புதிய செய்தி |
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திண்டுக்கல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
அரசு அங்கீகார ஆணை எண் : 2141 {பணி. அ.}
துறை நாள் : 06/10/1966
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
பிச்சாண்டி பில்டிங்ஸ் | திண்டுக்கல் -624 001
ஏழாவது மாவட்ட மாநாடு

நிகழ்ச்சி நிரல்
நாள் 28.06.2014, சனிக்கிழமை
இடம் மாவட்ட மைய கட்டிடம், பிச்சாண்டி பில்டிங்ஸ், திண்டுக்கல்.
நேரம் காலை 10.00 மணி

அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு,

வணக்கங்கள், நமது சங்கத்தின் மாவட்ட மாநாட்டிற்கு தங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் வருவாய்த்துறையின் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைவரின் அயராத உழைப்பு உள்ளது என்பது மாண்புமிகு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் நன் கு தெரியும். கிராம உதவியாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை உள்ள வருவாய்த்துறை கட்டமைப்பு மக்களோடு மக்களாக, நெருங்கி இணக்கமாக இருந்து மக்கள் பிரச்சனைகளை கையாண்டு தீர்வு காண்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

ஆனால் வருவாய்த்துறை ஊழியர்யின் கோரிக்கைகள் மட்டும் கோரிக்கை மனுக்கள் நிலையிலேயே உள்ளன. அவற்றினை அரசாணைகளாக மாற்றம் செய்து பெறுவதற்கு போராட்டம், ஒன்றுபட்ட இயக்க நடவடிக்கைகளை திட்டமிடவும், நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவும் ஒன்று கூடுவோம்.

இவண்
மாவட்ட நிர்வாகிகள்

நிகழ்ச்சி நிரல்

சங்கக் கொடியேற்றுதல்

தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துதல்

இரங்கல் தீர்மானம்

நிகழ்ச்சி நிரல்
தலைமையுறை திரு. இரா. மங்கள பாண்டியன் மாவட்டத்தலைவர்
வரவேற்புரை திரு. ஏ.காஜாமைதீன் மாவட்ட இணைச்செயலாளர்
செயலாளர் அறிக்கை திருமதி. ம.சுகந்தி மாவட்ட செயலாளர்
பொருளாளர் அறிக்கை திரு. பெ.வீரபத்திர போஸ் மாவட்ட பொருளாளர்
துவக்க உரை திரு. த.சிவஜோதி மாநில பொதுச்செயலாளர்

வாழ்த்துரை
திரு. R.முருகேசன் மாவட்டத்தலைவர், கிராம நிர்வாக அலுவலர் சங்கம்
திரு. R.மகேந்திரன் மாநில துணைத்தலைவர், நில அளவை ஒன்றிப்பு
திரு. எஸ்.முபாராக் அலி மாவட்டச்செயலாளர்
திரு. மு.வீரகடம்ப கோபு மாவட்டத்தலைவர்
திரு. R.ஆறுமுகம் முன்னாள் மாவட்டத்தலைவர்
திரு. R.செல்வராஜ் முன்னாள் மாவட்டச்செயலாளர்

பிரதிநிதிகள் விவாதம்

மாவட்டச்செயலாளர் தொகுப்புரை

மாவட்டப்பொருளாளர் தொகுப்புரை

உணவு இடை வேளை

வருவாய்த்துறையின் மாஸ்டர் வாய்ஸ் இன்னிசை நிகழ்ச்சி

தீர்மானங்கள் முன்மொழிதல்
திரு.என்.கே.சரவணன் நகர் கிளைத் தலைவர், திண்டுக்கல்
திரு. P.பூமிநாதன் வட்டக் கிளைத் தலைவர், நத்தம்
திரு. மணிகண்டன் வட்டக் கிளைத் தலைவர், நிலக்கோட்டை
திரு. K.சென்னாக்கிருஷ்ணன் வட்டக் கிளைத் தலைவர், ஆத்தூர்
திரு. எஸ்.நாகராஜன் வட்டக் கிளைத் தலைவர், பழனி
திருமதி. S.செந்தமிழ்செல்வி வட்ட கிளைத் தலைவர், ஒட்டன்சத்திரம்
திருமதி. தமிழரசி வட்டக் கிளைத் தலைவர், வேடசந்தூர்
திரு. A.மகுடீஸ்வரி வட்டக் கிளைத் தலைவர், கொடைக்கானல்

சிறப்பு கருத்தரங்கம்

"தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்"
தோழர். எஸ்.சிவக்குமார்

முன்னாள் மாநிலத் தலைவர், TNROA மாநில துணைத்தலைவர், TNGEA தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனம்

"விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை"
எஸ்.கண்ணன்

முன்னாள் மாநிலச்செயலாளர், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம்

திரு.வெங்கடாசலம் பயிலரங்கம் திறப்பு
திரு.ந.வெங்கடாசலம் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சித் தலைவர், திண்டுக்கல்

இலவச பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பாராட்டுதல் 2012-2013, 2013-2014 ஆம் ஆண்டுகளில் 10.12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் பரிசுகள் வழங்கி பாராட்டுதல்

நன்றியுறை : திரு. எஸ். சரவணன், மாவட்டத் துணைத் தலைவர்

நமது சங்கம்

பதிவிறக்கம்


  தமிழ் மொழி, தமிழர் நாகரிகம் தமிழ்ப் பண்பு, இவற்றின் நிலைக்களம், மதுரை மாவட்டம், நானிலங்களில் குறிஞ்சி முல்லை மருதம் என்னும் மூவகை நிலங்களைக் கொண்ட மாவட்டம், மதுரை மாவட்டம்.

  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மக்கள் தொகையாலும், நிலப்பரப்பாலும் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகும். சென்னைக்கு அடுத்த படியாக மதுரை மாநகர், மாநகராட்சியாக 1974ல் அறிவிக்கப்பட்டு உயர்ந்தது.

  ஒரு மாவட்டம் ஆட்சி நலனுக்கேற்ப பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கோட்ட ஆட்சியர்களால் நிர்வகிக்கப்பட்ட போதிலும், பரவலான ஒரே ஆட்சித் தலைவர் பொறுப்பில் நிர்வாகம் விரைந்து செயல்பட முடியாத நிலை உருவாயிற்று.

  எனவே மாவட்டங்களை ஆட்சி நலனுக்காக பல மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்க திட்டமிடப்பட்டது.

  மாவட்ட பிரிவினைகள் நிர்வாக வசதிகளை முன்னிட்டு அமைக்கப்படுகின்றன. என்றாலும் அதனால் நிதி, நிதீ, நிர்வாக நலன், கல்வி, தொழில் ஆகியவை சிறந்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

  அத்தகைய முயற்சியில் திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுர மாவட்டம், மதுரை மாவட்டம் ஆகிய மூன்றும் பிரிக்கப்பட்டன.