புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
உறுப்பினர் சேர்க்கை










2003 மற்றும் 2004ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை முழுமையாக முடிக்கப்பட்டது. 2005ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை வருமாறு.

வ.எண் வட்டத்தின் பெயர் மொத்த உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள்
1. நிலக்கோட்டை 51 51
2. நத்தம் 26 26
3. பழனி 51 51
4. ஒட்டன்சத்திரம் 27 27
5. வேடசந்தூர் 39 39
6. கொடைக்கானல் 30 227
7. தலைமையிடம் 30 152
மொத்தம் 451 376

பொது வேலை நிறுத்திற்கு பின் அரசின் அடக்குமுறை காரணமாக ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்ட சூழ்நிலையில் திண்டுக்கல் N.S கம்யூனிட்டி ஹாலில் மத்திய செயற்குழு கூட்டம் மாவட்ட மையத்தால் சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை சிறப்பாக நடத்திட உதவி புரிந்த மாநிலச்செயலர் திரு. எஸ். கண்ணன் முன்னாள் மாவட்டத்தலைவர் திரு. இரா.ஆறுமுகம் நிழல்குழுத்தலைவர் திரு.எஸ்.சுகுமார் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் பங்கேற்று ஆகியோரது நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.