்

11.12.1997 ஒட்டன்சத்திரம், பழனி கிளைகளில் சந்திப்பு இயக்கம்.

16.12.1997 நத்தம், நிலக்கோட்டை கிளைகளில் சந்திப்பு இயக்கம்.

18.12.1997 வேடசந்தூர் கிளை சந்திப்பு இயக்கம்.

20.12.1997 நிலக்கோட்டை சுதந்திரதின பொன்விழா மாநாடு மாநில மாநிலத்தலைவர் SSபங்கேற்பு.

23.12.1997 கொடைக்கானல் கிளை சந்திப்பு இயக்கம்

5.1.1998 ஊழியர் பிரச்சனை தொடர்பாக AC யுடன் சந்திப்பு

6.1.1998 மாவட்டப்பேரவை, மாநில தலைவர்கள் S.சுடலையாண்டி மாநில துணைத்தலைவர் திரு.கலியமூர்த்தி, மாநிலச்செயலாளர் S.கண்ணன் பங்கேற்பு.

7.1.1998 Hs(G) மாவட்டப்பிரச்சனைகள்

8.1.1998 மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு. மாவட்ட பிரச்சனைகள். மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 9.1.1998 வேலைநிறுத்த பிரச்சார இயக்கம், திண்டுக்கல் T.O., RDO., வேடசந்தூர், நத்தம் கிளைகள்.

10.1.1998 வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்

12.1.1998 வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் ஒட்டன்சத்திரம், பழனி நிலக்கோட்டை கிளைகள்

13.1.1998 திண்டுக்கல் பகுதி அலுவலங்களில் பிரச்சார இயக்கம்.

22.1.1998 கொடைக்கானல் பொதுக்குழுவில் பங்கேற்பு

26.1.1998 பழனி எம்.எல்.ஏ. பழனி வட்டாட்சியருடன் தகாத முறையில் பேசியது. Fax to cheif minister, Revenue Minister, Revenue secretary, CRA, எம்.எல்.ஏ., அறிக்கைக்கு மறுப்பறிக்கை.

Fax to chief minister Revenue minister secretary, CRA, எம்.எல்.ஏ., அறிக்கைக்கு மறுப்பறிக்கை 27.1.1998 பழனி பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சிதலைவர், DRO வுடன் சந்திப்பு பழனி பொதுக்குழுவில் பங்கேற்பு

4.2.1998 பழனி பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

5.2.1998 பழனி பிரச்சனை தொடர்பாக DRO வுடன் சந்திப்பு. மாலை பழனி கூட்டத்தில் பங்கேற்பு.

6.2.1998 திண்டுக்கல் DSO திண்டுக்கல் தாசில்தார் திரு.புலமாடன் அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட்டது.

16.2.1998 HS(G) மாவட்டப்பிரச்சனைகள்.

17.2.1998 பதிவுறு எழுத்தர்கள் பிரச்சனை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்.

18.2.1998 ஊழியர் சந்திப்பு இயக்கம் : வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி நிலக்கோட்டை கிளைகள்.

19.2.1998 PA(G) மாவட்ட பிரச்சனைகள்.

5.3.1998 ஊழியர் சந்திப்பு இயக்கம், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி கிளைகளுக்கு பயணம்.

9.3.1998 ஒட்டன்சத்திரம் கிளை. அலுவலக உதவியாளர்களை வெளிநபர்கள் சிலர் தாக்கியதாக புகார் வட்டாட்சியருடன் சந்திப்பு.

12.3.1998 கொடைக்கானல் கிளை குண்டுப்பட்டி பிரச்சனை- கொடைக்கானல் G.B யில் பங்கேற்பு.

13.3.1998 PA(G) மாவட்ட பிரச்சனைகள்.

18.3.1998 திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் நிரஞ்சன் மார்டின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

27.3.1998 N. வரதராசன் (ம) Telex Operator ஆறுமுகம் தொடர்பான பிரச்சனை ஒட்டன்சத்திரம் தாசில்தார் (ம) Elec. DT சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்

30.3.1998 DRO,PA(G). மாவட்டப்பிரச்சனைகள்

கடமைகளும் பொறுப்புகளும்
நமது சங்கம்

tnroa

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.